சிவ்னேரி குகைகள்

ஆள்கூறுகள்: 19°11′56″N 73°51′29″E / 19.1990°N 73.8580°E / 19.1990; 73.8580
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவ்னேரி குகைகள்
சிவ்னேரி, கிழக்கு பகுதியில் உள்ள குகை குழு 2. ஜூன்னார், இந்தியா.
சிவ்னேரி குகைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
சிவ்னேரி குகைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
அமைவிடம்ஜூன்னார்
ஆள்கூறுகள்19°11′56″N 73°51′29″E / 19.1990°N 73.8580°E / 19.1990; 73.8580
நிலவியல்கருங்கல்

சிவ்னேரி குகைகள் (Shivneri Caves) கி.மு.முதலாம் நூற்றாண்டில் பௌத்த பிக்குகள் தோண்டிய செயற்கை குகைகள் ஆகும். ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த நகரங்களில் ஒன்றான இந்திய மாநிலமான மகாராட்டிரத்தின், புனே மாவட்டலுள்ள ஜூன்னார் என்ற இடத்திற்கு சுமார் 2 கிமீ தென்மேற்கில் சக்யத்ரி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலாத் தலமாகும். ஜுன்னார் நகரின் பிற குகைகளில் மன்மோடி குகைகள், லென்யாத்திரி மற்றும் துளஜா குகைகள் ஆகியன அடங்கும்.

விளக்கம்[தொகு]

சிவ்னேரி பௌத்த மத குகைகள் மராட்டியப் பேரரசர் சிவாஜியின் கோட்டையின் அருகே அமைந்துள்ள சிவன் கோட்டையின் அருகே அமைந்துள்ளது. இது கி.மு. முதலாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோண்டப்பட்ட 60 குகைகள் அடங்கிய ஒன்றாகும்.[1] கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இந்த குகைகள் பௌத்த நடவடிக்கைகளில் ஒரு வளமான மையமாக இருந்தன.[2] குகைகள் அடிப்படையில் விஹாரைகள் அல்லது சிறிய அறைகள் மூலம் செய்யப்படுகின்றன, ஆனால் அவற்றில் சைத்தியங்களும் அடங்கும்.[3] சிவ்னேரி மலையில் மேற்கு-கிழக்கு-தெற்கு ஆகிய திசைகளிலும் ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்களைப் போல குகைகள் சிதறி கிடக்கின்றன.[4] இந்தக் குகைகள் மலை முழுவதும் சிதறி, பல குழுக்களாக வகைப்படுத்தப்படுகின்றன: கிழக்குப் பிரிவு (1, 2 மற்றும் 3), மேற்குக் குழு மற்றும் தென் குழு ஆகியவற்றை மிக முக்கியமான குகைகளாக நாம் குறிப்பிடலாம்:

  • குகை 26 - இரண்டு கதை புத்த விகாரம்
  • குகை 45 - பரா-கோத்ரி எனப்படும் ஒன்று, இது புத்த பிக்குகள் தங்கிய 12 அறைகள் உள்ளது.

தெற்கு முகம்: கிரேட் சைத்தியா (குகை 47)[தொகு]

குகை 47 சிவ்னேரி மலையின் தெற்கு பகுதியில் உள்ளது.( 19°11′40″N 73°51′23″E / 19.194535°N 73.856492°E / 19.194535; 73.856492) இது குழுவின் மிகவும் குறிப்பிடத்தக்க சைத்தியத்தில் ஒன்றாகும். நாசிக்கில் (பாண்டவர் குகைகள்) காணப்படுவதைப் போலவே இரண்டு வட்ட தூண்கள் மேல்பகுதியில் தரமாக இணைக்கப்பட்டு உள்ளது. மேலும் மண்டபம் 9.9x6.5 மீ அகலமும், மற்றும் 5.8 மீ உயரமும் கொண்டது. இந்த குகையில் இந்த குகையின் மேல்பகுதி மிகச்சிறிய அழகான தண்டவாளம் போன்ற பாணியில் ஸ்தூபம் (தாது கோபுரம்) அமைந்துள்ளது. இது ஒரு குடை போன்ற தோற்றத்தைத் தருகிறது. கூறைகள் ஆரஞ்சு, பழுப்பு மற்றும் வெள்ளை போன்ற அடர்த்தியான நிறங்கள் அடங்கிய வண்ணச் சதுரங்களில் வர்ணங்களால் பூசப்பட்டிருக்கிறது,.[5]

சைத்தியத்தின் வெளிப்புற முகப்பில் இதை உருவாக்க உதவி செய்த வணிகர்களின் பெயர்கள் கல்வெட்டில் உள்ளது:

யவனர்களின்ன் கல்வெட்டுகள்[தொகு]

யவன அரசன் முதலாம் மெனந்தரின் உருவப்படம்

யவனர்கள் (இந்தோ கிரேக்கர்கள்) செய்த இரண்டு பெளத்த கல்வெட்டுகள் சிவ்னேரியில் காணப்படுகின்றன.[6] அவர்கள் இந்தியாவில் பௌத்தத்துடன் கிரேக்க வம்சாவளியை ஏற்படுத்தினர், அதேபோல் கி.மு .முதலாம் நூற்றாண்டில் இந்தியாவில் கிரேக்கர்களின் படிப்படியான வருகை மற்றும் தொடர்ச்சியான இருப்பு ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது.[6]

குகை 54 யவனர்களின் கல்வெட்டு
யவன கல்வெட்டு, குகை 54

கல்வெட்டு "யவனசா" என்ற வார்த்தைக்கு முன்னர் சுவசுத்திக்கா என்ற பௌத்த சின்னம் தொடங்குகிறது.

குகை 67 யவனர் கல்வெட்டு
யவன கல்வெட்டு, குகை 67.
பிராமியில் "யா-வா- னா-ச" என்ற வார்த்தை

இந்த இரண்டாவது கல்வெட்டில், திரிரத்னா மற்றும் ஸ்வஸ்திகாவின் புத்த சின்னங்கள் (தலைகீழாக) முதல் வார்த்தை "யவனசா" இருபுறமும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

யவனர்களின் கல்வெட்டுகளில் காணப்படும் நன்கொடைகளைப் பற்றிய தவல்கள் கர்லா குகைகள், பாண்டவர் குகைகள் மற்றும் மன்மோடி குகைகளிலும் காணப்படுகின்றன.[7]

குறிப்புகள்[தொகு]

 1. Ahir, D. C. (2003). Buddhist sites and shrines in India : history, art, and architecture (1. ). Delhi: Sri Satguru Publ.. பக். 192. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8170307740. 
 2. Brancaccio, Pia (2010). The caves at Aurangabad : Buddhist art in transformation. Leiden: Brill. பக். 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9004185259. 
 3. Te-kʻun, Cheng (1983). Studies in Chinese art. Hong Kong: Chinese University Press. பக். 212. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9622012795. https://archive.org/details/studiesinchinese0000zhen. 
 4. Buddhist Cave Temples Of India, by RS Mauchope, 1933 [[iarchive:in.ernet.dli.2015.279744|]]
 5. James Fergusson and James Burgess (1880) The cave temples of India
 6. 6.0 6.1 The Greek-Indians of Western India: A Study of the Yavana and Yonaka Buddhist Cave Temple Inscriptions, 'The Indian International Journal of Buddhist Studies', NS 1 (1999-2000) வார்ப்புரு:P.
 7. The Greek-Indians of Western India: A Study of the Yavana and Yonaka Buddhist Cave Temple Inscriptions, The Indian International Journal of Buddhist Studies, NS 1 (1999-2000) pp83-109


வார்ப்புரு:புனே மாவட்டம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவ்னேரி_குகைகள்&oldid=3718351" இலிருந்து மீள்விக்கப்பட்டது