துளஜா குகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துளஜா குகைகள் (Tulja Caves), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தின் ஜூன்னாரிலிருந்து மேற்கே 4 கிமீ தொலைவில் உள்ள சிவனேரி மலையில் உள்ள பௌத்தக் குடைவரைகள் ஆகும்.[1] துளஜா குகை அருகே அமைந்த பிற குடைவரைகள் மன்மோடி குகைகள், சிவனேரி குகைகள் மற்றும் லெண்யாத்திரி ஆகும். துளஜா குகைகள், புனே நகரத்திலிருந்து 95 கிமீ தொலைவில் உள்ளது.

துளஜா குகைகளில் குடைவரை ஒன்றில், வட்ட வடிவ சைத்திய மண்டபத்தில் உள்ள தூபியைச் சுற்றிலும் 12 எண்கோண வடிவ தூண்களைக் கொண்டது.[2]

கிமு 50ல் நிறுவப்பட்ட துளஜா குகைகள், 11 பௌத்தக் குடைவரைகளைக் கொண்டது. தற்போது குடைவரை எண் 4ல் துளஜா தேவியின் சிலை நிறுவப்பட்டு, இந்துக்களின் குகையாக மாற்றப்பட்டுள்ளது.[1][3]

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tulja Lena
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

19°12′30″N 73°50′08″E / 19.2083°N 73.8356°E / 19.2083; 73.8356ஆள்கூறுகள்: 19°12′30″N 73°50′08″E / 19.2083°N 73.8356°E / 19.2083; 73.8356


"https://ta.wikipedia.org/w/index.php?title=துளஜா_குகைகள்&oldid=3494187" இருந்து மீள்விக்கப்பட்டது