கொண்டன குகைகள்
கொண்டன குகைகள் (Kondana Caves) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின், புனே மாவட்டத்தின், லோணாவ்ளா எனும் மலைப்பகுதிக்கு வடக்கே 33 கிமீ தொலைவிலும், கர்லா குகைகளிலிருந்து வடமேற்கே 16 கிமீ தொலைவிலும் அமைந்த 16 பௌத்தக் குடைவரைகளைக் கொண்ட குகைகளாகும்.[1][2] கொண்டன குகைகள் நான்கு குடைவரைகளுடன் கூடியது.
இக்குடைவரையின் சைத்தியத்தின் முற்புறத்தில், இப்பௌத்தக் குடைவரைகளை நிறுவுவதற்கு உதவிய கொடையாளர்களின் பெயர்கள் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளது.[1]
கொண்டன குகை எண் ஒன்றின் சைத்தியத்தின் நுழைவு வாயில் அழகிய பெரிய வளைவு கொண்ட சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ளது. குகை எண் 2ல் விகாரை அமைந்துள்ளது. குகை எண் 3ல் பிக்குகள் தங்கும் சிற்றறைகளுடன் கூடியது. குகை எண் 4ல் பிக்குகள் தங்கும் ஒன்பது சிற்றைறைகளும், மழைநீர் சேமிக்கும் அமைப்பும் உள்ளது.
படக்காட்சிகள்
[தொகு]-
கொண்டன குகை சைத்தியத்தின் நுழைவாயில்
-
சைத்தியத்தின் தூபி
-
சைத்தியத்தின் சிற்பங்கள்
-
சிற்பத்தின் தலை அருகில் கல்வெட்டுக் குறிப்புகள்
-
விகாரையின் உட்புறம்
-
விகாரையின் தாழ்வாரம்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Ahir, D. C. (2003). Buddhist sites and shrines in India : history, art, and architecture (1. ed.). Delhi: Sri Satguru Publ. p. 197. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8170307740.
- ↑ Kapadia, Harish (2003). Trek the Sahyadris (5. ed.). New Delhi: Indus Publ. p. 122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8173871515.
வெளி இணைப்புகள்
[தொகு]
வார்ப்புரு:புனே மாவட்டம்