ஆளந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆளந்தி (आळंदी)
—  city  —
ஆளந்தி (आळंदी)
இருப்பிடம்: ஆளந்தி (आळंदी)
, மகாராட்டிரம் , இந்தியா
அமைவிடம் 18°40′37″N 73°53′48″E / 18.677062°N 73.896600°E / 18.677062; 73.896600ஆள்கூறுகள்: 18°40′37″N 73°53′48″E / 18.677062°N 73.896600°E / 18.677062; 73.896600
நாடு  இந்தியா
மாநிலம் மகாராட்டிரம்
மாவட்டம் புனே மாவட்டம்
ஆளுநர் பகத்சிங் கோசியாரி
முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே
மக்களவைத் தொகுதி ஆளந்தி (आळंदी)
மக்கள் தொகை 17,561 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


577 மீட்டர்கள் (1,893 ft)

ஆளந்தி (மராத்தி: आळंदी) இந்தியா மகாராட்டிரம் புனே மாவட்டத்திலுள்ள கேத் தாலுகாவில் உள்ள நகராட்சி மன்றம் கொண்ட ஊராகும். இவ்வூர் புனேவிற்கு கிழக்கில் 25 km (16 mi) தொலைவில் இந்திராணி ஆற்றினருகேவுள்ளது. (18°40′37.42″N 73°53′47.76″E / 18.6770611°N 73.8966000°E / 18.6770611; 73.8966000[1]) இது சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 577 மீ உயரத்தில் உள்ளது.

மக்கள் தொகை[தொகு]

இந்தியா மக்கள் தொகை 2001 கணக்கின் படி[2] ஆளந்தியில் 17,561 பேர் உள்ளனர். அதில் 56% ஆண்களும் 44% பெண்களும் உள்ளனர். பிராந்திய மொழி மராத்தி ஆகும். 73% கல்வியறிவு பெற்று தேசிய சராசரி 59.5% விட அதிகமாகவுள்ளனர்; இதில் 82% ஆண்களும் 68% பெண்களும் அடங்கும். ஆறு வயதிற்கும் கீழ் உள்ளவர்கள் 13% பேர் உள்ளனர்.

அருகே உள்ள தலங்கள்[தொகு]

 1. ஞானி ஞானேஷ்வர் சமாதி- ஞ்யானேஷ்வர், பகவத் கீதையை மராத்தியில் மொழி பெயர்த்தப்பின் இங்குள்ள சித்தேஷ்வர் கோயில் முன் சமாதியடைந்தார். ஒவ்வொரு கார்த்திகை மாதத்திலும் இங்கு வெகுவிமர்சியாக விழா கொண்டாடுகிறார்கள்
 2. சித்தாபெட்
 3. ஜலராம் கோவில்
 4. ஞானேஷ்வர் சுவர்
 5. துக்காராம் சமாதி
 6. சாம்பாஜி ராஜே போஸ்லே சமாதி

கல்வி நிலையங்கள்[தொகு]

 • ஸந்த் ஞ்யானேஷ்வர் வித்யாலயா
 • எம்.ஐ.டி. புனே, மகாராஷ்டிர அகெடமி ஆஃப் இஞ்ஜினியரிங்
 • ஷரத்சந்திர பவார் சித்ரகலா மகாவித்யாலயா

மேற்கோள்கள்[தொகு]

 1. Falling Rain Genomics, Inc - Alandi
 2. "மக்கள் தொகை 2001". 2004-06-16 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2004-06-16 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆளந்தி&oldid=3574824" இருந்து மீள்விக்கப்பட்டது