அம்பேகாவ் தாலுகா
அம்பேகாவ் தாலுகா | |
---|---|
தாலுகா | |
![]() | |
ஆள்கூறுகள்: 19°2′5″N 73°50′11″E / 19.03472°N 73.83639°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | புனே மாவட்டம் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 235,972 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் சுட்டு எண் | 411046 |

அம்பேகாவ் தாலுகா (Ambegaon taluka) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தின் 14 தாலுக்காக்களில் ஒன்றாகும்.[1] புனே நகரத்திற்கு வடகிழக்கில், மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியில் அமைந்த அம்பேகாவ் தாலுகாவில் பாயும் பீமா ஆற்றின் கரையில் 12 சோதிர்லிங்க தலங்களில் ஒன்றான பீமாசங்கர் கோயில் உள்ளது.
அம்பேகாவ் தாலுகாவில் மாஞ்சர் எனும் சிற்றூரும், 183 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது.[2]
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அம்பேகாவ் வருவாய் வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 2,35,972 ஆகும். அதில் ஆண்கள் 1,19,226 மற்றும் 116,746 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 979 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 24375 (10% ) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 82.94%. ஆக உள்ளது. இவ்வட்ட மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 9,757 மற்றும் 50,704 ஆக உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 223,726 (94.81%), இசுலாமியர் 7,029 (2.98%), பௌத்தர்கள் 3,743 (1.59%) மற்றும் பிறர் 0.27% ஆகவுள்ளனர்.[3] இவ்வருவாய் வட்டத்தில் பெரும்பான்மையோர் மராத்தி மொழி பேசுகின்றனர்.
பொருளாதாரம்[தொகு]
இத்தாலுகாவின் பொருளாதாரம் வேளாண்மையைச் சார்ந்துள்ளது. இத்தாலுகாவில் பீமா ஆறு பாய்கிறது.
பயிர் வகை | பரப்பளவு (ஹெக்டேர்) |
---|---|
மழைக்கால (கரீப்) பயிர்கள் | 2500 |
உருளைக் கிழங்கு | 3000 |
தக்காளி | 7500 |
பயறு வகைகள் | 1000 |
நிலக்கடலை | 1200 |
குளிர்கால பயிர்க்ள் | 1200 |
திராட்சை | 50 |
. தாலுகாவின் கிழக்குப் பகுதியில் கரும்பு அதிகம் பயிரிடப்படுகிறது |
எண்ணெய் வித்துகள் பிழியும் தொழிற்சாலைகள் இத்தாலுகாவில் அதிகம் உள்ளது. அண்மையில் பீமாசங்கர் சர்க்கரை ஆலை நிறுவப்பட்டுள்ளது. இத்தாலுகாவில் 197 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளது.
போக்குவரத்து[தொகு]
நாசிக் வழியாக புனே நகரத்தையும், துலே நகரத்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 60 அம்பேகாவ் தாலுகா வழியாகச் செல்கிறது.
