போர் தாலுகா
போர் தாலுகா | |
---|---|
மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் போர் தாலுகாவின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | புனே மாவட்டம் |
போர் தாலுகா (Bhor taluka) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தின் 14 தாலுக்காக்களில் ஒன்றாகும்.[1] போர் தாலுகாவின் நிர்வாகத் தலைமையிட நகரம் போர் நகரம் ஆகும். இத்தாலுகா போர் நகராட்சியும், 194 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது.[2]
வரலாறு
[தொகு]மராத்தியப் பேரரசில் 1627-ஆம் ஆண்டு முதல் போர் தாலுகாவின் பகுதிகள் போர் சமஸ்தானத்தில் இருந்தது. பின்னர் 1818-ஆம் ஆண்டு முதல் 1947-ஆம் ஆண்டு வரை பிரித்தானிய இந்தியாவில் சுதேச சமஸ்தானமாக இருந்தது. 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி போர் சமஸ்தானப் பகுதிகள், புனே மாவட்டத்தின் போர் தாலுகாவில் இணைக்கப்பட்டது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, போர் வருவாய் வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 186,116 ஆகும். அதில் ஆண்கள் 94,158 மற்றும் 91,958 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 977 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 20,599 (11%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 81.42%. ஆக உள்ளது. இவ்வட்ட மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 11,090 மற்றும் 5,414 ஆக உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 1,75,234 (94.15%), இசுலாமியர் 3,311 (1.78%), பௌத்தர்கள் 6,793 (3.65%) மற்றும் பிறர் 0.41% ஆகவுள்ளனர்.[3] இவ்வருவாய் வட்டத்தில் பெரும்பான்மையோர் மராத்தி மொழி பேசுகின்றனர்.