உள்ளடக்கத்துக்குச் செல்

லவாசா

ஆள்கூறுகள்: 18°24′19″N 73°30′23″E / 18.40528°N 73.50627°E / 18.40528; 73.50627
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லவாசா
தனியார் நகரம்
லவாசா மலைகளின் காட்சி
லவாசா மலைகளின் காட்சி
லவாசா is located in மகாராட்டிரம்
லவாசா
லவாசா
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் லவாசாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 18°24′19″N 73°30′23″E / 18.40528°N 73.50627°E / 18.40528; 73.50627
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்புனே
பரப்பளவு
 • மொத்தம்100 km2 (40 sq mi)
ஏற்றம்
630 m (2,070 ft)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்மராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
412107
இணையதளம்www.lavasa.com

லவாசா (Lavasa) (மராத்தி: लवासा) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்த லவாசா மலையில் உள்ள திட்டமிட்ட ஒரு தனியார் நகரம் ஆகும்.[1][2] லவாசா நகரத்தின் வடிவம் மற்றும் கட்டிடக் கலை நயம் இத்தாலி நாட்டின் போர்டோபினோ நகரம் போன்று கட்டப்பட்டுள்ளது. இத்தாலியின் போர்ட்பினோ நகரத்தின் தெருக்கள் மற்றும் கட்டிடப் பெயர்களே லவாசா நகரத்தின் தெருக்களுக்கும் மற்றும் கட்டிடங்களுக்கும் பெயரிடப்பட்டுள்ளது.

மலை மீதுள்ள லவாசா நகரம் 2500 ஏக்கர் பரப்பளவு கொண்டது என்றும்[1], சிலர் 8,000 ஏக்கர் பரப்பளவு கொண்டது என்றும் கூறுகிறார்கள்[3] இந்நகரத்தின் கட்டுமானப் பொறுப்பை இந்துஸ்தான் கட்டுமான நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.[4] வனத்துறை அனுமதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலங்கள் கொள்முதல் மற்றும் நில ஆக்கிரமிப்புகள் போன்ற பல சர்ச்சைகளால் லவாசா நகரத்தின் கட்டுமானம் இன்றளவும் முற்றுப் பெறவில்லை.[1][5][6]

2010-ஆம் ஆண்டின் இறுதியில் இந்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், சுற்றுச் சூழலுக்கு தீங்கான லவாசா நகரத்தின் கட்டுமான திட்டத்தை நிறுத்த ஆணையிட்டது.

2011-ஆம் ஆண்டின் இறுதியில் இந்த ஆணை திரும்பப் பெறப்பட்டது.[7] லவாசா நகரக் கட்டுமான திட்டத்தின் பரப்பளவு சுருக்கப்பட்டது. லவாசா நகர திட்டத்திற்கான மூலதனம் பெறுவதற்கு பங்குச் சந்தையில் பங்குகளை வெளியிடும் திட்டமும் கைவிடப்பட்டது.[7]

வரலாறு

[தொகு]
போர்ச்சூன் ஹோட்டல், லவாசா

இந்தியாவின் முதல் தனியார் மலைவாழிட நகரமான லவாசா நகரம் விளங்குகிறது.[8] இத்தனியார் நகரத்தை அஜித் குலாப்சந்த் நிறுவனம் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ளது.[9] இத்தாலி நாட்டின் மலைவாழிட நகரமான போர்ட்பினோ மாதிரியாகக் கொண்டு லவாசா நகரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.[10]

நிலம்

[தொகு]

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள முன்சி பள்ளத்தாக்கில் அமைந்த லவாசா நகரம், புனே நகரத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது..[11]

கட்டுமான முன்னேற்றங்கள்

[தொகு]

லவாசாவில் 5 நகரங்கள் கட்டத் திட்டமிடப்பட்டது. 2013-இல் இரண்டு நகரங்கள் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.[12]. மேலும் 2011-இல் நான்கு தங்கும் விடுதிகள் மற்றும் கடை வீதிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மற்றும்[13] லவாசாவில் துவக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.[14][14] இங்கு ஒரு மேலாண்மைக் கல்லூரி செயல்படுகிறது.[15]

நகர நிர்வாகம்

[தொகு]

2011-ஆம் வரை ஸ்காட் ரைட்டன் லவாசா நகர நிர்வாக அதிகாரியாக செயல்பட்டார்.[16]

விளையாட்டு வசதிகள்

[தொகு]

லவாசா தனியார் மலை நகரத்தில் கோல்ப், டென்னீஸ் மற்றும் கால்பந்து விளையாட்டு திடல்கள் உள்ளது.[17][18] மேலும் லவாசா மலையில் நீர் சறுக்கு விளையாட்டு வசதிகள் உள்ளது.

கேளிக்கைப் பூங்கா

[தொகு]

லவாசா நகரத்தில் 65 ஏக்கர் பரப்பில் ஒரு கேளிக்கைப் பூங்கா நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.[19]

பிற வசதிகள்

[தொகு]

உடல் நலத்திற்கும், உடல் கட்டுக்கோப்பை வளர்ப்பதற்கும் 200 ஏக்கர் பரப்பில் ஒரு மையமும்[20] மற்றும் மூலிகைச் செடிகளை வளர்ப்பதற்கான தோட்டமும் நிறுவப்பட்டுள்ளது.

பிணக்குகள்

[தொகு]

சுற்றுச் சூழல் சீர்கேடு

[தொகு]

மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச் சூழல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என இந்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வன அமைச்சகம் லவாசா நகர கட்டுமானத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க மறுத்தது.[1][21] லவசா நகரக் கட்டுமானத்தினால் மேற்கு தொடர்ச்சி மலையின் 325 காட்டுயிர்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.[22] 9 மலையை குடையவோ, வெட்டவோ கூடாது, குடியிருப்புகளின் சாக்கடை நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் நவம்பர் 2011-இல் லவாசா நகரக் கட்டுமானத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.[23]

நில ஆக்கிரமிப்பு

[தொகு]

உள்ளூர் மக்களும், மாநில அரசும் லவாசா நகர நிர்வாகம் நில ஆக்கிரமிப்புகளில் ஈடுப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினர். லவாசா நகர நிர்வாகம் 600 ஹெக்டேர் வேளாண் நிலத்தை உள்ளூர் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளதன் மூலம் அரசுக்கு வரவேண்டிய சொத்து பத்திரத் தாள் முத்திரை வரி ஏமாற்றப்பட்டுள்ளது என மகாராஷ்டிரா மாநில அரசின் சுற்றுப்புறச் சூழல் துறை அறிக்கை வெளியிட்டது. மேலும் லவாசா நிர்வாகம் 141 ஏக்கர் நிலத்தை மாநில அரசிடமிருந்து நீண்டகால குத்தகைக்கு எடுத்துள்ளதுடன், 98 ஹெக்டேர் நிலத்தை அனுமதியின்றி ஆக்கிரமித்துள்ளது.[24]

நீர் ஆதாரங்களை பயன்படுத்தல்

[தொகு]

புனே நகரத்திற்கு மாநகராட்சி வழங்கும் குடிநீரை லவாசா தனியார் நகரம் பெறுவதால் புனே நகரத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.[25]

கட்டுமானத்தை நிறுத்த ஆணை

[தொகு]

இந்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஆணையால் லவாசா நகரத்தின் கட்டுமானம் 2010 - 2011 ஆண்டுகளில் தடைப்பட்டது.[26]

9 நவம்பர் 2011-இல் மீண்டும் ல்வாசா நகரக் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.[27]

உறவினர்களுக்கு சலுகைகள்

[தொகு]

மகராட்டிரா மாநில அரசியல் சாணக்கியரான சரத் பவாரின் குடும்ப உறவினர்கள் சுற்றுப்புறச் சூழல்களுக்கு எதிரான லவாசா நகரக் கட்டுமானத் திட்ட நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருந்ததால், நகரக் கட்டுமான திட்டத்திற்கு தேவையான அரசின் ஒப்புதல்கள் எவ்வித நிபந்தனைகள் இன்றி எளிதாக கிடைத்தது.[28] 2002 - 2004-ஆம் ஆண்டுகளில் சரத் பவாரின் மகள் சுப்பிரியா சுலே மற்றும் மருமகன் பெயரில், லவாசா நகர திட்ட நிறுவனத்தின் 20% மேற்பட்ட பங்குகள் இருந்தன. பின்னர் தங்களின் பங்குகளை விற்றுவிட்டனர்.

படக்காட்சிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "India rules hill city 'illegal'". BBC. 19 January 2011. https://www.bbc.co.uk/news/world-south-asia-12223024. 
  2. "UPDATE 1-India ministry sets terms to consider Lavasa approval". Reuters. 18 January 2011 இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924150716/http://www.reuters.com/article/2011/01/18/lavasa-order-idUSSGE70H0A320110118. 
  3. "Biomimicry: Architecture That Imitates Life". harvardmagazine.com. September–October 2009.
  4. "Lavasa Corporation Ltd: India's First Planned Hill City Deploys Portal Solution to Empower Employees; Increases Collaboration and Efficiency". microsoft.com. 31 May 2010.
  5. Jamwal, Nidhi (15 September 2008). "Howl of the hills". downtoearth.org.in.
  6. "Suzlon, Lavasa among named in India bribery scam-reports". Reuters. 25 November 2010. https://www.reuters.com/article/idUKSGE6AO03620101125. 
  7. 7.0 7.1 HCC to revamp Lavasa finances, decide on IPO பரணிடப்பட்டது 2015-04-02 at the வந்தவழி இயந்திரம் reuters.com, 13 November 2011
  8. "India's newest hill station builds for the future". AFP news hosted by google.com. 15 September 2009.
  9. "HCC's Lavasa court hearing adjourned for 6 weeks". Reuters. 27 January 2011 இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924150817/http://www.reuters.com/article/2011/01/27/lavasa-hearing-idUSSGE70Q0AK20110127. 
  10. Kohli, Kanchi (editor); Menon, Manju (editor); Burte, Himanshu (2016). Business Interests and the Environmental Crisis. New Delhi: Sage Publications, India. pp. 70–73. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789351508601. பார்க்கப்பட்ட நாள் 15 September 2016. {{cite book}}: |first1= has generic name (help)
  11. Ferguson, Tim (20 December 2010). "A Stop in India's Lavasa". Forbes. https://blogs.forbes.com/timferguson/2010/12/20/a-stop-in-indias-lavasa/. 
  12. Everything is back on table including Lavasa IPO: HCC moneycontrol.com, 29 May 2013
  13. Byatnal, Amruta (31 October 2010). "Symbolic of luxury, Lavasa is built on irregularities". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/news/national/article859868.ece. பார்த்த நாள்: 21 February 2011. 
  14. 14.0 14.1 From the Head of School's Deskபரணிடப்பட்டது 19 ஆகத்து 2011 at the வந்தவழி இயந்திரம் Le Mont High official site. Retrieved 31 August 2011
  15. Ecole Hoteliere Lavasa பரணிடப்பட்டது 2015-12-30 at the வந்தவழி இயந்திரம் ecolehotelierelavasa.com
  16. Kahn, Jeremy (7 June 2011). "India Invents a City". The Atlantic. Atlantic Media. பார்க்கப்பட்ட நாள் 20 July 2013.
  17. For the golf course, see Faldo signs ‘stunning’ Indian course design project nickfaldo.com, 8 June 2009 cached
  18. Your search yielded no results, nickfaldo.com, பார்க்கப்பட்ட நாள் 2013-09-13
  19. "Lavasa to host SpaceWorld, Asia's first space edutainment centre at Rs400 crore investment". The Financial Express (The Indian Express Limited). 21 January 2009. http://www.financialexpress.com/news/lavasa-to-host-spaceworld-asias-first-space-edutainment-centre-at-rs-400-crore-investment/413522/0. பார்த்த நாள்: 2012-05-14. 
  20. A modern township nestled in the Sahyadris பரணிடப்பட்டது 2012-09-21 at the வந்தவழி இயந்திரம் Business Line.in, 2008/06/22
  21. "Maharashtra govt gets MoEF order for action against Lavasa". Business Standard. 11 June 2011. http://www.business-standard.com/india/news/maharashtra-govt-gets-moef-order-for-action-against-lavasa/438696/. 
  22. How the unfinished city of Lavasa became a nightmare for Indian banks
  23. "Indian Ministry of Environment and Forest Website" (PDF). Archived from the original (PDF) on 2016-03-22. பார்க்கப்பட்ட நாள் 2019-12-01.
  24. "SHOWCAUSE NOTICE: JAIRAM ORDERS WORK TO STOP – Lavasa lands in trouble for flouting green laws". The Economic Times. 27 November 2010 இம் மூலத்தில் இருந்து 26 ஆகஸ்ட் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120826042207/http://epaper.timesofindia.com/Default/Layout/Includes/ETNEW/ArtWin.asp?From=Archive&Source=Page&Skin=ETNEW&BaseHref=ETD%2F2010%2F11%2F27&ViewMode=HTML&GZ=T&PageLabel=1&EntityId=Ar00100&AppName=1. பார்த்த நாள்: 9 February 2011. 
  25. Water being diverted to Lavasa, alleges Patkar பரணிடப்பட்டது 11 அக்டோபர் 2012 at the வந்தவழி இயந்திரம், The Indian Express, 8 July 2009
  26. "Environment Ministry asks Lavasa to halt project". The Economic Times. 26 November 2010. http://economictimes.indiatimes.com/news/news-by-industry/indl-goods-/-svs/construction/Environment-Ministry-asks-Lavasa-to-halt-project/articleshow/6994372.cms. 
  27. Bhawan, Paryavaran(9 November 2011). "Environmental Clearance for the Development of Hill Station Township at Village Mulshi and Velhe Talukas, District Pune, Maharashtra my M/s. Lavasa Corporation Ltd. —regarding.". {{{booktitle}}}, New Delhi:Government of India Ministry of Environment and Forests. 2011-01-18 அன்று அணுகப்பட்டது.. பரணிடப்பட்டது 2016-03-22 at the வந்தவழி இயந்திரம்
  28. Vaidya, Abhay (26 December 2010). "Lavasa trail reinforces the Sharad Pawar connection & IPL link". Pune: DNA. http://www.dnaindia.com/mumbai/special_lavasa-trail-reinforces-the-sharad-pawar-connection-and-ipl-link_1486204. பார்த்த நாள்: 21 February 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லவாசா&oldid=3867108" இலிருந்து மீள்விக்கப்பட்டது