உள்ளடக்கத்துக்குச் செல்

அகல்யாநகர்

ஆள்கூறுகள்: 19°05′41″N 74°44′53″E / 19.0948°N 74.7480°E / 19.0948; 74.7480
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அகமத்நகர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அகல்யாநகர்
பழைய பெயர்:அகமத்நகர்
அகல்யாநகர்
பழைய பெயர்:அகமத்நகர்
அமைவிடம்: அகல்யாநகர்
பழைய பெயர்:அகமத்நகர், மகாராஷ்டிரம்
ஆள்கூறு 19°05′41″N 74°44′53″E / 19.0948°N 74.7480°E / 19.0948; 74.7480
நாடு  இந்தியா
மாநிலம் மகாராஷ்டிரம்
மாவட்டம் அகல்யாநகர் மாவட்டம்
[[மகாராஷ்டிரம் ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[மகாராஷ்டிரம் முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்களவைத் தொகுதி அகல்யாநகர்
பழைய பெயர்:அகமத்நகர்
மக்கள் தொகை 350,859 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


688.72 மீட்டர்கள் (2,259.6 அடி)

குறிப்புகள்


அகல்யாநகர் (பழைய பெயர்:அகமதுநகர்) என்பது இந்தியாவின் மகாராஷ்டிரம் மாநிலத்தில் உள்ள அகல்யாநகர மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் மாநகராட்சி ஆகும்.

பெயர் மாற்றம்

[தொகு]

இம்மாவட்ட ப் பகுதிகளை ஆட்சி செய்த மராத்திய அரசி, அகல்யாபாய் நினைவாக மகாராட்டிரா மாநிலத்தை ஆளும் மகா யுதி கூட்டணி அரசின் முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே, அகமத்நகர் நகரம் மற்றும் அகமத்நகர் மாவட்டத்தின் பெயரை அகல்யாநகர் மாவட்டம் என்றும், தலைமையிடமான அகமத்நகர் என்பதை அகல்யாநகர் என்றும் பெயர் மாற்ற செய்ய இந்திய அரசிடம் மே 2023ல் கோரிக்கை வைத்தார்.[1] மகாராட்டிரா முதலமைச்சரின் கோரிக்கையை இந்திய அரசு அக்டோபர் 2024ல் ஏற்றது.[2][3][4]

புவியியல்

[தொகு]

இவ்வூர், 19°05′41″N 74°44′53″E / 19.0948°N 74.7480°E / 19.0948; 74.7480[1] என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 688.72 மீட்டர் (2259.60 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 65 வார்டுகளும், 75,960 குடியிருப்புகளும் கொண்ட அகல்யாநகர் மாநகராட்சியின் மக்கள் தொகை 3,50,859 ஆகும். அதில் 1,78,899 ஆண்கள் மற்றும் 1,71,960 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 961 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 89.8% வீதம் உள்ளது. .இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 45,899 மற்றும் 4,074 வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 75.69%, இசுலாமியர் 15.64%, சமணர்கள் 4.35%, பௌத்தர்கள் 0.85%, கிறித்தவர்கள் 2.57%, சீக்கியர்கள் 0.22% மற்றும் பிற சமயத்தினர் 0.58% வீதம் உள்ளனர்.[5]

போக்குவரத்து

[தொகு]

தொடருந்து நிலையம்

[தொகு]

அகல்யாநகர் தொடருந்து நிலையம்[6]மும்பை, கோலாப்பூர், சோலாப்பூர், கோரக்பூர், புது தில்லி, ஹூப்ளி, பெங்களூரு, புனே, ஹவுரா தானாபூர் (பட்னா அருகில்) நகரங்களை இருப்புப்பாதை வழியாக இணைக்கிறது.

சாலைகள்

[தொகு]

அகல்யாநகர் பெரிய நகரங்களான சத்திரபதி சம்பாஜிநகர், பர்பானி, நாந்தேட், புனே, நாசிக், பீட், சோலாப்பூர், தாராசிவா போன்ற நகரங்களுடன் சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. கல்யான் (மும்பை) முதல் நிர்மல் (தெலங்கானா) செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 222 அகல்யாநகர் வழியாகச் செல்கிறது.

ஆதாரங்கள்

[தொகு]
  1. Maharashtra's Ahmednagar to be renamed as Ahilya Nagar, announces CM Eknath Shinde
  2. {https://timesofindia.indiatimes.com/city/nashik/ahmednagar-officially-renamed-ahilyanagar-a-tribute-to-warrior-queen-ahilyabai-holkar/articleshow/114095693.cms Ahmednagar is now officially Ahilyanagar]
  3. Centre approves Maharashtra's proposal to rename Ahmednagar as Ahilyanagar
  4. {https://www.deccanherald.com/india/maharashtra/maharashtras-ahmednagar-officially-renamed-to-ahilyanagar-3220795 Maharashtra's Ahmednagar officially renamed to Ahilyanagar]
  5. Ahmadnagar Population, Religion, Caste, Working Data Ahmadnagar, Maharashtra - Census 2011
  6. Ahmednagar railway station

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகல்யாநகர்&oldid=4238500" இலிருந்து மீள்விக்கப்பட்டது