நவி மும்பை மாநகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவி மும்பை மாநகராட்சி
வரலாறு
தோற்றுவிப்பு1 சனவரி 1992
கட்டமைப்பு
உறுப்பினர்கள்111
அரசியல் குழுக்கள்
  காங்கிர்ஸ்:13
  சுயேட்சைகள்: 4
  காலியானவைகள்: 28
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
2015
கூடும் இடம்
பேலாப்பூர்
வலைத்தளம்
www.nmmc.gov.in

நவி மும்பை மாநகராட்சி (Navi Mumbai Municipal Corporation (NMMC) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் அமைந்த 6 மாநகராட்சிகளில் ஒன்றாகும். இந்த மாநகராட்சி 1 சனவரி 1992 முதல் செயல்படுகிறது.[1]இம்மாநகராட்சி 111 வார்டுகளைக் கொண்டது. இதன் நிர்வாகத் தலைமையிடம் பேலாப்பூரில் இயங்குகிறது.[2]

நவி மும்பை மாநகராட்சியானது தானே மாவட்டம் மற்றும் ராய்கர் மாவட்டத்தின் பகுதிகளின் மேற்கு கடலோரத்தில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஓர் துணை நகரமாகும். 1972ஆம் ஆண்டு மும்பையின் இரட்டை நகரமாக நவி மும்பை மாநகராட்சியின் கீழ் 163 சதுர கிலோமீட்டர்கள் (63 sq mi) பரப்பிலும் மற்றும் மொத்தம் 344 சதுர கிலோமீட்டர்கள் (133 sq mi) பரப்பளவிலும் திட்டமிடப்பட்டது.[3] இது மும்பை பெருநகரப் பகுதியாகும்.

இது தானே கடற்கழியின் கிழக்கில் தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையில் நவி மும்பை அமைந்துள்ளது. நகரத்தின் எல்லைகளாக வடக்கில் தானே அருகில் உள்ள ஐரோலியும் தெற்கில் உரான் பகுதியும் உள்ளன. இதன் நீளம் மும்பையின் நீளத்தை ஒத்துள்ளது. வாசி கடற்பாலமும் ஐரோலி கடற்பாலமும் தீவு நகரமான மும்பையுடன், நவி மும்பையை இணைக்கிறது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, வீடுகளைக் கொண்ட நவி மும்பை நகரத்தின் மொத்த மக்கள் தொகை 11,20,547 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 6,10,060 மற்றும் 5,10,487 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 837 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 1,29,591 ஆகும். சராசரி எழுத்தறிவு 89.62 % ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 80.39 %, இசுலாமியர்கள் 8.68 %, பௌத்தர்கள் 6.23 %, சமணர்கள் 0.99 %, கிறித்துவர்கள் 2.35 %, சீக்கியர்கள் 1.01 % மற்றும் பிறர் 0.36% ஆக உள்ளனர்.[4]

நவி மும்பையின் விலைமிக்க கட்டிடங்கள் வாசி மற்றும் நெரூள் பகுதிகளில் உள்ளது. நவி மும்பை பன்னாட்டு வானூர்தி நிலையம் திட்டமிடப்பட்டுள்ளது. நவி மும்பையின் மக்கள் தொகையில் பெரும்பான்மையோர் நெருளீலும் 700,000 பேர் வாசியிலும் வாழ்கின்றனர். ஏனையவர் பேலாப்பூர், சான்படா, ஐரோலி, ஜூய்நகர், கன்சோலி, கோபர் கைர்னே ஆகிய பகுதிகளிலும் வசிக்கின்றனர்.

நவி மும்பை மாநகராட்சிப் பகுதிகள்[தொகு]


மாநகராட்சி தேர்தல் 2015[தொகு]

S.No. கட்சியின் பெயர் கொடி அல்லது சின்னம் வார்டு உறுப்பினர்கள் மாற்றம்
01 தேசியவாத காங்கிரசு கட்சி NCP-flag.svg 52 வீழ்ச்சி 2
02 சிவ சேனா Indian Election Symbol Bow And Arrow.svg 38 உயர்வு 21
03 இந்திய தேசிய காங்கிரசு 10 வீழ்ச்சி 3
04 பாரதிய ஜனதா கட்சி 06 உயர்வு 5
05 சுயேட்ச்சைகள் No flag.svg 05 உயர்வு 1

மேற்கோள்கள்[தொகு]

  1. ":: Navi Mumbai Municipal Corporation". www.nmmc.gov.in (ஆங்கிலம்).
  2. Tawade, Rahul (26 January 2014). "Navi Mumbai: New civic building set to create records of sorts". Daily News and Analysis (Navi Mumbai (Belapur)). http://www.dnaindia.com/mumbai/report-navi-mumbai-new-civic-building-set-to-create-records-of-sorts-1957281. 
  3. "nmmconline.com: "Land Usage"". 2009-11-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-10-10 அன்று பார்க்கப்பட்டது.
  4. Navi Mumbai City Population 2011

வெளி இணைப்புகள்[தொகு]