தோரணக் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோரணக் கோட்டை
Torna entrance.jpg
தோரணக் கோட்டையின் நுழைவாயில்
உயர்ந்த இடம்
உயரம்1,403 m (4,603 ft)
ஆள்கூறு18°16′33.86″N 73°37′21.78″E / 18.2760722°N 73.6227167°E / 18.2760722; 73.6227167ஆள்கூறுகள்: 18°16′33.86″N 73°37′21.78″E / 18.2760722°N 73.6227167°E / 18.2760722; 73.6227167
Naming
மொழிபெயர்ப்புतोरणा किल्ला (மராத்தி)
புவியியல்
தோரணக் கோட்டை is located in மகாராட்டிரம்
தோரணக் கோட்டை
தோரணக் கோட்டை
மகாராட்டிராவில் தோரணக் கோட்டையின் அமைவிடம்
அமைவிடம்புனே மாவட்டம், மகாராட்டிரா, இந்தியா
மலைத்தொடர்மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்

தோரணக் கோட்டை (Torna Fort) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின், புனே மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளது.

சத்திரபதி சிவாஜி தனது 16வது வயதில், 1643-ஆம் ஆண்டில் முதலாவதாக கைப்பற்றிய கோட்டையே, சிறு அளவில் மராத்தியப் பேரரசு நிறுவ காரணமாக அமைந்தது. கடல் மட்டத்திலிருந்து 1403 மீட்டர் உயரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்த இக்கோட்டை, புனே மாவட்டத்தில் உள்ள கோட்டைகளில் உயர்ந்த கோட்டையாகும்.[1]

வரலாறு[தொகு]

பதினெட்டாம் நூற்றாண்டில் சத்திரபதி சிவாஜியின் மகன் சம்பாஜியின் மறைவிற்குப் பின்னர் இக்கோட்டையை, முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் கைப்பற்றினார். 1776ல் ஏற்பட்ட புரந்தர் உடன்படிக்கையின் படி, இக்கோட்டையை மராத்திய கூட்டமைப்பினர் தோரணக் கோட்டையை மறுசீரமைத்துக் கட்டினர்.

அமைவிடம்[தொகு]

தோரணக் கோட்டை புனே நகரத்திலிருந்து தென்கிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேல்கே தாலுக்காவின், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. புனேசாத்தாரா செல்லும் வழியில் அமைந்த நரசப்பூர் என்ற ஊரின் வலது பக்க சாலை வழியாக இக்கோட்டையின் அடிப்பகுதியை அடையலாம்.

சுற்றுலா[தொகு]

தென்மேற்கு பருவ காலமான செப்டம்பர் - டிசம்பர் மாதங்களில் இக்கோட்டையைக் காண சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவர். தோரணா கோட்டையிலிருந்து புணேவில் உள்ள புரந்தர் கோட்டை, ராய்கட் கோட்டை, சிங்ககாட் கோட்டைகளை கண்டு களிக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Torna fort
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  1. "chatrapati-shivaji". August 19, 2013 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரணக்_கோட்டை&oldid=3504147" இருந்து மீள்விக்கப்பட்டது