கொங்கண் மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொங்கண் - தென்னையும் கமுகும் அடர்ந்த வெள்ளை கடற்கரைகள்

கொங்கண் (மராத்தி: कोकण), அல்லது கொங்கண் கரையோரம் அல்லது கரவாலி, இந்தியாவின் மேற்கு கடலோரம் மகாராட்டிர ராய்கரிலிருந்து கர்நாடக மாநிலத்தின் மங்களூர் வரை பரந்திருக்கும் கடலோர நிலப்பரப்பு ஆகும்.
கொங்கண் பொதுவாக மகாராட்டிரத்தின் ராய்கர், தாணே, மும்பை, இரத்னகிரி, சிந்துதுர்க் மாவட்டங்களையும் கோவா மாநிலம், கர்நாடகத்தின் உத்தர கன்னடம், உடுப்பி, தட்சிண கன்னடம் மாவட்டங்களையும் குறிக்கும். இந்த மக்களின் உணவுப் பழக்கங்கள் (அரிசி & மீன்), பயிர்கள் (நெல், மாம்பழம், முந்திரி,பலா) மற்றும் உடல்வாகு (உயரம் மற்றும் கட்டு) இவற்றில் ஒற்றுமை காணலாம்.

கொங்கண் வாழ் மக்கள் கொங்கணிகள்என அழைக்கப்படுகின்றனர்.அவர்களது மொழி கொங்கணியாகும்.

கொங்கண் மண்டலம்[தொகு]

கொங்கண் மண்டலம் மகாராட்டிர மாநிலத்தின் மேற்கில் உள்ளது.
கொங்கண் மண்டலம் மகாராட்டிரம், சிவப்பு வண்ணத்தில்.

இது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் ஏழு மண்டலங்களில் ஒன்றாகும். இந்த மண்டலத்தின் எல்லைகளாக மேற்கில் அரபிக்கடலும், வடக்கே குசராத்மாநிலமும், கிழக்கே நாசிக் மண்டலம் மற்றும் புணே மண்டலமும் , தெற்கே கர்நாடகமாநிலமும் அமைந்துள்ளன.

சில புள்ளிவிவரங்கள்[தொகு]

  • பரப்பளவு: 30,746 கிமீ²
  • மக்கட்தொகை (2001 கணக்கெடுப்பு): 24,807,357
  • மாவட்டங்கள்: மும்பை, மும்பை புறநகர், தாணே, இராய்கர், இரத்னகிரி, சிந்துதுர்க்
  • படிப்பறிவு: 81.36%
  • பாசன பரப்பு: 4,384.54 கிமீ²
  • முக்கிய பயிர்: அல்போன்சா மாம்பழம்

வரலாறு[தொகு]

இந்திய விடுதலைக்குப் பின்னரும் மகாராட்டிரம் உருவானபின்னரும் மாவட்டங்களின் பெயர்களில் மாற்றமும் சில சேர்க்கைகளும் உண்டாயின. சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்:

  • முந்தைய இரத்னகிரி மாவட்டத்திலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு புதிய சிந்துதுர்க் மாவட்டம் உருவானது.
  • கோலாபா என அழைக்கப்பட்ட மாவட்டப் பெயரை இராய்கர் என மாற்றியது.
  • தற்போதைய சோலாப்பூர் மாவட்டத்திலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு பந்தர்பூர் மாவட்டம் உருவாக்க திட்டமுள்ளது.
  • தற்போதைய தாணே மாவட்டத்திலிருந்து பழங்குடியினர் மிகுந்த சில பகுதிகளைப் பிரித்து புதிய ஜவ்கர் மாவட்டம் உருவாக்க திட்டமுள்ளது.

மேலும் அறிய[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொங்கண்_மண்டலம்&oldid=2228901" இருந்து மீள்விக்கப்பட்டது