திரிம்பகேஸ்வரர் கோயில், நாசிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திரிம்பகேஸ்வரர் கோயில், நாசிக்

திரிம்பகேஸ்வரர் கோயில், திரிம்பாக் (Trimbakeshwar Shiva Temple) திரிம்பாக் என்னும் நகரில் உள்ள தொன்மையான சிவன் கோயில் ஆகும். இது இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் நாசிக் நகரில் இருந்து 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்துக் கடவுளான சிவனுக்காக அமைக்கப்பட்ட இக் கோயில் இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.

இது குடாநாட்டு இந்தியாவின் மிக நீளமான ஆறான கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது.

இங்குள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும். பிற ஜோதிர்லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டு அமைந்துள்ளன. பிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்த இக் கோயில் கருங்கற்களினால் கட்டப்பட்டுள்ளது. இது அழகிய சிற்பங்களுடன் கூடிய கவர்ச்சியான கட்டிடமாக உள்ளது.[1]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலானது கடல் மட்டத்தில் இருந்து 2500 உயர மலைமீது கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் நாற்புறமும் உயர்ந்த மதில்களுடனும், அதில் நான்கு வாயில்களைக் கொண்டும் உள்ளது. இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டில் மூன்றாம் பேஷ்வாவான நானாசாகிப் காலத்தில் கட்டப்பட்டது. கோயிலின் கருவறையின்மேலே வழைப்பூ வடிவில் கூம்பான விமானம் அமைந்துள்ளது. அதன் உச்சியில் தங்கக் கலசமும், சிவனின் சூலமும் அமைந்துள்ளது. கோயிலின் முதன்மைத் தெயுவமான திரிம்பகேஸ்வரரின் லிங்கத்தில் ஆவுடையார் மட்டுமே உள்ளது லிங்கம் இருக்கவேண்டிய இடத்தில் உரல் போன்று பள்ளமாக உள்ளது. இந்தப் பள்ளத்தில் மும்மூர்திகளைக் குறிக்கும் மூன்று சிறு லிங்கங்கள் உள்ளன. இவற்றை பிரம்மா, விஷ்ணு, உருத்திரனாக கருதுகின்றனர். நாள்தோறும் இந்த ஆவுடையர் குழிமேல் ஒருமுகம் கொண்ட வெள்ளிக்கவசமோ அல்லது மூன்றுமுகம் கொண்ட கவசமோ சாத்தப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. சிறப்பு நாட்களில் ஐந்து முக தங்கக் கவசம் அணிவிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]