இந்தியாவின் நுழைவாயில் (மும்பை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்தியாவின் நுழைவாயில்
Gateway of India
இந்தியாவின் நுழைவாயில் துறைமுகத்தில் இருந்து பார்த்தால், 2003.
இந்தியாவின் நுழைவாயில் (மும்பை) is located in மும்பை
இந்தியாவின் நுழைவாயில் (மும்பை)
Location within Mumbai
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலைப் பாணி Indo-Saracenic
அமைவிடம் மும்பை (பம்பாய்), இந்தியா
Client இந்தியா
உரிமையாளர் இந்தியத் தொல்லியல் ஆய்வகம்
ஆள்கூறுகள் 18°55′19″N 72°50′05″E / 18.921836°N 72.834705°E / 18.921836; 72.834705ஆள்கூறுகள்: 18°55′19″N 72°50′05″E / 18.921836°N 72.834705°E / 18.921836; 72.834705
கட்டுமானம்
தொடக்கம் 31 மார்ச் 1911
நிறைவு 1924
திறப்பு 4 டிசம்பர் 1924
உயரம் 26 m (85 ft)
செலவு Indian Rupee symbol.svg2.1 மில்லியன் (1911)
வடிவமைப்புக் குழு
கட்டிடக்கலைஞர் ஜார்ஜ் விட்டர்

இந்தியாவின் நுழைவாயில் (Gateway of India, மராட்டி: गेटवे ऑफ इंडिया) மும்பையில் பிரித்தானிய அரசாட்சியில் கட்டப்பட்ட ஒரு நினைவுச்சின்னம் ஆகும்.[1] தெற்கு மும்பையில் அரபிக் கடலோரத்தில் அப்போலோ பந்தர் என்னும் சிறுதுறைப் பகுதியில் அமைந்துள்ளது.[2][3] பசாற்றுக்கல்லால் கட்டப்பட்டுள்ள இந்த நினைவு வளைவு, 26 மீற்றர்கள் (85 அடிகள்) உயரமுள்ளது.[4] மீனவர்களுக்கான சிறிய துறையாக இருந்தவிடத்தில் பிரித்தானிய ஆளுநர்களும் பிற முதன்மை நபர்களும் வந்திறங்கக்கூடிய வகையில் புதுப்பிக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டது. மும்பையில் படகுகள் மூலம் வந்திறங்கும் பயணிகள் எதிர்கொள்ளும் முதல் கட்டிடமாக இது இருந்தமையால் இந்தியாவின் நுழைவாயில் என அழைக்கப்பட்டது.[5][6] மும்பையின் தாஜ் மகால் என்றும் செல்லமாக அழைக்கப்படுகிறது.[7] மும்பை நகரத்தின் முதன்மையான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இது விளங்குகிறது.[8]

இந்தியாவிற்கு 1911இல் வருகை புரிந்த பிரித்தானிய மன்னர் ஜார்ஜ் V மற்றும் அரசி மேரி அப்போலோ பந்தர் துறைமுகத்தில் வந்திறங்கியதன் நினைவாக இந்தக் கட்டிடம் எழுப்பப்பட்டது. இந்தோ-சார்சனிக் கட்டிட வடிவமைப்பில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தின் அடிக்கல் மார்ச்சு 31, 1911 அன்று இடப்பட்டது. ஜார்ஜ் விட்டர் என்ற கட்டிட வடிவமைப்பாளரின் இறுதி வடிவம் 1914இல் பெறப்பட்டு கட்டிடப் பணி 1924ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. இதன்பிறகு இந்திய வைசிராய்களும் மும்பை ஆளுநர்களும் இதன்வழியே அலங்காரமாக அழைத்து வரப்பட்டனர்.[9][10]

இந்த நினைவு வளாகத்தில் மூன்று தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன: 2003இல் இருமுறை நடந்துள்ளது; 2008ஆம் ஆண்டில் தாஜ் மகால் தங்குவிடுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டைகளின்போது நான்கு ஆயுதமேந்திய தீவிரவாதிகள் இங்கேயே வந்திறங்கினர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. National Portal Content Management Team. "National Portal of India, Monuments". National Informatics Centre (NIC). பார்த்த நாள் 23 April 2012.
  2. Pg no. 582
  3. DNA (24 April 2012). "Walk amid a wealth of heritage in Mumbai". DNA India (Mumbai). http://www.dnaindia.com/mumbai/report_walk-amid-a-wealth-of-heritage-in-mumbai_1679827. பார்த்த நாள்: 24 April 2012. 
  4. Holloway, James (29 November 1964). "Gateway of India; Colorful, Crowded Bombay Provides An Introduction to Subcontinent". த நியூயார்க் டைம்ஸ். http://select.nytimes.com/gst/abstract.html?res=F30D14F83A5D1A728DDDA00A94D9415B848AF1D3. பார்த்த நாள்: 26 November 2012. (subscription required)
  5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; bomcities என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  6. Arnett, Robert (15 July 2006). India Unveiled. Atman Press. p. 166. ISBN 978-0-9652900-4-3. http://books.google.com/books?id=Tmn91va2e4UC&pg=PT166. பார்த்த நாள்: 22 April 2012. 
  7. Duncan Forbes (1968). The heart of India. Hale. p. 76. http://books.google.com/books?id=Whq2AAAAIAAJ. பார்த்த நாள்: 3 April 2012. 
  8. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; bbc என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  9. Chapman, Kenneth. Peace,War and Friendships. Roxana Chapman. p. 151. ISBN 978-0-9551881-0-7. http://books.google.com/books?id=lGNL0aT7EZ8C&pg=PA151. பார்த்த நாள்: 16 April 2012. 
  10. Simon, Sherry; St-Pierre, Paul (27 November 2000). Changing the Terms: Translating in the Postcolonial Era. University of Ottawa Press. p. 245. ISBN 978-0-7766-0524-1. http://books.google.com/books?id=cmJ5O0ZOwqsC&pg=PA245. பார்த்த நாள்: 22 April 2012.