உள்ளடக்கத்துக்குச் செல்

லென்யாத்திரி

ஆள்கூறுகள்: 19°14′34″N 73°53′8″E / 19.24278°N 73.88556°E / 19.24278; 73.88556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லென்யாத்திரியின் 30 குடைவரைக் கோயில்கள்
லென்யாத்திரி கணபதி

லென்யாத்திரி (Lenyadri மராத்தி: लेण्याद्री, Leṇyādri) இந்திய மாநிலமான மகாராட்டிராவின் புனே மாவட்டம், ஜுன்னர் தாலுகாவின் நிர்வாகத் தலைமையிடமான ஜுன்னர் நகரத்தின் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்த 30 பௌத்த குடைவரைக் கோயில்கள் மற்றும் விநாயகர் கோயில் அமைந்த இடமாகும்.[1] குகை எண் 7இல் லெண்யாத்திரி விநாயகர் கோயில் அமைந்துள்ளது.[2] இக்குடைவரைக் கோயில்கள் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. குகை எண் 6 மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களாகவும், மற்றவைகள் விகாரைகளாக அமைந்துள்ளது. (பிக்குகள் தங்குமிடங்கள்)

லென்யாத்திரி குடைவரைக் கோயில்கள் கி.பி முதல் நூற்றாண்டு முதல் 3 ஆம் நூற்றாண்டு வரை ஈனயான பௌத்தர்களால் கட்டப்பட்டதாகும். குகை எண் 7 இல் உள்ள விநாயகர் கோயில் கி.பி முதல் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

பெயர்க் காரணம்[தொகு]

லென்யாத்திரி என்பதற்கு மராத்திய மொழியில் மலைக் குகை என்று பொருள்படும்.[3] இக்குகைகள் அமைந்த மலைக்கு கணேசர் மலை என்று அழைப்பர்.

குகை எண் 7 கணேசர் கோயில்[தொகு]

லென்யாத்திரி
கணேசர் குகைக் கோயில் உட்புறம்
லென்யாத்திரி is located in மகாராட்டிரம்
லென்யாத்திரி
லென்யாத்திரி
மகாராட்டிராவில் லென்யாத்திரியின் அமைவிடம்
ஆள்கூறுகள்:19°14′34″N 73°53′8″E / 19.24278°N 73.88556°E / 19.24278; 73.88556
பெயர்
பெயர்:கிரிஜாட்மஜ், லென்யாத்திரி
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:மகாராட்டிரா
மாவட்டம்:புனே மாவட்டம்
அமைவு:ஜுன்னர்]] அருகில் லென்யாத்திரி குகைகள்
கோயில் தகவல்கள்
மூலவர்:கிரிஜாட்மாஜா எனப்படும் விநாயகர்
சிறப்பு திருவிழாக்கள்:விநாயகர் சதுர்த்தி மற்றும் கணேச ஜெயந்தி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:பௌத்த விகார குகை
வரலாறு
கட்டப்பட்ட நாள்:கி.பி முதல் நூற்றாண்டு
விநாயகர் கோயில் கட்டப்பட்ட ஆண்டு அறியப்படவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Historical Monuments (Pune)". NIC - District-Pune. 2008. Archived from the original on 18 ஜனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 5 February 2010. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  2. "லெண்யாத்திரி கணபதி தேவஸ்தானம்". Archived from the original on 2016-10-29. பார்க்கப்பட்ட நாள் 2016-10-28.
  3. Grimes p. 13

நூல்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லென்யாத்திரி&oldid=3811860" இலிருந்து மீள்விக்கப்பட்டது