திரிபுரந்தகர் கோயில்

ஆள்கூறுகள்: 14°23′38″N 75°14′38″E / 14.39389°N 75.24389°E / 14.39389; 75.24389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலினச் சிற்பங்களுடன் கூடிய திரிபுரந்தகக் கோயிலின் நுழைவு

திரிபுரந்தகர் கோயில் (Tripurantaka Temple) திரிபுரந்தகேசுவரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது பொ.ச. கி.பி. 1070 இல் மேலைச் சாளுக்கியர்களால் கட்டப்பட்ட கோயிலாகும். [1] தற்போது இந்தக் கோவில் பாழடைந்த நிலையில் இருக்கிறது. இந்திய மாநிலமான கர்நாடகாவின் சிமோகா மாவட்டத்திலுள்ள வரலாற்று ரீதியாக முக்கியமான நகரமான பல்லிகாவியில் அமைந்துள்ளது . கோவிலின் வெளிப்புறச் சுவர்களில் பாலினச் சிற்பங்களைக் கொண்டுள்ளது. இந்த சித்தரிப்புகள் சாளுக்கியக் கலையில் அரிதாகவே கருதப்படுகின்றன. சிற்பங்களின் அளவு மிகச் சிறியது என்பதால், இவை நெருக்கமாகச் சென்று பார்த்தால் மட்டுமே தெரியும். [2] இடைக்காலத்தில், பல்லிகாவி பல மத நம்பிக்கைகளைக் கற்கும் இடமாகவும், சாளுக்கியர்களால் கட்டப்பட்ட பல நினைவுச்சின்னங்கள் மற்றும் கட்டமைப்புகளுக்கான இடமாகவும் இருந்தது. [3] 80க்கும் மேற்பட்ட இடைக்கால கல்வெட்டுகள் பல்லிகாவியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை சைவம், வைணவம், சமணம், பௌத்த மதங்களைச் சேர்ந்தவை. இந்த கல்வெட்டுகள் மற்றவற்றுடன், கோயில்களைக் கட்டுவதையும் விவரிக்கின்றன. [4]

பிற சிற்பங்கள்[தொகு]

காமசூத்ரா கலைச் சிற்பம்
காமசூத்ரக் கலைச் சிற்பம், பொ.ச. 1070, திரிபுரந்தக கோயில், சிமோகா மாவட்டம்

இந்தக் கோயில் சிக்கலான அதன் அலங்கார சாரளங்களுக்கும், திரைகளுக்கு மிகவும் புகழ் பெற்றது. இது மிகவும் சிக்கலான துளையிடப்பட்ட கல் வேலைகளைக் கொண்டுள்ளது. சன்னதிக்கான வாசலின் இரு பக்கங்களிலும் ஒரு சாளரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் மூன்று ஜோடி பாம்பு உருவங்கள் மூலம் நிரப்பப்பட்டுள்ளன. இந்த நாகங்களின் நீண்ட பின்னிப்பிணைந்த மற்றும் முடிச்சு உடல்கள் பேனல்களை நிரப்ப ஒரு மெய்நிகர் கண்ணி உருவாக்குகின்றன. [5] சன்னதியின் நுழைவாயிலுக்கு மேலே இந்துக் கடவுளர்களான பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகியோரின் சிற்பங்களுடன் கூடிய ஒரு அலங்காரச் செதுக்கல்கள் உள்ளது. சிவன் தனது பைரவ வடிவத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளார். மேலும் ,இங்கு திக்பாலர்கள் சிலையும் குறிப்பிடத்தக்கது. போசள மன்னர் சிங்கத்தை கொல்வது போன்ற சிற்பம் ஒன்று பெரிய அளவில் செதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பம் அதன் சொந்த கல்வெட்டுடன் இருக்கிறது. அதில் ஒரு மன்னன், தனது நாய்களுடன் வேட்டைக்குச் சென்று ஒரு காட்டுப்பன்றியை கொல்கிறான். காட்டில் இருந்து வெளியேறிய ஒரு சிங்கத்துடன் சண்டையிட்டு, கொன்று தனது காலுக்குக் கீழே அதனை வைத்திருப்பதைப் போன்ற சிற்பமும் சித்தரிக்கப்பட்டுள்ளது. [2]

பல்லிகாவியில் உள்ள நகர மையத்தில் கண்ட-பேரண்டப் பறவை (இரண்டு தலை பறவை)

நகர மையத்திற்கு அருகிலுள்ள மற்றொரு சிற்பம் கண்டம்-பேரண்டத் தூண் (இரண்டு தலை பறவைகளின் தூண்). சிற்பம் அமைந்துள்ள தூணானது சுமார் 30 அடி (9 மீ) உயரமும், சுமார் 15 அங்குலம் (38 செ.மீ) விட்டமும் கொண்டது. தூணின் மேற்பகுதி ஒரு எண்கோணத்தைக் கொண்டுள்ளது. இதன் மீது புராணத்தில் கண்டம்-பேரண்டப் பறவைகளின் சிலை வைக்கப்பட்டுள்ளது. [6] இந்த சிலையில் மனித உடலுடன் கூடிய இரண்டு பறவைகள் நின்ற நிலையில் எதிரெதிர் திசைகளில் பார்க்கிறது. அதன் கைகளில், தனது இரையை வைத்திருக்கிறது. தூணின் அடிப்பகுதியில் உள்ள ஒரு கல்வெட்டு பொ.ச. 1047 இல் பனவாசியின் கதம்ப வம்சத்தைச் சேர்ந்த சாமுண்டராய அரசனைப் பற்றி விவரிக்கிறது. உள்ளூர் காடுகளிலிருருந்து வெளியே வரும் மோசமான யானைகளை பயமுறுத்துவதற்காக இந்தத் தூண் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஒரு கதை கூறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kamat J. "Temples of Karnataka". Timeless Theater - Karnataka. Kamat's Potpourri. 2008-05-14 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 Cousens (1926), p. 107
  3. Raghavendra Chandragutti. "A glimpse of the lost grandeur". Spectrum, Deccan Herald, Tuesday, January 25, 2005. Deccan Herald. 2008-05-14 அன்று பார்க்கப்பட்டது.
  4. Cousens (1926), p. 108
  5. Cousens (1927), p. 106
  6. Cousens (1926), p. 146

குறிப்புகள்[தொகு]