கழுகுமலை வெட்டுவான் கோயில்
கழுகுமலை வெட்டுவான் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 9°09′12″N 77°42′12″E / 9.15333°N 77.70333°Eஆள்கூறுகள்: 9°09′12″N 77°42′12″E / 9.15333°N 77.70333°E |
அமைவிடம் | |
நாடு: | ![]() |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தூத்துக்குடி |
அமைவு: | கழுகுமலை |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை, பாறை வெட்டு |
இணையதளம்: | kalugumalaitemple.tnhrce.in |
கழுகுமலை வெட்டுவான் கோயில் என்பது தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டியிலிருந்து 22 கிமீ தொலைவில் கழுகுமலை என்னும் பேரூராட்சியில் அமைந்துள்ள ஒரு சிறிய கோயில் ஆகும். ஊரின் மையப் பகுதியிலிருந்து 1 கி.மீ. தொலைவில், இவ்வூரின் பெயரைக்கொண்ட மலையின் ஒரு பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திராவிடக் கட்டிடக்கலையைப் பயன்படுத்தி சுமார் கி.பி. 800-ல் பாண்டிய மன்னன் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டது.[1][2]
குகைக்கோயில்[தொகு]
தமிழகத்தில் உள்ள மிகச் சிறந்த குகைக்கோயில்களில் கழுகுமலை வெட்டுவான் கோயிலும் ஒன்றாகும். இக்கோயில் 8ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் செதுக்கப்பட்டதாகும். மிகவும் நுணுக்கமான சிற்பங்களைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. தற்போது கோயிலின் முழு பணியும் முற்றுப்பெறாமல், கருவறையில் பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.[3]
அமைப்பு[தொகு]
மலைப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் ஒரே கல்லால் ஆனதாகும். கருங்கல்லைக் குடைந்து இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கழுகுமலையில் ஏறி நடந்து செல்லும்போது இக்கோயில் கண்ணுக்குத் தெரியாது. சற்றே தாழ்ந்த தளத்தில் சுமார் 10 அடி இறக்கத்தில் இறங்கியே இக்கோயிலுக்குச் செல்ல முடியும். ஒரு சிறிய கோயிலில் கருவறையுடன் கூடிய விமானம் எவ்வாறு அமையுமோ அந்த அளவு இக்கோயில் காணப்படுகிறது.
சிற்பங்கள்[தொகு]
இங்கு பிரம்மா, திருமால், சிவன், தேவகன்னியர் மற்றும் பூத கணங்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து சிலைகளும் உயிரோட்டத்தோடு காணப்படுகின்றன. முழுமை பெறாமல் உள்ள சிற்பங்களையும் அங்கு காணமுடியும்.[3]
வெட்டுவான்கோயில் படத்தொகுப்பு[தொகு]
மேலும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ வெட்டுவான் கோவில்
- ↑ "Kazhugumalai –Jain Temple". thoothukudi.tn.nic.in (ஆங்கிலம்). 2016. 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 03 சூன் 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி); Check date values in:|accessdate=
(உதவி) - ↑ 3.0 3.1 முன்னோர்களின் வாழ்வியல் முறையை பறைசாற்றும் கழுகுமலை, தினமணி, 3 ஏப்ரல் 2013
வெளியிணைப்புக்கள்[தொகு]
• Enchanting Kazhugumalai, a symbol of religious harmony Times of India, 22 January 2013
• Stories in stone, Frontline,Vol 25, Issue 21, October 11-24, 2008[தொடர்பிழந்த இணைப்பு]