சோமநாதபுரம் (கர்நாடகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒய்சாளர் காட்டடக்கலை
சோமநாதபுரக் கேசவர் கோயிலின் ஒருபக்கம்
கோபியர்களுடன் கிருஷ்ணர், சென்ன கேசவப் பெருமாள் கோயில், சோமநாதபுரம்

சோமநாதபுரம் மைசூர் மாவட்டத்தில் (கர்நாடக மாநிலம், இந்தியா) காவேரிக்கரையில் அமைந்து உள்ள ஒரு சிறு நகரம் ஆகும். இந்நகரமே போசளப் பேரரசின் கட்டிடக்கலையின் முதன்மையான இருப்பிடம் ஆகும். இங்கு தான் கலைநயம் மிக்க கேசவர் கோயில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள சிற்பங்கள் மென்மையான மாக்கல்லால் ஆனவை. இந்நகரம் பதின்மூன்றாம் நூற்றாண்டில் (கி.பி 1254-91) வாழ்ந்த மூன்றாம் நரசிம்மன் என்ற மன்னனின் தளபதியான (தண்டநாயக்கா) சோமா என்பவரால் கட்டப்பட்டது. எனவே இது சோமநாத புரம் என்று வழங்கப்பட்டது. இங்குள்ள கேசவர் கோயில் மிக நுட்பமான மாக்கல் சிற்பவேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது.

இதனையும் காண்க[தொகு]