மைசூர் பல்கலைக்கழக நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Mysore University Library
நாடுஇந்தியா
வகைகல்வி
தொடக்கம்1918; 105 ஆண்டுகளுக்கு முன்னர் (1918)
அமைவிடம்மைசூர், கருநாடகம்

மைசூர் பல்கலைக்கழக நூலகம் (Mysore University Library) இந்தியாவிலுள்ள மைசூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்விச் சமூகத்திற்குச் சேவையாற்றும் ஒரு நூலகமாகும்.[1] இந்நூலகம் மைசூர், ஆசன் மற்றும் மண்டியா ஆகிய இடங்களில் அமைந்துள்ளது. தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள பல்கலைக்கழக நூலகங்களில் மைசூர் பல்கலைக்கழக நூலகம் மிகப்பெரியதும் பழமையானதுமாகும்.[2]

நூல்கள்[தொகு]

2,311 புத்தகங்களுடன் மைசூர் பல்கலைக்கழக நூலகம் தொடங்கப்பட்டது. இன்று அதன் அமைப்பில் கிட்டத்தட்ட 7.5 லட்சம் ஆவணங்களின் சேகரிப்பும் 5600 உறுப்பினர்களையும் கொண்டு வளர்ந்துள்ளது. 600 ஆசிரிய உறுப்பினர்கள், 600 ஆராய்ச்சியாளர்கள், 3,500 முதுகலை மாணவர்கள், 500 அலுவலக ஊழியர்கள் மற்றும் மைசூர் நகரத்தின் 400 பட்டதாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.[3] மைசூர் பல்கலைக்கழக நூலகத்தில் 2,400 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட செய்தி பத்திரிகைகள் மற்றும் ஒரு லட்சம் செய்தி இதழ்களின் தொகுப்புகளும் இருக்கின்றன.[4]

சிறப்பு நூல்கள்[தொகு]

மைசூர் பல்கலைக்கழக நூலகத்தில் "மைசூர் வரலாறு" தொடர்பான புத்தகங்கள் மற்றும் மைசூர் சுதேச அரசு பற்றிய நிர்வாக அறிக்கைகள் முதலியன உள்ளன, இதில் இந்திய ஓவியம், கலை மற்றும் கட்டிடக்கலை தொடர்பான படைப்புகள் இடம்பெற்றுள்ளன. சமசுகிருதம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளின் கையெழுத்துப் பிரதிகள் உட்பட ஓரியண்டல் ஆராய்ச்சி நிறுவனத்தை இந்த நூலகம் ஆதரிக்கிறது.

சிறப்பு நூல்களைப் பொறுத்த வரையில் இங்கு மொத்தமாக 29,000 தொகுதிகளில் 84,000 படைப்புகள் உள்ளன. மைசூர் ஓரியண்டல் ஆராய்ச்சி நிறுவனம் ஆண்டுதோரும் நூலகத்தின் புத்தக சேகரிப்பின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.[3]

மைசூர் நூலகத்தில் உள்ள அரிய புத்தகங்களின் இலக்கமுறையாக்கல் செயல்முறை கூகிள் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட உள்ளது.[5] மைசூர் பல்கலைக்கழக நூலகத்தில் சுமார் 100,000 கையெழுத்துப் பிரதிகள் உள்ளன. இந்த கையெழுத்துப் பிரதிகள் ஒப்பீட்டளவில் உடையக்கூடிய காகிதம் மற்றும் பனை ஓலைகளில் எழுதப்பட்டுள்ளன, சில எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. முதலில் இலக்கமுறை செய்யப்பட வேண்டிய கையெழுத்துப் பிரதிகளை நூலகம் அடையாளம் கண்டுள்ளது. ஆயுர்வேதம், கணிதம், மருத்துவம், அறிவியல், சோதிடம் மற்றும் பொருளாதாரம் போன்ற பல்வேறு பாடங்களும் இதில் அடங்கும்.[6]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]