புனித பிலோமினா தேவாலயம், மைசூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித பிலோமினா தேவாலயம், மைசூர்
புனித பிலோமினா தேவாலயம்
புனித பிலோமினா தேவாலயம், மைசூர்
நாடு இந்தியா
சமயப் பிரிவுஉரோமன் கத்தோலிக்க திருச்சபை
புனித பிலோமினா தேவாலயம்

புனித பிலோமினா தேவாலயம் (St. Philomena’s Cathedral) [1] என்பது ஒரு கத்தோலிக்க தேவாலயம் ஆகும். இது இந்தியாவின் மைசூர் மறைமாவட்டத்தின் தேவாலயம் ஆகும். புனித ஜோசப் மற்றும் புனித பிலோமினா தேவாலயம் என்பது இதன் முழுப் பெயராகும். இது புனித செயின்ட் ஜோசப் தேவாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. [2] [3] [4] இது 1936ஆம் ஆண்டில் ஒரு நியோ கோதிக் பாணியைப் பயன்படுத்தி கட்டப்பட்டது.மேலும் இதன் கட்டிடக்கலை ஜெர்மனியில் உள்ள கோல்ன் தேவாலயத்தால் ஈர்க்கப்பட்டது. [5] இது ஆசியாவின் மிக உயரமான தேவாலயங்களில் ஒன்றாகும்.

புனித புரவலர்[தொகு]

புனித பிலோமினா ஒரு லத்தீன் கத்தோலிக்க புனிதர் மற்றும் உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தியாகி ஆவார். இவர் 4 ஆம் நூற்றாண்டில் தியாகியாக இருந்த ஒரு இளம் கிரேக்க இளவரசியாவார். 14 வயதிற்கு மேற்பட்ட ஒரு இளம் வயது பெண்ணின் எச்சங்கள் 1802 மே 24 அன்று உரோமில் வயா சலாரியாவில் உள்ள புனித பிரிஸ்கில்லாவின் நிலத்தடி புதைகுழிகளில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த எச்சங்களுடன் லுமெனா பாக்ஸ்டே கம் எப்ஐ, என்ற வரிசையில் அறியப்படாத அர்த்தம் இல்லாத சொற்களைக் கொண்ட ஒரு துண்டு துண்டான கல்வெட்டைக் கொண்ட ஓடுகளின் தொகுப்பு இருந்தது. கடிதங்கள் பாக்ஸ் தீகம் பிலுமினா என்று படிக்கப்பட்டன. இது லத்தீன் மொழியில் அமைதி உங்களுடன், பிலுமெனா என்று மொழிபெயர்க்கப்படுள்ளது. அவரது தியாகத்தின் சில அடையாளங்களும், உலர்ந்த இரத்தம் கொண்ட ஒரு பாத்திரமும் கல்லறையில் காணப்பட்டன. இந்த கண்டுபிடிப்புகளிலிருந்து, பிலுமெனா (பிலோமினா) என்ற கிறிஸ்தவர் கல்லறையில் புதைக்கப்பட்டார் என்றும், இரத்தம் கொண்ட பாத்திரம் அவரது நினைவுச்சின்னம் என்று கருதப்பட்டது. இது ஒரு தியாகியின் மரணத்திற்கு சான்றாகும்.

வரலாறு[தொகு]

தேவாலயத்தின் முன் புனித யோசேப்பின் சிலை
மைசூரில் உள்ள புனித பிலோமினா தேவாலயம்

இந்த இடத்தில் ஒரு தேவாலயம் 1843 ஆம் ஆண்டில் மகாராஜா மூன்றாம் கிருட்டிணராச உடையாரால் கட்டப்பட்டது. 1933 ஆம் ஆண்டில் தற்போதைய தேவாலயத்தின் அஸ்திவாரத்தை அமைத்த நேரத்தில் இருந்த ஒரு கல்வெட்டு இவ்வாறு கூறுகிறது: "அந்த ஒரே கடவுளின் பெயரில் - ஒளியின் பிரபஞ்சம், இவ்வுலக உலகம் மற்றும் உலகத்தை உருவாக்கி, பாதுகாத்து, ஆட்சி செய்யும் உலகளாவிய இறைவன். படைக்கப்பட்ட அனைத்து உயிர்களையும் ஒன்று திரட்டுதல் - இந்த தேவாலயம் மனிதனாக உலக அறிவொளியான இயேசு கிறிஸ்துவின் அவதாரத்திற்குப் பிறகு 1843 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டப்பட்டுள்ளது ". 1926 ஆம் ஆண்டில், மைசூர் மகாராஜாவின் தலைமைச் செயலாளராக இருந்த சர் டி. தம்புச் செட்டி, நான்காம் கிருட்டிணராச உடையார் புனிதரின் நினைவுச்சின்னத்தை கிழக்கிந்தியத் தீவுகளின் அப்போஸ்தலரின் பிரதிநிதியான பீட்டர் பிசானியிடமிருந்து பெற்றார். [5] புனித பிலோமினாவின் நினைவாக ஒரு தேவாலயத்தை நிர்மாணிப்பதில் அவருக்கு உதவ ராஜாவை அணுகிய பங்குத் தந்தை கோச்செட்டிடம் இந்த நினைவுச்சின்னம் ஒப்படைக்கப்பட்டது. [6] மைசூர் மகாராஜா 1933 அக்டோபர் 28 அன்று தேவாலயத்திற்கு அடிக்கல் நாட்டினார். பதவியேற்பு நாளில் தனது உரையில் அவர் கூறினார்: "புதிய தேவாலயம் இரட்டை அடித்தளத்தின் மீது வலுவாகவும் பாதுகாப்பாகவும் கட்டப்படும் - தெய்வீக இரக்கம் மற்றும் மனிதர்களின் ஆர்வதிற்கு நன்றி." தேவாலயத்தின் கட்டுமானம் பிஷப் ரெனே புகாவின் மேற்பார்வையில் முடிக்கப்பட்டது. புனித பிலோமினாவின் நினைவுச்சின்னம் பிரதான பலிபீடத்தின் கீழே ஒரு நிலத்தடிக் க்ல்லறையில் பாதுகாக்கப்படுகிறது. உள்ளூர் கலாச்சாரத்தை கலப்பதற்கு இந்த தேவாலயம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக் விளங்குகிறது. சில பெண் சிலைகள் உள்ளூர் பாரம்பரிய உடை, புடவை அணிந்திருக்கின்றன. 1977ஆம் ஆண்டு இந்தி பாலிவுட் திரைப்படமான 'அமர் அக்பர் அந்தோணி' புனித பிலோமினா தேவாலயத்தில் படமாக்கப்பட்டது.

கட்டிடக்கலை[தொகு]

இந்த தேவாலயத்தை டேலி என்ற பிரெஞ்சுக்காரர் வடிவமைத்தார். [5] இது கோல்ன் தேவாலயத்தில் இருந்து பெறப்பட்ட உத்வேகத்துடன் நியோ கோதிக் பாணியில் கட்ட வடிவமைக்கப்பட்டுள்ளது. தேவாலயத்தின் தரைத்தளத் திட்டம் சிலுவையை ஒத்திருக்கிறது. தேவாலயத்தின் மையப் பகுதி அழைக்கப்படும் சபை மண்டபம் சிலுவையின் நீண்ட பகுதி போல இருக்கிறது. குறுக்குவெட்டுகள் சிலுவையின் இரண்டு கைகள் போல இருக்கிறது. தேவாலயத்தின் பலிபீடம் மற்றும் பாடகர் குழு இருக்குமிடம் சிலுவையின் நான்கு கரங்களின் சந்திப்பு போல இருக்கிறது. தேவாலயத்தில் புனித பிலோமினாவின் சிலை ஒன்றும் உள்ளது. தேவாலயத்தின் இரட்டை கோபுரம் 175 அடி (53 மீ) உயரம் கொண்டது. அவை கொலோன் தேவாலயத்தின் கோபுரத்தையும், நியூயார்க் நகரத்தில் உள்ள புனித பேட்ரிக் தேவாலயத்தின் கோபுரத்தையும் ஒத்திருக்கின்றன. பிரதான மண்டபத்தில் 800 பேர் அமர முடியும், மேலும் கிறிஸ்துவின் பிறப்பு, இறுதி உணவு, சிலுவையில் அறையப்படுதல், உயிர்த்தெழுதல் மற்றும் கிறிஸ்துவின் விண்ணேற்றம் போன்ற காட்சிகளை சித்தரிக்கும் கண்ணாடி ஜன்னல்கள் உள்ளன. இது ஆசியாவின் இரண்டாவது பெரிய தேவாலயமாக கருதப்படுகிறது.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]