ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார்
ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் | |
---|---|
![]() | |
முன்னையவர் | ஜெயச்சாமராஜா உடையார் |
பின்னையவர் | காந்தராஜ அரஸ் |
பிறப்பு | பெப்ரவரி 20, 1953 மைசூர், இந்தியா |
இறப்பு | 10 திசம்பர் 2013 பெங்களூரு, கர்நாடகம், இந்தியா | (அகவை 60)
துணைவர் | பிரமோத தேவி |
மரபு | உடையார் |
தந்தை | ஜெயச்சாமராஜா உடையார் |
தாய் | திரிபுர சுந்தரி அம்மணி |
மதம் | இந்து சமயம் |
கையொப்பம் | ![]() |
ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் (Srikantadatta Narasimharaja Wadiyar) (பெப்ரவரி 20 1953 – டிசம்பர் 10 2013) இவர் மைசூர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக நான்கு முறை காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தெடுக்கப்பட்டார்.[1][2]
அரசர் பரம்பரை[தொகு]
இவர் மைசூர் சமஸ்தானத்தின் 26 வது மற்றும் கடைசி அரசரான ஜெயச்சாமராஜா உடையாரின் மகன் ஆவார்.[3][4][5] இவரது தந்தையை அடுத்து 1974 ஆம் ஆண்டு இவர் மைசூர் மன்னராக பொறுப்பேற்றார். எனினும் அந்தப் பதவி சம்பிரதாய பூர்வமானதாகவே இருந்தது. நவராத்திரி விழாவில் இவரது பங்கு முன்னிலைப் படுத்தப்பட்டது
இறப்பு[தொகு]
டிசம்பர் 10 2013 அன்று பெங்களூரு அரண்மனையில் மாரடைப்பால் காலமானார். டிசம்பர் 11 2013 அன்று அவரது உடல் தங்க அம்பாரியில் நஞ்சன்கூடு கொண்டு செல்லப்பட்டு மனுவனத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.[6]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "மைசூர் 'மகாராஜா' காலமானார்". பி பி சி. 11 திசம்பர் 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "மைசூர் அரச குடும்பத்தின் வாரிசு ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் மாரடைப்பால் மரணம்". தினமணி. 11 திசம்பர் 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தொடங்கியது மைசூர் தசரா விழா". தினமணி. 11 திசம்பர் 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "மைசூர் அரச குடும்ப வாரிசு: ஸ்ரீ கண்டதத்த நரசிம்மராஜ உடையார் காலமானார்". தினமணி. 11 திசம்பர் 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Scion of Mysore royal family passes away". Business Line. 11 திசம்பர் 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்". தினமணி. 11 திசம்பர் 2013 அன்று பார்க்கப்பட்டது.
பகுப்புகள்:
- கர்நாடக அரசியல்வாதிகள்
- 1953 பிறப்புகள்
- 2013 இறப்புகள்
- 8வது மக்களவை உறுப்பினர்கள்
- 9வது மக்களவை உறுப்பினர்கள்
- 11வது மக்களவை உறுப்பினர்கள்
- 13வது மக்களவை உறுப்பினர்கள்
- மைசூர் அரசர்கள்
- பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்
- இந்தியத் துடுப்பாட்டக்காரர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- மைசூர்