ரயில்வே அருங்காட்சியகம், மைசூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுமதிச்சீட்டு வழங்குமிடம்

ரயில்வே அருங்காட்சியகம், மைசூரு இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மைசூரில் அமைந்துள்ள விண்டேஜ் என்ஜின்களின் வெளிப்புற காட்சியகம் ஆகும்.

ரயில் அருங்காட்சியகம் 1979 ஆம் ஆண்டில் இந்திய ரயில்வேயால் நிறுவப்பட்டது, டெல்லியில் உள்ள தேசிய ரயில் அருங்காட்சியகத்திற்குப் பிறகு இதுபோன்ற வகையில் அமைக்கப்பட்ட இரண்டாவது அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகம் கிருஷ்ணராஜா சாகர் சாலையில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு எதிரே அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் என்ஜின்கள் மற்றும் இந்தியாவில் ரயில்வேயின் வளர்ச்சியை சித்தரிக்கும் புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களின் காட்சிக்கூடங்கள் உள்ளன. ரயில்வே சிக்னல்கள் மற்றும் விளக்குகளும் இங்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் பேட்டரி மூலம் இயக்கப்படும் சிறிய ரயில் உள்ளது. இது பேட்டரியில் இயங்குகிறது. அந்த ரயிலில், மைதானத்தில் குழந்தைகள் சிறிது நேரம் பயணிக்க முடியும். இந்த ரயில் குறிப்பாக குழந்தைகள் மத்தியில் பிரபலமானது.

என்ஜின் மாதிரி வடிவம்

வரலாறு[தொகு]

1979 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் இந்திய ரயில்வேயின் வளர்ச்சியில் பல்வேறு கட்டங்களை சித்தரிக்கும் புகைப்படங்கள் மற்றும் பல்வேறு பொருட்களின் தொகுப்புகள் உள்ளன. முன்னதாக அருங்காட்சியகங்களின் கண்காட்சிகளில் பெரும்பாலானவை மைசூர் அரண்மனையில் வைக்கப்பட்டிருந்தன. பின்னர் அவை தற்போதுள்ள இடத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டன. அருங்காட்சியகத்தில் பல அரிய காட்சிப்பொருள்கள் உள்ளன. இவை சுற்றுலாப் பயணிகளை கடந்த காலங்களுக்கு அழைத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளன. பழைய ஸ்ரீரங்கப்பட்டண ரயில் நிலையத்திற்கு சொந்தமான ஒரு மரத் தூண் மற்றும் கதவுகள் மற்றும் ஒரு முக்கிய பகுதிக்கு பயன்படுத்தப்படும் கம்பி வேலி ஆகியவையும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருள்களில் முக்கியமானவையாகும்.[1]

காட்சிப் பொருள்கள்[தொகு]

  • ES 506 4-6-2 எனப்படுகின்ற முதல் லோகோமோட்டிவ் நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
  • ஆஸ்டின் ரயில்-மோட்டார் கார்
  • சோதனை முயற்சியில் ஈடுபட்ட பல கார்கள் உள்ளன. இவற்றுள் சோதனை முயற்சியில் ஈடுபட்ட ஒரு கார் அருங்காட்சியகத்தின் அலுவலமாகச் செயல்படுகிறது.
  • மைசூர் மகாராஜாவைச் சொந்தமான இரண்டு அரசக் குடும்பத்திற்கான ரயில் பெட்டிகள் உள்ளன.
  • 1899 ஆம் ஆண்டுக்கு முந்தைய மஹாராணி சலூன் வண்டி சமையலறை, காரில் இருந்து உணவு உண்ணும் வசதி கொண்ட பிரிவு மற்றும் அரசக் குடும்பத்தினர் பயன்படுத்திய கழிப்பறை ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது.
  • குஷல்கர் - கோஹாட் - தால் ரயில்வே தடத்திற்காக 1900 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு பாக்னல் # 1625 இங்கு உள்ளது. இது இராணுவப் பகுதியில் பயன்படுத்தப்பட்டதாகும். பின்னர் இது வடமேற்கு ரயில்வேக்கு மாற்றப்பட்டது. மரலாவில் உள்ள டிம்பர் டிப்போவில் இது இயக்கப்பட்டது. பின்னர் அது டில்வான் கிரேசோட்டிங்கிற்கு மாற்றப்பட்டது. 2 அடியும் 6 அங்குலமும் கொண்ட இந்த லோகோமோட்டிவ் 2-4-2ST வடிவில் அமையும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
  • சர்ரே அயர்ன் ரயில்வே நிறுவனத்தைச் சேர்ந்த, வட பிரித்தானிய லோகோமொடிவே கம்பெனியால் 1920 ஆம் ஆண்டில் Class E 37244 4-4-4T உருவாக்கப்பட்டது. # 8 வகையைச் சேர்ந்த இது அதிகவெப்பம் கொண்ட லொகோமோட்டிவ்களில் ஒன்றாகும்.
  • பிரிட்டன் தென்னக ரயில்வே நிறுவனத்தைச் சேர்ந்த, WG பக்னால் ஆல் 1932 ஆம் ஆண்டில் தி மைசூர் ஸ்டேட் ரயில்வே நிறுவனத்திற்காக Class TS/1 #37338 2-6-2T உருவாக்கப்பட்டது.
  • ஒரு YP # 2511 1963 இல் டெல்கோ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

ஆஸ்டின் ரயில்வே கார்[தொகு]

ஆஸ்டின் ரெயில் கார்

இடதுபுறத்தில் உள்ள புகைப்படத்தில் உள்ளது 1925 ஆண்டு மாடல் வகையினைச் சார்ந்த ஆஸ்டின் கார் ஆகும், முதலில் சாலையில் இயங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஆட்டோமொபைல் ஆகும். பின்னர் ஒரு ரயில்வே பணியாளர் இதனை பழைய பொருள்களை வாங்கி விற்கின்ற ஒரு வியாபாரியிடம் வாங்கி, அதில் சில மாற்றங்களைச் செய்தார். பின்னர் அது புதிய வடிவம் தந்தார். காருக்கு ரயில் சக்கரங்களைப் பொருத்தினார். அதில் இருந்த ஸ்டீயரிங்கை அகற்றினார். இந்த வகையில் தான் இந்த ரெயில்கார் தனது பயணத்தை ஆரம்பித்தது.ஆய்வு அதிகாரிகளை பாதையில் கொண்டு செல்வதற்காக இது பயன்படுத்தப்பட்டது. இதில் ஆறு பேர் வரை செல்ல முடியும்.

YP 2511[தொகு]

YP2511 டெல்கோ நிறுவனத்தால் 1963 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இது ஒரு மீட்டர் கேஜ் நீராவி இயந்திரம் ஆகும். YP 2511 கொதிகலனின் விவரங்களைக் கொண்ட தட்டில் கொதிகலன் 1957 இல் கட்டப்பட்டதற்கான குறிப்பு பொறிக்கப்பட்டது. ஆதலால் இந்த கொதிகலன் 2352 என்ற எண்ணைப் பெற்றது.

வாக்னல் 119-E[தொகு]

வாக்னல் 119-இ குறுகலான இடைவெளியைக் கொண்ட நீராவி இயந்திரமாகும். இது வாக்னல் அண்ட் கோ நிறுவனத்தார் 1900 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். இந்த இயந்திரம் NWR NG119-E tank locoஎன்ற எண்ணைக் கொண்டிருந்தது. பெங்களூர் மற்றும் தும்கூர் நகரங்களுக்கு இடையே பயன்படுத்தப்பட்டது இந்த நீராவி இயந்திரம் நிலக்கரிக்கு பதிலாக மரத்தைப் பயன்படுத்தியது.

பார்வை நேரம்[தொகு]

மைசூர் ரயில்வே அருங்காட்சியகப் பார்வையாளர் நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஆகும். திங்கட்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் இந்த அருங்காட்சியகம் திறந்திருக்கும். இந்த ரயில்வே அருங்காட்சியகத்தில் அற்புதமான சேகரிப்பை ஆராய பார்வையாளர்களுக்கு குறைந்தபட்ச நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

புகைப்படத்தொகுப்பு[தொகு]