மாண்டி மொகல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாண்டி மொகல்லா (Mandi Mohalla) என்பது இந்தியவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் நகரத்தின் புறநகர்ப் பகுதியாகும். இது கே.டி.தெரு அல்லது அசோகா சாலை என்றும் அழைக்கப்படுகிறது.

அசோகா சாலையில் உள்ள இந்து கோயில்
பிரம்மகுமாரி கோயில், மாண்டி மொகல்லா

அமைவிடம்[தொகு]

மைசூர் நகரத்தின் புறநகர்ப் பகுதியில் மாண்டி மொகல்லா நகரீயம் அமைந்துள்ளது. இது மைசூர் இரயில் நிலைய சந்திப்பின் கிழக்குப் பக்கத்திலும் மைசூர் பேருந்து நிலையத்தின் வடக்குப் பக்கத்திலும் உள்ளது. இர்வின் சாலை மற்றும் வடக்கு முனை பன்னிமந்தாப் மாண்டி மொகல்லாவின் தெற்கு எல்லையாகும். [1]

பொருளாதாரம்[தொகு]

மாண்டி மொகல்லா இரண்டாம் முறை விற்பனையாகும் கைபேசிகள் [2] மற்றும் அதன் உதிரி பாகங்கள் மற்றும் அதை பழுதுபார்க்கும் கடைகளுக்கு பிரபலமான சந்தையாகும். பெரும்பாலான போலி குறுந்தகடுகள் மற்றும் போலி மின்னணு பொருட்கள் இங்கு விற்கப்படுகின்றன. [3] மாண்டி மொகல்லாவில் குற்ற விகிதம் மிக அதிகமாக உள்ளது. மேலும் இது மைசூரின் மிகவும் குற்றங்களுக்கு ஆளாகும் பகுதியாக கருதப்படுகிறது. இங்கே ஒரு தனி காவல் நிலையமும் உள்ளது. [4]

அஞ்சல் அலுவலகம்[தொகு]

மாண்டி மொகல்லாவில் ஒரு அஞ்சல் அலுவலகம் உள்ளது. இதன் குறியீட்டு எண் 570021 ஆகும். [5] மாண்டி மொகல்லாவின் முக்கிய சாலைகள் அசோகா சாலை, கீதா சாலை மற்றும் கே.டி.தெரு ஆகியவை . இங்கு அமைந்துள்ள புனித பிலோமினா தேவாலயம் ஒரு முக்கிய சுற்றுலா அம்சமாகும்.

படத் தொகுப்பு[தொகு]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாண்டி_மொகல்லா&oldid=3567110" இருந்து மீள்விக்கப்பட்டது