குக்கரஹள்ளி ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குக்கரஹள்ளி ஏரி கர்நாடக மக்களாள் குக்கரஹள்ளி கெரெ என்றும் கன்னடத்தில்  வழங்கப்படுகிறது. (கெரே என்றால் கன்னடத்தில் ஏரி என்று பொருள்) இந்த ஏரியானது மைசூர் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது. இவ்வேரியானது மைசூர் பல்கலைக்கழகத்திற்கு அருகிலும், ரங்கயானா ஆலயத்திற்கு அருகிலும், அத்துடன் மத்திய உணவு மற்றும் ஆராய்ச்சி நிறுவனதிற்கு (CFTRI) அருகிலும் உள்ளது. இவ்வேரி மைசூர் நகரத்தின் இதயம் போன்றுள்ளது. மும்மடி கிருஷ்ணராஜ உடையார் (1794–1868) அவர்களால் உருவாக்கப்பட்டது. அவர் மைசூரை ஆண்டபோது இதனை 1864 இல்தோற்றுவித்தார். சுமார் 4000 ஹெக்டர் பரப்பள்வு பாசன வசதி பெற்றுள்ளது.

இது மைசூர் நகர குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இது பல்வேறு ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது, அவற்றை மைசூர் மக்கள் மற்றும் சுற்றியுள்ள விவசாயிகளின் பெரு முயற்சியால் பாதுகாக்கப்படுகிறது. மேலும் பறவைகள் சரணாலயமாக உள்ளது.

அமைவிடம்[தொகு]

இந்த ஏரி மைசூரின் நகரப்பகுதியில் அமைந்துள்ளது. ஏரியிலிருந்து மைசூர் இரயில் நிலையம் 3 கி. மீ தூரம். அருகாமையிலுள்ள விமான நிலையம் மைசூர் விமான நிலையம் 15 கி. மீ தொலைவிலும் உள்ளது.

நீர்பிடிப்பு பகுதி[தொகு]

இந்த ஏரியின் வடிநிலப்பகுதி சுமார் 414 சதுர கீலோமீட்டராகும். இதன் நீர்பிடிப்பு பகுதி 62 ஹெட்டராகும். திவான் பூரனையா பாசனக்கால்வாயின்  நீளம் 27 கி. மீ ஆகும். இக்கால்வாய் ஹெங்கல், போகடி, குன்றிமேலா மற்றும் மானசங்கோடிரி வழியாக செல்கிறது. இவ்வேரி ‘J’ வடிவத்தில் அமைந்துள்ளது. இதன் அதிகபட்ச ஆழம் 5 மீட்டராகும். மணல் மற்றும் களிமண் அமைப்புடன் உயிர் சூழ்நிலைக்கு தகுந்ததாக உள்ளது. என சன்றுகள் கூறுகின்ற்ன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இனைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குக்கரஹள்ளி_ஏரி&oldid=3333140" இருந்து மீள்விக்கப்பட்டது