கரஞ்சி ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரஞ்சி ஏரி
Karanji Lake
அமைவிடம்மைசூர், கருநாடகம்
ஆள்கூறுகள்12°18′10″N 76°40′25″E / 12.30278°N 76.67361°E / 12.30278; 76.67361
வடிநில நாடுகள் இந்தியா

கரஞ்சி ஏரி (கன்னடம்: ಕಾರಂಜಿ ಕೆರೆ), Karanji Lake) இது, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் மைசூர் மாநகரில் அமைந்துள்ள ஒரு ஏரியாகும். இயற்கைப் பூங்காவான, ஒரு பட்டாம்பூச்சி பூங்காவும், மற்றும் பறவைக் கூடுகள் உடனான நடைபாதையாக காட்சியளிக்கும் இடமாகவும் உள்ளது.[1]

சுமார் 90 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி, 55 எக்டேர் அளவிற்கு நீர்பிடிப்பு பகுதியாகவும், மற்றும் 35 எக்டேருக்கு ஓதக்கரை நிலமாகவும் உள்ளது. மேலும் மைசூர் மிருகக்காட்சி சாலையின் கட்டுப்பாட்டில் உள்ள, இந்தியாவின் மிகப்பெரிய பறவைகள் சரணாலயம் ஒன்றும் இந்த ஏரியில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு வருகை தரும் ஆர்வமுள்ளவர்கள் நுழைவுச்சீட்டு பெற்று, மைசூர் உயிரியல் பூங்காவை காண்கிறார்கள். நுழைவுச்சீட்டு மூலம் ஒரு நாளைக்கு மட்டும் சராசரியாக 50,000 ரூபாய் வருமானம் ஈட்டுவதாக கூறப்படுகிறது.[2][3]

பட்டாம்பூச்சி பூங்கா[தொகு]

கரஞ்சி பட்டாம்பூச்சி பூங்கா

கரஞ்சி ஏரிக்குள் சிறிய தீவில் பட்டாம்பூச்சி பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 45 பட்டாம்பூச்சி இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.[4] ஒரு தாவரவியலாளரின் உதவியுடன், பட்டாம்பூச்சிகள் இனப்பெருக்கம் செய்வதற்கு அவசியமான தேன் சுரக்கும் பூக்களை கொண்ட செடிகளை வளர்க்கப்படுகிறது. மேலும், சில பட்டாம்பூச்சிகளை ஈர்க்கும் நோக்கத்துடன் நிறைய தாவரங்கள் அங்குள்ள தீவில் நடப்பட்டு வருகின்றன.[5]

பறவைகள்[தொகு]

கரஞ்சி பறவைகள்

இந்த கரஞ்சி ஏரியில் மஞ்சள் மூக்கு நாரை, கூழைக்கடா, அரிவாள் மூக்கன், நீர்க்காகம், சாம்பல் நாரை, உள்ளான், கரிச்சான் குருவி கொக்கு போன்ற புலம்பெயர் பறவைகளை பார்க்க முடியும். சமீபத்திய ஆய்வில் கரஞ்சி ஏரியில் 147 பறவை இனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.[6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரஞ்சி_ஏரி&oldid=3743880" இருந்து மீள்விக்கப்பட்டது