உள்ளடக்கத்துக்குச் செல்

மைசூர் சந்தன சவக்காரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பரப் படம், ஆண்டு 1937

மைசூர் சந்தன சவக்காரம் (Mysore Sandal Soap; கன்னடம்: ಮೈಸೂರ್ ಸ್ಯಾಂಡಲ್ ಸೋಪ್) என்பது ஒரு நிறுவனத்தின் சோப்பு ஆகும். இது கர்நாடக அரசு நிறுவனமான, கர்நாடக சோப்ஸ் அண்ட் டிடர்ஜண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாகும். இந்த சவர்க்காரம் 1916 முதல் தயாரிக்கப்படுகிறது. இந்நிறுவனம் மைசூர் மன்னரான நான்காம் கிருட்டிணராச உடையாரால் பெங்களூரில் துவக்கப்பட்டது.[1] இந்நிறுவனம் முதன்மையாக மைசூர் நாட்டில் கிடைக்கின்ற சந்தன மரங்களைக் கொண்டு சந்தன எண்ணெய் எடுத்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. ஆனால் முதல் உலகப்போரின் காரணமாக ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்ய இயலாத நிலை ஏற்பட்டது.[1] இந்த ஆலையிலிருந்து 1918 ஆம் ஆண்டிலிருந்து சந்தன சவர்க்காரங்கள் விற்பனைக்கு வந்தன. 1980, இந்நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாக்கப்பட்டு, இந்நிறுவனத்துடன் சிமோகா, மைசூர் ஆகிய இடங்களில் இருந்த சந்தன எண்ணெய் தொழிற்சாலைகளை இதனுடன் இணைத்தனர்.[2] மைசூர் சாண்டல் சோப் ஒன்றுதான் உலகின் 100% சுத்தமான சந்தன எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் சவர்க்காரம் ஆகும்.[1] இது புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது. 2006, ஆண்டு இந்திய துடுப்பாட்ட வீரர் மகேந்திர சிங் தோனி மைசூர் சாண்டலின் விளப்பரத்தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[3]2012 ஆம் ஆண்டு மில்லினியம் எனும் உயர் விலை கொண்ட சவர்க்காரத்தை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 150 கிராம் சவர்க்காரத்தின் விலை ரூ.720 ஆகும். இந்த சவர்க்காரத்தில் 3 விழுக்காடு சுத்தமான சந்தன மர எண்ணெய் சேர்க்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாக உள்ளது. விப்ரோ நிறுவனத் தலைவர் அசிம் பிரேம்ஜி மைசூர் சாண்டல் நிறுவனத்தைக் கையகப்படுத்த முயன்றபோது, இதன் ஊழியர்களின் கடும் எதிர்ப்புக் காரணமாக அந்த முயற்சியைக் கர்நாடக அரசு கைவிட்டது. ஆண்டுக்கு 40-50 கோடி ரூபாய் லாபம் ஈட்டிவரும் அரசு நிறுவனத்தின் பங்குகளை விலக்கிக்கொள்ளும் திட்டம் ஏதும் இல்லை என்றும், எதிர்காலத்தில் ஆண்கள் குழந்தைகளுக்கான பொருட்கள் மற்றும் கிருமி நாசினி ஆகியவையும் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக கர்நாடக அரசின் கூடுதல் தலைமைச் செயல் அதிகாரி ரத்ன பிரபா தெரிவித்தார். [4]

வெளி இணைப்புகள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Bageshree S. (2006-10-28). "Scent of the region". Online Edition of The Hindu, dated 2006-10-28 (Chennai, India: The Hindu). http://www.hindu.com/2006/10/28/stories/2006102819410200.htm. பார்த்த நாள்: 2007-07-31. 
  2. "Profile". Online webpage of the Karnataka Soaps and Detergents Limited. Archived from the original on 16 July 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-07-31.
  3. Madhumathi D. S. "A whiff of cricket". Online Edition of The Hindu Business Line, dated 2006-03-30. The Hindu Business Line. பார்க்கப்பட்ட நாள் 2007-07-31.
  4. "நூறாண்டாய் மாறா மனம்". தி இந்து (தமிழ்). 16 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 22 மே 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைசூர்_சந்தன_சவக்காரம்&oldid=3856554" இலிருந்து மீள்விக்கப்பட்டது