மைசூர் விமான நிலையம்
மைசூர் வானூர்தி நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
உரிமையாளர்/இயக்குனர் | இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||||||||||
சேவை புரிவது | மைசூர், சாமராசநகர், குடகு, ஊட்டி, மாண்டியா, அசன் | ||||||||||
அமைவிடம் | கொல்லேகல் மந்தகாலி நெடுஞ்சாலை, கருநாடகம், இந்தியா | ||||||||||
திறக்கப்பட்டது | 1940 (81 வருடங்களுக்கு முன்னர்) | ||||||||||
உயரம் AMSL | 715 m / 2,347 ft | ||||||||||
ஆள்கூறுகள் | 12°13′48″N 76°39′21″E / 12.23000°N 76.65583°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2019 - மார்ச் 2020) | |||||||||||
| |||||||||||
மைசூர் வானூர்தி நிலையம் (Mysore Airport) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மைசூர் நகரத்தில் இயங்கும் ஒரு விமான நிலையமாகும். இது மண்டகள்ளி விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. மைசூர் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் (6.2 மைல்) தொலைவில் தெற்கே அமைந்துள்ள மண்டகள்ளி கிராமத்திற்கு அருகில் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்திற்கு சொந்தமான இவ்விமான நிலையத்தை இயக்கவும் செய்கிறது. மைசூர் விமான நிலையத்தில் 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, நிலையத்திலிருந்து சென்னை, ஐதராபாத், கொச்சி ,பெங்களூர் மற்றும் கோவா போன்ற நகரங்களுக்கு தினசரி விமான சேவை நடைபெறுகிறது.
1940ஆம் ஆண்டு மைசூர் அரசால் இந்த விமான நிலையம் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. விமான நிலையத்தில் பல ஆண்டுகளாக பயணிகள் சேவையும், இந்திய விமானப்படையின் பயிற்சி விமானங்களும் மற்றும் பிற நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. நிலையத்தில் திட்டமிடப்பட்ட விமானங்களின் சேவைகள் 1990ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையத்தின் விரிவான புதுப்பிப்புகளைத் தொடர்ந்து கிங்பிசர் விமானங்கள் மைசூர் நிலையத்தில் சேவையை தொடங்கியது. மைசூரில் சேவையை பராமரிப்பதில் விமான நிறுவனங்கள் சிரமங்களை எதிர்கொண்டன. ஆயினும்கூட, ட்ரூசெட் விமான நிறுவனம் சென்னையில் இருந்து செப்டம்பர் 2017ஆம் ஆண்டில் விமான சேவையை ஆரம்பித்தது. விமானச் சேவை ஆரம்பித்தவுடன் பெல்காவியில் இருந்து 2வது விமானம் சென்னைக்கு சென்றது. மேலும் இண்டிகோ விமான நிறுவனம் மைசூரிலிருந்து ஐதராபாத்திற்கு 2வது சேவையைத் தொடங்கியது. கூட்டணி விமானங்கள் மற்றும் ட்ரூசெட் விமான நிறுவனம் அனைத்து வழிகளிலும் 85% விமானச் சேவைகளைக் கொண்டுள்ளது.
வரலாறு
[தொகு]1940 ஆம் ஆண்டில் மைசூர் இளவரசரால் 290 ஏக்கர் (120 ஹெக்டேர்) நிலப்பரப்பில் விமான நிலையத்தை நிறுவினார். 1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்தைத் தொடர்ந்து, விமானநிலையத்தின் கட்டுப்பாட்டைக் கர்நாடக அரசு ஏற்றுக்கொண்டது. பிறகு 1950 ஆம் ஆண்டில் மைசூர் விமான நிலையம் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டது.[3] டகோட்டா விமான நிறுவனத்தை பயன்படுத்தி பெங்களூருக்கு பயணிகள் சேவையைத் தொடங்கியது. ஆனால் பயணிகள் சாலை வழியாக பயணம் செய்வது வேகமாக இருப்பதை உணர்ந்ததால் விமானச் சேவை நீண்ட காலம் நீடிக்கவில்லை. அதன்பிறகு தி இந்து நாளிதழ் நிறுவனம் தங்கள் செய்தித்தாள்களை வழங்குவதற்காக சென்னையிலிருந்து பெங்களூர் வழியாக தினசரி விமான சேவைகளைத் தொடங்கியது.[4] இருப்பினும் இந்த விமானங்கள் சில மாதங்கள் மட்டுமே நீடித்தன.[5]
பின்னர் விமானநிலையம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் தனி விமானங்களைப் பயன்படுத்தியது. இவ் விமானங்களின் மூலம் சவகர்லால் நேரு போன்ற பிரமுகர்களை நகரத்திற்கு அழைத்துவர பயன்படுத்தப்பட்டது.[3][5] இந்திய விமானப்படையின் பயிற்சி விமானங்களையும் மைசூர் விமான நிலையத்தில் இயக்கப்பட்டது.[6] மேலும் 1985 ஆம் ஆண்டில், பிராந்திய விமான நிறுவனமான வாயுடாட் தனது டோர்னியர் டோ 228 விமானத்தைப் பயன்படுத்தி பெங்களூரிலிருந்து வாரத்திற்கு மூன்று முறை மைசூருக்கு விமானச் சேவையைத் தொடங்கியது.[3] பெங்களூர் மைசூர் விமானச் சேவையை பிரபல இந்திய எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் திறந்து வைத்தார். அப்போது மைசூர் விமான நிலையம் ஒரு புல் விமானப் பாதையும் மற்றும் ஒரு கழிப்பறைக் கொண்ட முனையம் ஆகியவற்றைக் கொண்டிருந்தது.[7] மிக குறைந்த பயணிகள் வரவால் விமான நிலையம் 1990 ஆம் ஆண்டு முதல் தன் சேவையை நிறுத்திக் கொண்டது.[3][5] the flights ended in 1990.[6]
2005 நவீனமயமாக்கல்
[தொகு]1960 ஆம் ஆண்டு மைசூர் அரசு, தம் விமான நிலையத்தை மேம்படுத்துமாறு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தது.[7] மைசூர் ஒரு பெரிய சுற்றுலாத் துறையைக் கொண்டுள்ளது. மேலும் இது மாநிலத்தில் ஐடி தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதில் இரண்டாவது பெரிய நகரமாகும்.[8] கர்நாடக மாநில அரசும், இந்திய விமான நிலைய ஆணையமும் மைசூர் விமான நிலையத்தை புதுப்பிப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி கையெழுத்திட்டன. இவ் ஒப்பந்தத்தின் மூலம் ஒரு புதிய ஓடுபாதை, பயணிகள் முனையம், பாதுகாப்பு கவசம் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரம் ஆகியவை கட்டப்பட்டது. இதன் மொத்த மதிப்பு சுமார் 82 கோடி (12 மில்லியன் அமெரிக்க டாலர்) செலவு ஆகும்.[9][10] விமானக் கட்டுமானப் பணிகள் 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. ஆனால் பொருளாதார மந்தநிலை காரணமாக, எந்தவொரு விமான நிறுவனமும் விமான நிலையத்திற்கு விமானச் சேவை தொடங்கவில்லை.[11]
மைசூர் விமான நிலையத்தை 2010 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதியன்று அப்போதைய முதல்வர் பி.எசு. எடியூரப்பா திறந்து வைத்தார்.[12] ஆனால் பல விமான நிறுவனங்கள் குறைவான பயணிகள் எண்ணிக்கையையால் விமானங்களைத் தொடங்க தயக்கம் காட்டியது. மேலும் மைசூர் விமான நிலையத்தில் செட் விமானங்களைக் கையாள இயலாததால் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் கிங்பிசர் விமான நிறுவனம் அக்டோபர் மாதம் தசராப் பண்டிகையின் போது சென்னையிலிருந்து பெங்களூர் வழியாக விமானங்களை அறிமுகப்படுத்தியது.[13][14] இந்த விமானங்களை கிங்பிசர் ரெட் என்பவரால் இயக்கப்பட்டது.[15] மேலும் விசய் மல்லையா மோசடி மற்றும் விமான நிறுவனத்தின் திவால்நிலை காரணமாக அடுத்த நவம்பரில் கிங்பிசர் நிறுவனம் மைசூருக்கான சேவையை நிறுத்தியது. இருந்தாலும் விமான சேவை காலத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டது.[16] ஆனால் கிங்பிசர் விமான நிறுவனத்தின் சொந்த நிதி சிக்கல்களைக் தீர்க்க வேண்டியதாயிற்று. அதனால் கிங்பிசர் ரெட் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்தது.[17][18]
பைசுசெட் விமான நிறுவனம் 2013 ஆம் ஆண்டு சனவரி மாதம் மைசூர்-பெங்களூர்-சென்னை வழியைச் சேவையைத் தொடங்கியது.[19] பைசுசெட் விமான நிறுவனம் நட்டத்தில் இருந்ததால், அதன் சேவைகளை ஒழுங்கமைக்க முடியவில்லை. எனவே விமான சேவையை சூலை 2014 ஆம் ஆண்டில் நிறுத்தி வைத்தது. மேலும் சிறிய விமான நிலைய நடவடிக்கைகளை நிறுத்தி, நிதிகளை நிர்வகிப்பதில் கவனம் செலுத்தியது.[20][21] பைசுசெட் விமான நிறுவனம் உள்ளூர் பங்குதாரர்கள் மற்றும் அரசாங்க உறுப்பினர்களுடன் பேசிய பின்னர்மைசூர் திரும்பியது.பின் அதே ஆண்டு அக்டோபரில் அனைத்து சேவைகளையும் ரத்து செய்வதது.[22][23][24] 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏர் இந்தியா நிறுவனம் மாநிலச் சேவையை ஆரம்பித்தது. இந்த நடவடிக்கைக்கு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மாநில அரசு மானியம் வழங்கியது.[25] பெங்களூரு விமானச் சேவைக்கு மிகக் குறைந்த பயணிகளே இருந்தனர். பயணிகளுக்கு நேரமாற்றம் சிரமமானதாக இருந்தது.[26] இரண்டு மாதங்களுக்குப் பிறகு மாநில மானியம் முடிந்தவுடன்ஏர் இந்தியா நிறுவனம் சேவையை நிறுத்தியது.[27]
இந்திய ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான பாரதியா ரிசர்வ் வங்கி நோட் முத்ரான் லிமிடெட் 2016 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி படத்தை அச்சிட்ட ரூபாய் நோட்டுகளை உயர் பாதுகாப்பு அச்சகத்திலிருந்து நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளுக்கு கொண்டு செல்ல மைசூர் விமான நிலையத்தைப் பயன்படுத்தியது.[28]
உள்கட்டமைப்பு
[தொகு]மைசூர் விமான நிலையத்தில் ஒற்றை ஓடுபாதை 09/27, பரிமாணங்கள் 1,740 ஆல் 30 மீட்டர் (5,709 அடி × 98 அடி) அளவைக் கொண்டுள்ளது.[5] மேலும் ஏடிஆர் 72 டர்போபிராப் வகையான விமானங்களுக்கும், அதைப் போன்ற விமானங்களுக்கும் சேவை செய்யும் திறன் கொண்டது. மைசூர் விமான நிலையம் மூன்று பார்க்கிங் நிலையங்கள் உள்ளன. அதில் ஒற்றை செங்குத்தாக டாக்சிவே மூலம் ஓடுபாதையுடன் இணைக்கப்பட்டுள்ளது.[29] மைசூர் விமான நிலையத்தின் பயணிகள் முனையம் 3,250 சதுர மீட்டர் (35,000 சதுர அடி) பரப்பளவு உடையது. இதில் அதிகபட்சம் 150 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும்.[5]
விமான நிறுவனங்கள் மற்றும் இடங்கள்
[தொகு]2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, மைசூர் விமான நிலையத்தில் மூன்று விமானங்கள் சேவை செய்தன.[30][31] அவை 2019 ஆம் ஆண்டு சூன் மாதம் ஐதராபாத் தளத்திலிருந்து அலையன்ஸ் ஏர் நிறுவனமும் , 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ட்ரூசெட் விமான நிறுவனம் சென்னையிலிருந்து மைசூர் வரையும் மற்றும் 2019 ஆம் ஆண்டு இண்டிகோ நிறுவனம் ஐதராபாத்திலிருந்து மைசூருக்கும் தங்கள் சேவையைச் செய்தது. 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 27 முதல்இண்டிகோ நிறுவனம் ஐதராபாத்திலிருந்து முசுறுன் கீழ் உதான் வரை இயக்கத் தொடங்கியது.[32]
வருங்கால திட்டங்கள்
[தொகு]மைசூர் விமான நிலையத்தில் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தின் கீழ், ஓடுபாதை 45 மீட்டர் (9,022 அடி × 148 அடி) 2,750 மீட்டர்பரப்பளவாக ஆக உயர்த்தப்பட்டது. இதனால் போயிங் 737 மற்றும் ஏர்பசு ஏ 320 போன்ற செட் விமானங்களை மைசூர் விமான நிலையத்தில் தரையிறக்க முடிந்தது.[33] மேலும் விமான நிலையதின் மேற்கே இரயில் பாதை இருப்பதால் ஓடுபாதையை மேற்கு நோக்கி நீட்டிக்க முடியாது. அதே நேரத்தில் கிழக்கே விரிவாக்க இயலாத போனது ஏனெனிலில் தேசிய நெடுஞ்சாலை 766 ஐ திசை திருப்ப இயலாது.[34] எனவே மாநில அரசு ஆரம்பத்தில் இந்த திட்டத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்தது. விமான போக்குவரத்து அதிகரிக்கும் வரை நெடுஞ்சாலையை திருப்புவதற்கான செலவு நியாயப்படுத்தப்படும் வரை காத்திருக்க முடிவு செய்தது.[35]
விமானதளத்தின் இரண்டாம் கட்டம் புதுப்பித்தல் சித்தராமையா நிர்வாகத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் ஓடுபாதையின் அடியில் NH 766 சுரங்கப்பாதையை ஆரம்பிப்பதால், நெடுஞ்சாலையை விலக்குவதை விட குறைவான நிலம் இதற்கு தேவைப்படும்.[36][37] ஆனால் பாதுகாப்பு காரணங்களைக் சுட்டிக்காட்டி.மத்திய அரசு இந்த திட்டத்தை நிராகரித்தது[36].ஆயினும் டெக்கான் குரோனிக்கிள் இதழின் அறிக்கையில் ஆகஸ்ட் 2016 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் நெடுஞ்சாலையின் சுரங்கப்பாதை தொடர்பாக ஆய்வு நடத்துமாறு விமான நிலைய அதிகாரிகளுக்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளது.[37]
மேற்கண்ட திட்டத்திற்கு 17 மே 2018 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் தேதியன்று மத்திய அரசு அனுமதி அளித்தது. இத் திட்டத்தின் படி தற்போதுள்ள ஓடுபாதை 2750 மீட்டராக விரிவுபடுத்தப்பட்டது.[38]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "traffic news Mar2K19Annex3 pdf" (PDF). பார்க்கப்பட்ட நாள் 7 January 2020.
- ↑ "traffic-news Mar2K19Annex2 pdf" (PDF). www.aai.aero. பார்க்கப்பட்ட நாள் 7 January 2020.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Vattam, Krishna (19 October 2009). "Tale of an airstrip: Then and now". டெக்கன் ஹெரால்டு இம் மூலத்தில் இருந்து 21 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160521213725/http://www.deccanherald.com/content/31260/down-memory-lane.html.
- ↑ Satya, Gouri (19 November 2011). "Mysore no longer connected by air". பிசினஸ் ஸ்டாண்டர்ட் இம் மூலத்தில் இருந்து 5 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305035718/http://smartinvestor.business-standard.com/market/Marketnews-94750-Marketnewsdet-Mysore_no_longer_connected_by_air.htm#.V0DVMhVf3IX.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 "Mysore airport resurrected". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 4 October 2010 இம் மூலத்தில் இருந்து 21 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160521213827/http://www.business-standard.com/article/economy-policy/mysore-airport-resurrected-110100400066_1.html.
- ↑ 6.0 6.1 "Connect India, the AAI way" (PDF). Cruising Heights. Newsline Publications. October 2011. pp. 70–71. Archived from the original (PDF) on 11 September 2014. பார்க்கப்பட்ட நாள் 21 May 2016.
[Mysore Airport] was used for scheduled flight operations by Vayudoot with Dornier aircraft till 1990. The Indian Air Force/NCC used the strip for training flights apart from sporadic use by small private charter flights.
- ↑ 7.0 7.1 Narayan, R. K. (1993). Salt & Sawdust: Stories and Table Talk. New Delhi: Penguin Books India. pp. 125–126. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780140236705.
- ↑ "Work in swift pace for Mysore Airport upgradation". ஒன்இந்தியா. United News of India. 8 July 2007 இம் மூலத்தில் இருந்து 22 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160522234054/http://www.oneindia.com/2007/07/08/work-in-swift-pace-for-mysore-airport-upgradation-1183871100.html.
- ↑ "Stage set for upgrading of Mysore airport". தி இந்து. 7 October 2005 இம் மூலத்தில் இருந்து 22 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160522234151/http://www.thehindu.com/2005/10/07/stories/2005100720690100.htm.
- ↑ "Mysore airport inaugurated". தி இந்து. 16 May 2010 இம் மூலத்தில் இருந்து 22 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160522235403/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/mysore-airport-inaugurated/article768405.ece.
- ↑ Kumar, R. (10 November 2009). "Commercial flights yet to take off at Mysore airport". தி இந்து இம் மூலத்தில் இருந்து 22 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160522234500/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/commercial-flights-yet-to-take-off-at-mysore-airport/article136478.ece.
- ↑ "Mysore airport inaugurated". தி எகனாமிக் டைம்ஸ். Press Trust of India. 15 May 2010 இம் மூலத்தில் இருந்து 22 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160522234800/http://articles.economictimes.indiatimes.com/2010-05-15/news/27568764_1_mysore-airport-royal-city-new-airport.
- ↑ "Mysore takes off amid fanfare". டெக்கன் ஹெரால்டு. 1 October 2010 இம் மூலத்தில் இருந்து 22 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160522235632/http://www.deccanherald.com/content/101219/content/217419/no-entry-rules.html.
- ↑ "Kingfisher airlines to fly to Mysore". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 18 September 2010 இம் மூலத்தில் இருந்து 22 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160522235743/http://www.newindianexpress.com/states/karnataka/article302804.ece.
- ↑ "Mysore airport to start flight operations from October 1". தி இந்து. 18 September 2010 இம் மூலத்தில் இருந்து 22 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160522235133/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/mysore-airport-to-start-flight-operations-from-october-1/article696514.ece.
- ↑ Raghuram, M. (9 November 2011). "Kingfisher's flights to Mysore grounded". Daily News and Analysis இம் மூலத்தில் இருந்து 21 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140221040734/http://www.dnaindia.com/bangalore/report-kingfisher-s-flights-to-mysore-grounded-1609804.
- ↑ "Kingfisher Airline to temporarily suspend services to Mysore". தி இந்து. 7 November 2011 இம் மூலத்தில் இருந்து 23 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160523000816/http://www.thehindu.com/todays-paper/tp-national/kingfisher-airline-to-temporarily-suspend-services-to-mysore/article2605044.ece.
- ↑ "Kingfisher in Red, ends dream run in Mysore". டெக்கன் ஹெரால்டு. 8 November 2011 இம் மூலத்தில் இருந்து 3 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151003033355/http://www.deccanherald.com/content/203513/kingfisher-red-ends-dream-run.html.
- ↑ "SpiceJet inaugurates new domestic route". Anna.aero. 15 January 2013. http://www.anna.aero/2013/01/15/spicejet-inaugurates-new-domestic-route/.
- ↑ Khan, Laiqh (2 September 2014). "SpiceJet cancels services to Mysore again". தி இந்து இம் மூலத்தில் இருந்து 23 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160523001841/http://www.thehindu.com/news/national/karnataka/spicejet-cancels-services-to-mysore-again/article6370824.ece.
- ↑ D'Souza, Vincent (29 July 2014). "Shadow Over Dasara as SpiceJet May Stop Mysore Services". தி நியூ இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 10 August 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140810010304/http://www.newindianexpress.com/states/karnataka/Shadow-Over-Dasara-as-SpiceJet-May-Stop-Mysore-Services/2014/07/29/article2353923.ece.
- ↑ Kumar, R. (15 August 2014). "SpiceJet to reopen bookings from Mysore". தி இந்து இம் மூலத்தில் இருந்து 23 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160523003340/http://www.thehindu.com/news/national/karnataka/spicejet-to-reopen-bookings-from-mysore/article6319147.ece.
- ↑ "SpiceJet to resume Mysore-Bangalore service from September 16". தி இந்து. 5 September 2014 இம் மூலத்தில் இருந்து 29 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141129230734/http://www.thehindu.com/news/national/karnataka/spicejet-to-resume-mysorebangalore-service-from-september-16/article6384131.ece.
- ↑ B., Sreekantswamy (17 October 2014). "Mysore airport stares at bleak future yet again". டெக்கன் ஹெரால்டு இம் மூலத்தில் இருந்து 21 October 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141021125005/http://www.deccanherald.com/content/436543/mysore-airport-stares-bleak-future.html.
- ↑ Kumar, R. (3 September 2015). "Alliance Air launches Bengaluru-Mysuru service". தி இந்து இம் மூலத்தில் இருந்து 23 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160523004247/http://www.thehindu.com/news/national/karnataka/alliance-air-launches-bengalurumysuru-service/article7611239.ece.
- ↑ "Poor response may leave Mysuru without air service". டெக்கன் ஹெரால்டு. 8 October 2015 இம் மூலத்தில் இருந்து 23 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160523004423/http://www.deccanherald.com/content/505161/poor-response-may-leave-mysuru.html.
- ↑ "Air Alliance suspends Mysuru-Bengaluru flight". Webindia123.com. United News of India. 20 November 2015 இம் மூலத்தில் இருந்து 5 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305011144/http://news.webindia123.com/news/articles/India/20151120/2729531.html.
- ↑ S, Kaushala (12 November 2016). "Shoddily-treated Mysuru airport plays its role flying new currency". Bangalore Mirror. http://timesofindia.indiatimes.com/city/bengaluru/shoddily-treated-mysuru-airport-plays-its-role-flying-new-currency/articleshow/55383218.cms. பார்த்த நாள்: 12 November 2016.
- ↑ Aerodrome Data Mysore Airport (VOMY) (PDF) (Report). Airports Authority of India. 29 October 2015. pp. 9–10. Archived from the original (PDF) on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 22 May 2016.
- ↑ "TruJet Schedule for May-June 2019" (PDF). TruJet. Archived from the original (PDF) on 23 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 15 June 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Alex Arakal, Ralph (7 June 2019). "Now, Bangalore to Mysore in 55 minutes; flight service launched". இந்தியன் எக்சுபிரசு. https://indianexpress.com/article/cities/bangalore/now-bangalore-mysore-flight-55-minutes-alliance-air-india-udan-5752021/. பார்த்த நாள்: 15 June 2019.
- ↑ "New Flights Information, Status & Schedule | IndiGo". www.goindigo.in.
- ↑ "Mysore airport to be ready soon". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 26 June 2008 இம் மூலத்தில் இருந்து 24 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160524232621/http://www.rediff.com/money/report/mysore/20080626.htm.
- ↑ Kumar, R. (4 August 2014). "Ministers differ over issue of airport expansion". தி இந்து இம் மூலத்தில் இருந்து 24 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160524232700/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/ministers-differ-over-issue-of-airport-expansion/article6279082.ece.
- ↑ "Government to go slow on Phase II of Mysore airport". தி இந்து. 26 February 2009 இம் மூலத்தில் இருந்து 24 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160524232756/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/government-to-go-slow-on-phase-ii-of-mysore-airport/article362748.ece.
- ↑ 36.0 36.1 Aravind, H. (4 November 2014). "Mysore Airport expansion plan remains grounded". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 26 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150926001452/http://timesofindia.indiatimes.com/city/mysuru/Mysore-Airport-expansion-plan-remains-grounded/articleshow/45036550.cms.
- ↑ 37.0 37.1 P., Shilpa (27 August 2016). "Hurdles over? Mysuru airport runway to have NH tunnel below". டெக்கன் குரோனிக்கள். http://www.deccanchronicle.com/nation/current-affairs/270816/hurdles-over-mysuru-airport-runway-to-have-nh-tunnel-below.html. பார்த்த நாள்: 26 October 2016.
- ↑ "Runway Expansion, Underpass Near Mysore Airport Gets Nod". 17 May 2018. https://starofmysore.com/runway-expansion-underpass-near-mysore-airport-gets-nod/.