மைசூர் பட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைசூர் பட்டு
Mysore Silk Saree.jpg
தங்க சரிகை வேலைப்பாடுள்ள மைசூர் பட்டுப்புடவை
குறிப்புமைசூரில் நெசவு செய்யப்பட்ட பட்டு புடவை
வகைகைத்தொழில்
இடம்மைசூர், கருநாடகம்
நாடுஇந்தியா
பொருள்பட்டு
அதிகாரப்பூர்வ இணையதளம்http://www.ksicsilk.com

மைசூர் பட்டு (Mysore Silk) என்பது இந்தியாவிலுள்ள கர்நாடகாவில், முக்கியமாக மைசூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒருவகை பட்டுப்புடவை ஆகும். இந்திய நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்தம் 20,000 மெட்ரிக் டன் மல்பெரி பட்டுகளில் 9,000 மெட்ரிக் டன் மல்பெரி பட்டு கர்நாடக மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் நாட்டின் மொத்த மல்பெரி பட்டு உற்பத்தியில், இந்த மாநிலம் கிட்டத்தட்ட 45% பங்களிப்பு செய்கிறது. [1] இது கே.எஸ்.ஐ.சி இன் கீழ் காப்புரிமை பதிவு செய்யப்பட்ட தயாரிப்பு ஆகும். கே.எஸ்.ஐ.சி நிறுவனம், மைசூர் பட்டுப்புடவையின் தர அடையாள உரிமையாளராக உள்ளது.

வரலாறு[தொகு]

முதன்முதலில், கி.பி.1780-1790 வரையிலான திப்பு சுல்தானின் ஆட்சிக் காலத்தில் மைசூர் இராச்சியத்தில் பட்டுத் தொழிலின் வளர்ச்சி காணப்பட்டது. [2] பின்னர் இது உலகளாவிய மந்தநிலை , மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பட்டு மற்றும் ரேயான் வகை இழைகளால் ஏற்பட்ட போட்டியின் காரணமாக பாதிக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், இது மீண்டும் புத்துயிர் பெற்றது. மேலும், மைசூர் மாநிலம் இந்தியாவில் சிறந்த மல்டிவோல்டின் பட்டு உற்பத்தியாளராக ஆனது.

மைசூர் பட்டின் தோற்றம்[தொகு]

மைசூர் பட்டு வகையினை, கர்நாடகா சில்க் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (கே.எஸ்.ஐ.சி) தயாரிக்கிறது. இந்த தொழிற்சாலை 1912 ஆம் ஆண்டில் மைசூர் மகாராஜா ஸ்ரீ நல்வாடி கிருஷ்ணராஜா உடையார் என்பவரால் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில், அரச குடும்பத்தின் தேவைகள் மற்றும் அலங்கார துணிகளை அவர்களின் ஆயுதப் படைகளுக்கு பூர்த்தி செய்வதற்காக பட்டு துணிகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டன. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, மைசூர் மாநில பட்டு வளர்ப்புத் துறை பட்டு நெசவுத் தொழிற்சாலையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது. [3] 1980 ஆம் ஆண்டில், இந்த தொழிற்சாலை கர்நாடக தொழில்துறை அரசாங்கமான கே.எஸ்.ஐ.சி.க்கு ஒப்படைக்கப்பட்டது. [4] இன்று, மைசூர் பட்டு தயாரிப்புகளில் பட்டுப்புடவைகள், சட்டைகள், குர்தாக்கள், பட்டு வேட்டிகள் மற்றும் கழுத்தணிகள் ஆகியவை அடங்கும். மைசூர் பட்டு, புவிசார் குறியீடு அடையாளத்தையும் பெற்றுள்ளது. [5]

செயல்முறை[தொகு]

மைசூர் மையத்தில் அமைந்துள்ள மைசூர் பட்டு தொழிற்சாலை ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ளது. மேலும், இது, முக்கியமான பட்டு நெசவு மற்றும் பட்டு பொருட்களின் விநியோகத்திற்கு பொறுப்பாகும். இந்த தொழிற்சாலையின் பட்டுக்கான முக்கிய ஆதாரம் கர்நாடகாவின் ராம்நகர மாவட்டத்தைச் சேர்ந்தது. இது ஆசியாவில் பட்டு கூடுகளுக்கான மிகப்பெரிய சந்தையாகும். [6]  இந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தினமும் இந்த இடத்தில் பட்டு கூடுகளை விற்பனை செய்கிறார்கள். அரசாங்க ஏலச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக மைசூர் பட்டுத் துறையில் தினசரி நிபுணத்துவம் பெற்ற கே.எஸ்.ஐ.சி அதிகாரிகளிடமிருந்து இந்த சந்தையில் பட்டு கூடுகள் எடுக்கப்படுகின்றன. மேலும் அவை டி.நரசிபுராவில் அமைந்துள்ள மூல பட்டு உற்பத்தி தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகின்றன. இந்த தொழிற்சாலையில், பட்டு கூடுகள், நூல்களைப் பிரித்தெடுப்பதற்காக, வேகவைக்கப்பட்டு நூல் சுருள்களாக மாற்றப்பட்டு மைசூரில் அமைந்துள்ள நெசவுத் தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகின்றன. இந்த நூல்கள் பல்வேறு பட்டுப் பொருட்களை உற்பத்தி செய்யப் பயன்படுகின்றன, அவற்றில் மைசூர் பட்டுச் சேலை மிகவும் பிரபலமானது.

மைசூர் பட்டுச் சேலை சரிகையில் 65% தூய வெள்ளி மற்றும் 0.65% தங்கம் இருப்பதால், இது இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த பட்டு சேலைகளில் ஒன்றாக உள்ளது. [7] இந்த விலை உயர்வு, கே.எஸ்.ஐ.சி என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி மைசூர் பட்டு சேலை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் தனியார் உற்பத்தியாளர்களுக்கு வழிவகுத்தது. இந்த சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக, கே.எஸ்.ஐ.சி தனது தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு மைசூர் பட்டுச் சேலைகளிலும் தனித்துவமான குறியீடு, முப்பரிணாம படிம அடிப்படையிலான வடிவமைப்பு மற்றும் தனித்துவமான அடையாள பார்கோடு நெசவுகளை செயல்படுத்தியுள்ளது.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Visualization Engine v3.0". visualize.data.gov.in. 2018-09-12 அன்று பார்க்கப்பட்டது.
  2. R.k.datta (2007). Global Silk Industry: A Complete Source Book. APH Publishing. பக். 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8131300870. https://books.google.com/books?id=A8U1lmEGEdgC. பார்த்த நாள்: 22 January 2013. 
  3. Karnataka, Official Website of Government of Karnataka, GOK, Government of. "Home". www.karnataka.gov.in (ஆங்கிலம்). 2018-12-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-12-03 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Ksic Silks". www.ksicsilk.com (ஆங்கிலம்). 2018-12-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-12-03 அன்று பார்க்கப்பட்டது.
  5. http://www.ipindia.nic.in/writereaddata/Portal/IPOJournal/1_317_1/Journal_86.pdf
  6. Ramanagara
  7. https://timesofindia.indiatimes.com/city/bengaluru/mysore-silk-saris-get-a-kasuti-makeover/articleshow/70563100.cms
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைசூர்_பட்டு&oldid=3568965" இருந்து மீள்விக்கப்பட்டது