உள்ளடக்கத்துக்குச் செல்

முசுக்கொட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முசுக்கொட்டை
வெண் முசுக்கொட்டை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Rosids
வரிசை:
Rosales
குடும்பம்:
Moraceae
சிற்றினம்:
Moreae[1]
பேரினம்:
முசுக்கொட்டை

இனங்கள்

See text.

முசுக்கொட்டை ( Mulberry) என்பது ஒரு தாவரப் பேரினத்தின் பெயராகும். இப்பேரினத்தைச் சேர்ந்த தாவர இனங்கள் அனைத்தும் இப்பொதுப் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. இத்தாவரத்தின் இலைகளே பட்டுப்புழு வளர்ப்பில் பட்டுப்புழுவிற்கு மிக முக்கியமான உணவாக இருக்கிறது. இத்தாவரம் முதல் 60 நாட்களில் 6 அடி உயரம் வரை வேகமாகவும், அதிகபட்சமாக 30 அடி வரை மெதுவாகவும் வளரக்கூடியது.

பயன்கள்

[தொகு]

இத்தாவரத்தின் இலைகள் பட்டுப்புழுவிற்கு மிக முக்கியமான அடிப்படை உணவாகவும், ஆடு மற்றும் பால்மாடுகளுக்கு சிறந்த தீவனமாகவும் பயன்படுகிறது.

இதன் பழுத்த பழம் கருநீல நிறத்தில் வசீகரமான தோற்றத்திலும், மிகுந்த சுவையுடனும் இருக்கும். முசுக்கொட்டைப்பழம் மருத்துவகுணம் உடையது.[2]

முசுக்கொட்டை இனங்கள்

[தொகு]

முசுக்கொட்டை தாவர இனங்கள் 1100 க்கும் மேற்பட்டவை, தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள மத்திய பட்டு வளர்ச்சி மற்றும் ஆரய்ச்சி கழகம் கண்காட்சி வளாகத்தில் உள்ளது.[3] எம்.ஆர்.-2, வி-1 மற்றும் எஸ்-36 ஆகிய இனங்களும் அதிக விளைச்சலைக் (மகசூலைக்) கொடுக்கக்கூடிய பட்டு வளர்ப்பிற்கு ஏற்ற இனங்கள் ஆகும்.

எம்.ஆர்.-2(Mildew Resistant Variety –2) இனம்

[தொகு]
எம்.ஆர்.-2இனம்

இந்த இனம் 1970 ல் தமிழ்நாடு பட்டு வளர்ச்சி துறையிணரால் மேன்மை செய்யப்பட்டு வெளியிடப்பட்டது நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது, வறட்சியான நிலப்பகுதிகளுக்கு ஏற்றது. ஒரு வருடத்தில் 10,000 - 12,000 கிலோ இலை உற்பத்தி கிடைக்கும்[4]

வி-1 (V-1) இனம்

[தொகு]
(V-1) இனம்

இந்த இனம் 1997ல் மைசூரில் உள்ள பட்டு ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இது ஒரு பிரபலமான இனம் ஆகும். இலைகள் நீள்வட்ட வடிவமாகவும், அகலமாகவும், அடர்பச்சையாகவும் சதைப்பற்றாகவும் இருக்கும். ஒரு ஏக்கருக்கு, ஒரு வருடத்தில் 20,000 - 24,000 கிலோ இலை உற்பத்தி கிடைக்கும்[5]

எஸ்-36 (S-36) இனம்

[தொகு]

இந்த இனம் 1986,ல் மைசூரில் உள்ள பட்டு ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இலைகள் இதயவடிவில், தடிமனாகவும், இளம்பச்சையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். இலைகள் அதிகமான ஈரப்பதத்தையும், சத்துக்களையும் பெற்றிருக்கும். ஒரு ஏக்கரில், வருடத்திற்கு 20,000 - 24,000 கிலோ தரமான இலைகள் உற்பத்தியாகும்.

நோய்த்தாக்குதல்

[தொகு]

முசுக்கொட்டை இலைகளில் பூச்சி இனப்பெருக்க காலமான நவம்பர் முதல் பிப்ரவரி வரையுள்ள மாதங்களில் அதிக அளவு புழுத்தாக்குதலினால் இலைச்சேதம் ஏற்படும். சேதத்தை கட்டுப்படுத்த டைக்குளோர்வோஸ் (Dichclorvos) இரசாயன பூச்சி கொல்லி மருந்தினை 1லி தண்னீரில் 2மிலி மருந்து என்ற விகிதத்தில் தெளிக்கவேண்டும்.


புகைப்பட தொகுப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Morus L." Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2009-01-16. Archived from the original on 2013-06-23. பார்க்கப்பட்ட நாள் 2009-03-11.
  2. http://www.kumaritoday.com/newsdetail.php?news_id=93&id=6[தொடர்பிழந்த இணைப்பு]
  3. http://www.silkgermplasm.com/
  4. http://www.tnsericulture.gov.in/prototype2/Mulvarieties.htm
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-11-03. பார்க்கப்பட்ட நாள் 2011-11-22.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=முசுக்கொட்டை&oldid=3679573" இலிருந்து மீள்விக்கப்பட்டது