உள்ளடக்கத்துக்குச் செல்

கஜுராஹோ

ஆள்கூறுகள்: 24°51′00″N 79°55′30″E / 24.85000°N 79.92500°E / 24.85000; 79.92500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கஜுராஹோ
நகரம்
கஜுராஹோ is located in மத்தியப் பிரதேசம்
கஜுராஹோ
கஜுராஹோ
கஜுராஹோ is located in இந்தியா
கஜுராஹோ
கஜுராஹோ
ஆள்கூறுகள்: 24°51′00″N 79°55′30″E / 24.85000°N 79.92500°E / 24.85000; 79.92500
Country இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்சத்தர்பூர்
ஏற்றம்
283 m (928 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்24,481
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுMP-16
பாலின விகிதம்1100 /

கஜுராஹோ (Khajuraho, ஒலிப்பு உதவி) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில், சத்தர்பூருக்கு அருகிலுள்ள ஒரு நகரம் ஆகும். இந்தியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கஜுராஹோ, மிகப்பெரிய அளவிலான இடைக்கால இந்து மற்றும் சைன கோயில்களைக் கொண்டுள்ளது. இது அதில் உள்ள சிற்றின்ப சிற்பங்களுக்கு பிரபலமானது. கஜுராஹோ நினைவுச்சின்னங்களின் தொகுதி 1986-ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக பட்டியலிடப்பட்டு இந்தியாவின் "ஏழு அதிசயங்களில்" ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நகரத்தின் பழைய பெயரான "கர்ஜுரவஹாகா" என்பது சமசுகிருத சொல்லான கர்ஜூர் என்பதிலிருந்து பெறப்பட்டது, அதாவது "பேரீச்சை " என்பது அதன் பொருளாகும்.

வரலாறு[தொகு]

இப்பகுதியானது வரலாற்று ரீதியாக பல இராச்சியங்கள் மற்றும் பேரரசுகளின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக இருந்துள்ளது. கஜுராகோவை தன் ஆட்சிப் எல்லைக்குள் வைத்திருந்ததாக அறியப்பட்ட முதல் அரசு வத்சா ஆகும். அவர்களுக்குப் பிறகு மௌரியர்கள், சுங்கர்கள், குசானர்கள், பத்மாவதி நாகர்கள், வாகட மரபினர், குப்தர்கள், புஷ்யபூதி மரபினர், கூர்ஜர-பிரதிகார வம்சத்தினர் ஆகியோர் இப்பகுதியை ஆண்டனர். குறிப்பாக குப்தர்கள் காலத்தில்தான் இந்த பகுதியில் கட்டிடக்கலை மற்றும் பிற கலைகள் செழிக்க தொடங்கியது. இருப்பினும் அவர்களுக்குப் பின் வந்தவர்களும் கலை பாரம்பரியத்தை தொடர்ந்தனர்.[1]

ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து சந்தேலர்கள் இப்பகுதியை ஆட்சி செய்தனர். அவர்கள் கூர்ஜர-பிரதிகாரர்களுக்கு அடங்கியவர்களாக இருந்தனர். தங்காவின் ஆட்சியின் போது (சு. 950-1002) சந்தேலர்கள் விடுதலைப் பெற்றனர். மேலும் இந்த காலத்தில் பல முக்கியமான கோயில்கள் அவர்களால் கட்டப்பட்டன. சந்த்தேலர்கள் முதலில் 1182 இல் சாகம்பரியின் சௌகான்கள்களிடமிருந்தும், பின்னர் 1202 இல் குத்புத்தீன் ஐபக்கிடமிருந்தும் மரண அடிகளை எதிர்கொண்டனர். சந்தேலாக்கள் தங்கள் செயல்பாடுகளை மஹோபா, கலிஞ்சர், அஜயகர் கோட்டைகளுக்கு மாற்றியதால் கஜுராஹோ ஒரு சிற்றூராக நலிவுற்றது. [1]

இப்னு பதூதா கர்ஜுராஹோவிற்கு பயணம் மேற்கொண்டு, கோயில்கள் மற்றும் சில துறவிகள் இருப்பதை விவரித்தார். 1495 இல் சிக்கந்தர் லௌதியால் சில கோயில்கள் சேதப்படுத்தப்பட்டன. 16 ஆம் நூற்றாண்டில் கஜுராஹோ முக்கியத்துவமற்ற இடமாக மாறியது. 1819 இல் சிஜே பிராங்க்ளின் (ஒரு இராணுவ அளவையாளர்) அவர்களால் கஜுராகோ "மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது". இருப்பினும், கஜுராஹோவை மீண்டும் உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்தற்கான பெருமை, 1838 இல் அதைப் பார்வையிட்ட டிஎஸ் பர்ட்டுக்கு (ஒரு பிரித்தானிய இராணுவத் தலைவர்) வந்து சேர்ந்தது. 1852 மற்றும் 1855 இக்கு இடையில் அலெக்சாண்டர் கன்னிங்காம் கஜுராகோவை பார்வையிடவர் ஆவர்.[1]

காலநிலை[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், கஜுராஹோ (1981–2010, உச்சநிலை 1970–2010)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 34.3
(93.7)
38.6
(101.5)
43.1
(109.6)
46.9
(116.4)
48.4
(119.1)
48.0
(118.4)
45.0
(113)
41.0
(105.8)
39.3
(102.7)
42.8
(109)
37.6
(99.7)
32.8
(91)
48.4
(119.1)
உயர் சராசரி °C (°F) 24.1
(75.4)
28.0
(82.4)
34.3
(93.7)
40.1
(104.2)
42.8
(109)
40.4
(104.7)
34.3
(93.7)
32.5
(90.5)
33.2
(91.8)
33.8
(92.8)
30.1
(86.2)
26.1
(79)
33.3
(91.9)
தாழ் சராசரி °C (°F) 8.4
(47.1)
10.8
(51.4)
15.8
(60.4)
21.9
(71.4)
26.9
(80.4)
28.4
(83.1)
26.3
(79.3)
25.3
(77.5)
24.1
(75.4)
19.0
(66.2)
13.3
(55.9)
9.2
(48.6)
19.1
(66.4)
பதியப்பட்ட தாழ் °C (°F) 1.0
(33.8)
0.6
(33.1)
6.3
(43.3)
12.6
(54.7)
18.6
(65.5)
21.5
(70.7)
22.4
(72.3)
21.8
(71.2)
17.3
(63.1)
11.7
(53.1)
4.8
(40.6)
3.1
(37.6)
0.6
(33.1)
மழைப்பொழிவுmm (inches) 17.8
(0.701)
22.8
(0.898)
10.6
(0.417)
6.5
(0.256)
15.7
(0.618)
100.0
(3.937)
293.7
(11.563)
377.0
(14.843)
211.6
(8.331)
33.9
(1.335)
6.7
(0.264)
3.8
(0.15)
1,100.0
(43.307)
ஈரப்பதம் 47 37 24 17 20 40 69 76 68 48 44 48 45
சராசரி மழை நாட்கள் 1.3 1.6 0.9 0.8 1.5 5.5 13.0 13.6 8.7 1.7 0.5 0.6 49.9
ஆதாரம்: India Meteorological Department[2][3]

மக்கள்தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, கஜுராஹோவின் மக்கள் தொகை 24,481 என்று இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இவர்களில் 52% ஆண்களும், 48% பெண்களுமாவர். கஜுராஹோவின் சராசரி கல்வியறிவு விகிதம் 53% ஆகும். இது தேசிய சராசரி கல்வியறிவு விகிதமான 74.04% ஐ விடக் குறைவாகும். மக்களின் கல்வியறிவில் ஆண்களின் கல்வியறிவு 62%, பெண்களின் கல்வியறிவு 43% என உள்ளது. கஜுராஹோவில், 19% விகித்தத்தினர் ஆறு வயதுக்குட்பட்டவர்களவர்.

போக்குவரத்து[தொகு]

வானூர்தி[தொகு]

கஜுராஹோ வானூர்தி நிலையத்தில் இருந்து தில்லி மற்றும் வாரணாசிக்கு வானூர்திகள் உள்ளன. கஜுராஹோ நகருக்கு தெற்கே மூன்று கிமீ தொலைவில் உள்ள இந்த வானூர்தி நிலையம், அருகிலுள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான கோவில் வளாக சுற்றுலா வசதிக்காக திறக்கப்பட்டது. [4] இந்த வானூர்தி நிலையத்தின் அமைவிடம் மற்றும் உலக பாரம்பரிய தளம் மற்றும் சுற்றுச்சூழலில் அதன் தாக்கம் குறித்து நிபுணர்களால் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.

தொடருந்து[தொகு]

கஜுராஹோ தொடருந்து நிலையத்தில் இருந்து சத்தர்பூர், திகம்கர், ஜான்சி, குவாலியர், ஆக்ரா, மதுரா வழியாக தில்லிக்கு தினசரி தொடருந்து போக்குவரத்து மூலம் நகரம் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து ஆக்ரா, ஜெய்ப்பூர், போபால், உதய்பூர் ஆகிய நகரங்களுக்கு தினசரி தொடருந்து போக்குவரத்தது உள்ளது. கான்பூருக்கு உள்ளூர் தினசரி தொடருந்து ஒன்றும் உள்ளது. வாரணாசிக்கு வாரத்திற்கு மூன்று போக்குவரத்து உள்ளது. தற்போது, கஜுராஹோ, குருக்ஷேத்ரத்தில் இருந்து தொடங்கும் கீதா ஜெயந்தி விரைவு தொடருந்து மற்றும் ஹஸ்ரத் நிசாமுதீன் தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் உத்தரபிரதேச சம்பர்க் கிராந்தி விரைவு வண்டி ஆகிய இரண்டு தொடருந்துகள் வழியாக புது தில்லியுடன் தொடருந்து மூலம் இணைக்கப்பட்டுள்ளது. [5]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Schellinger, Paul; Salkin, Robert, eds. (1996). International Dictionary of Historic Places, Volume 5: Asia and Oceania. Chicago: Fitzroy Dearborn Publishers. pp. 468–469. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-884964-04-4.
  2. "Station: Khajuraho Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 409–410. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 29 December 2020.
  3. "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M121. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 29 December 2020.
  4. "Khajuraho airport equipped with infrastructure to boost tourism: Union minister Ganpathi Raju". Pradesh18.com. Press Trust of India. 23 January 2016. http://english.pradesh18.com/news/bihar/khajuraho-airport-equipped-with-infrastructure-to-boost-tourism-union-minister-ganpathi-raju-866669.html. 
  5. "Khajuraho Departures".

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கஜுராஹோ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஜுராஹோ&oldid=3707084" இலிருந்து மீள்விக்கப்பட்டது