உள்ளடக்கத்துக்குச் செல்

சத்தர்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சத்தர்பூர், இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ளது.[1] ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்ட இந்திய நகரங்களில் இதுவும் ஒன்று.[2] இங்கு 133,626 மக்கள் வாழ்கின்றனர். இந்த நகரம் சத்தர்பூர் மாவட்டத்தின் நிர்வாக தலைமையகம் ஆகும்.

வரலாறு

[தொகு]

சத்தர்பூர் 1785 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. புந்தல்கண்ட் சுதந்திரத்தின் நிறுவனர் புந்தல ராஜ்புத்திர தலைவர் சத்ராசலின் பெயரால் இந்த நகரம் பெயரிடப்பட்டது. மேலும் அவரது கல்லறை இங்கு அமைந்துள்ளது. இந்த அரசு 1785 ஆண்டு வரை அவரது சந்ததியினரால் ஆட்சி செய்யப்பட்டது. அதே நேரத்தில் ராஜபுத்திரர்களின் பொன்வார் குலம் சத்தர்பூரை கைப்பற்றியது.[3] 1806 ஆம் ஆண்டில் பிரித்தானிய ராஜ்யத்தினால் குன்வார் சோனே சிங் பொன்வார்க்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது. 1854 ஆம் ஆண்டில் வாரிசு கோட்பாட்டின் அடிப்படையில் பிரித்தானிய அரசிடம் தோல்வியுற்றதால் சத்தப்பூர் ஜகத் ராஜாவிற்கு வழங்கப்பட்டது. பொன்வர் ராஜாக்கள் 1,118 சதுர மைல் (2,900 கிமீ 2 ) பரப்பளவையும், 1901 ஆம் ஆண்டில் 156,139 மக்கள்தொகையும் கொண்ட ஒரு சுதேச அரசை ஆட்சி செய்தனர்.

1901 ஆம் ஆண்டில் சத்தர்பூர் நகரத்தில் 10,029 மக்கள் வசித்தனர்.[4]

மன்னர்கள்

[தொகு]
  • 1785-1816 குன்வர் சோன் ஷா (இறப்பு 1816)
  • 1816–1854 பார்த்தாப் சிங் (இறப்பு 1854)
  • 1854–1867 ஜகத் சிங் (பிறப்பு 1846 - இறப்பு 1867)
  • 1867-1895 விஸ்வநாத் சிங் (பி. 1866 - தி. 1932)

மகாராஜாக்கள்

[தொகு]
  • (4 மே 1649 - 20 டிசம்பர் 1731) மகாராஜா சத்ராசல்
  • 1895-1932 விஸ்வநாத் சிங் (பிறப்பு1866 - இறப்பு1932)
  • 1932-1947 பவானி சிங் (பிறப்பு 1921 - இறப்பு 2006)[5]

1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், சத்தர்பூரின் ராஜாக்கள் இந்தியாவுடன் இணைந்தனர். மேலும் சத்தர்பூர் புந்தல்கந்தின் மற்ற பகுதிகளுடன் சேர்ந்து இந்திய மாநிலமான விந்திய பிரதேசத்தின் ஒரு பகுதியாக மாறியது. விந்திய பிரதேசம் பின்னர் 1956 ஆம் ஆண்டில் மத்திய பிரதேச மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

புவியியல்

[தொகு]

சத்தர்பூர் 24.9 ° N , 79.6 ° E இல் அமைவிடத்தை கொண்டது. இது சராசரியாக உயரம் 305 மீற்றர் (1000 அடி) உயரத்தில், மத்திய பிரதேசத்தின் வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ளது. இந் நகரம் எல்லைகளை உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்துடன் பகிர்ந்து கொள்கிறது. இது உத்தரபிரதேசத்தின் ஜான்சியிலிருந்து 133 கி.மீ தொலைவிலும், மத்திய பிரதேசத்தின் குவாலியரிலிருந்து 233 கி.மீ தொலைவிலும் உள்ளது.

புள்ளிவிபரங்கள்

[தொகு]

2011 ஆம் ஆண்டு சனத் தொகை கணக்கெடுப்பின்படி சத்தர்பூரில் 147 669 மக்கள் வசிக்கின்றனர். ஆண்கள் 53% வீதமும், பெண்கள் 47% வீதமும் காணப்படுகின்றனர். சத்தர்பூரின் சராசரி கல்வியறிவு விகிதம் 69% ஆகும். இது தேசிய சராசரி கல்வியறிவு 59.5% வீதத்தை விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 75% வீதமாகவும், பெண் கல்வியறிவு 62% வீதமாகவும் காணப்படுகின்றது. மக்கள் தொகையில் 15% வீதமானோர் 6 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள்.[6]

பொருளாதாரம்

[தொகு]

சத்தர்பூரில் பெரிய அளவிலான தொழில்கள் எதுவும் இல்லை. சிறிய அளவிலான தொழில்கள் நடைப் பெறுகின்றன. ஆனால் இந்த தொழில்கள் உள்ளூர் மக்களுக்கு போதுமான வேலைவாய்ப்பை வழங்க போதுமானதாக இல்லை. பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயத்தை சார்ந்தது. இருப்பினும், நகரம் வளர்ந்து வரும் தனியார் வணிகத் துறையைக் கொண்டுள்ளது. சத்தர்பூர் மாவட்டத்தில் பல கருங்கற் சுரங்கத் தொழில்கள் இயங்கி வருகின்றன.

பெரும்பாலானவர்கள் விவசாயத்தை தங்கள் வாழ்வாதாரமாக நம்பியிருக்கிறார்கள். இந்த பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளடக்கப்படுகிறது. முழு மாவட்டமும் விவசாயம் மற்றும் குடிநீருக்கான நீர் நெருக்கடியை எதிர்கொள்கிறது.

அரசியல்

[தொகு]

இது சத்தர்பூர் சட்டமன்றத் தொகுதிக்கும், டிக்கம்கட் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

நிர்வாகம்

[தொகு]

சத்தர்பூர் காவல்துறை என்பது மத்திய பிரதேச காவல்துறையின் சட்ட அமலாக்கப்பிரிவாகும். இந்த மாவட்டம் 5 பொலிஸ் துணைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 34 காவல் நிலையங்கள் மற்றும் 21 புறக்காவல் நிலையங்கள் உள்ளடங்குகின்றன.

வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள்

[தொகு]

சத்தர்பூருக்கு பிரசர் பாரதியின் கீழ் அகில இந்திய வானொலியின் வானொலி நிலையம் கிடைத்துள்ளது. இது 675 kHz அலைவரிசையில் ஒலிபரப்பப்படுகிறது. மேலும் இங்கு தூர்தர்சன் தொலைக்காட்சிக்கான கருவி பரப்பி டெரி சாலையில் அமைந்துள்ளது.

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-29.
  2. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்ட இந்திய நகரங்கள்
  3. "CHHATARPUR". web.archive.org. 2008-06-23. Archived from the original on 2008-06-23. பார்க்கப்பட்ட நாள் 2019-11-08.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  4. "Chhatarpur", 1911 Encyclopædia Britannica, Volume 6, பார்க்கப்பட்ட நாள் 2019-11-08 {{citation}}: |volume= has extra text (help)
  5. "Indian states before 1947 A-J". rulers.org. பார்க்கப்பட்ட நாள் 2019-11-08.
  6. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Archived from the original on 2004-06-16.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தர்பூர்&oldid=3586819" இலிருந்து மீள்விக்கப்பட்டது