ஆலம்பூர் நவபிரம்மா கோயில்கள்

ஆள்கூறுகள்: 15°52′40.1″N 78°08′5.4″E / 15.877806°N 78.134833°E / 15.877806; 78.134833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலம்பூர் நவபிரம்மா கோயில்கள்
சொர்க்க பிரம்மா கோயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்ஆலம்பூர்
புவியியல் ஆள்கூறுகள்15°52′40.1″N 78°08′5.4″E / 15.877806°N 78.134833°E / 15.877806; 78.134833
சமயம்இந்து சமயம்
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்ஜோகுலம்பா மாவட்டம்

ஆலம்பூர் நவபிரம்மா கோயில்கள் (Alampur Navabrahma Temples) சிவன், பிரம்மா]] போன்ற கடவுளர்களின் 9 கோயில்களின் தொகுப்பாகும். நவபிரம்மா கோயில் தொகுதிகள், சாளுக்கியர் ஆட்சிக் காலத்தில் கிபி 7 முதல் 9ஆம் நூற்றாண்டில் நகரா கட்டிடக் கலை வடிவில் கட்டப்பட்டது.[1] இக்கோயில்கள் தெலங்காணா மாநிலத்தில், ஜோகுலம்பா மாவட்டத்தின் ஆலம்பூர் கிராமத்தில், துங்கபத்திரை ஆறும், கிருஷ்ணா ஆறும் கூடுமிடத்தில், ஆந்திர மாநில எல்லையில் உள்ளது. இதனருகே 1.5 கிலோ மீட்டர் தொலைவில் ஆலம்பூர் பாபநாசி கோயில்கள் உள்ளது. [1] இக்கோயில்கள் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தாலும், இதனை நவபிரம்மா கோயில்கள் என அழைக்கப்படுகிறது. சைவம், வைணவம் மற்றும் சாக்தப் பிரிவினர்களுக்கான இக்கோயில்கள் செவ்வக வடிவில் நகரா கட்டிடக் கலை நயத்தில், சாளுக்கியர் ஆட்சியில் கிபி 8ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கட்டப்பட்டது.[2]இக்கோயில்களில் புகழ்பெற்றது சங்கமேஷ்வரர் கோயில் மற்றும் நவபிரம்மா கோயில்கள் ஆகும்.

தில்லி சுல்தானகம் ஆட்சியின் போது கிபி 14ஆம் நூற்றாண்டில் நவபிரம்மா கோயில்கள் சிதைக்கப்பட்டது.[3][4][5] இந்தியத் தொல்லியல் ஆய்வகம் 1980ஆம் ஆண்டிற்குப் பின்னர் இக்கோயில்களின் சிதிலங்களை சீரமைத்தனர்.[5][6]

அமைவிடம்[தொகு]

ஐதராபாத் நகரத்திற்கு தெற்கே 215 கிலோ மீட்டர் தொலைவிலும், ஹம்பியிலிருந்து வடகிழக்கே 240 கிலோ மீட்டர் தொலைவிலும், பாதமிக்கு கிழக்கே 325 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநில எல்லையில் உள்ளது.

படக்காட்சிகள்[தொகு]

நவ பிரம்மா கோயில்களில் அர்க்க பிரம்மா கோயில், சுவர்க்க பிரம்மா கோயில், பால பிரம்மா கோயில், கருட பிரம்மா கோயில், குமார பிரம்மா கோயில் மற்றும் விஷ்வ பிரம்மா கோயிலக்ளின் சிற்பங்கள்.

சிதைக்கப்பட்ட பெரிய அர்க்க பிரம்மா கோயில்

இந்த நவப்பிரம்மா கோயில்கள் அருகே இந்தியத் தொல்லியல் ஆய்வகம் கட்டுப்பாட்டில் ஒரு அருங்காட்சியகம் உள்ளது. இதில் நவப்பிரம்மா கோயில்களின் சிதிலமடைந்த சிற்பங்கள் மற்றும் தூண்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[7][8]

இதனையும் காண்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Navabrahma temples, Alampur
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 George Michell (2013). Southern India: A Guide to Monuments Sites & Museums. Roli Books. பக். 318–321. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7436-903-1. https://books.google.com/books?id=GdBbBAAAQBAJ&pg=PT319. 
  2. Marijke J. Klokke (2000). Narrative Sculpture and Literary Traditions in South and Southeast Asia. BRILL. பக். 78–82. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-04-11865-9. https://books.google.com/books?id=fx3mpR4uKmkC&pg=PA94. 
  3. The Andhra Pradesh Journal of Archaeology. Director of Archaeology and Museums, Government of Andhra Pradesh. 1984. பக். 80–81. https://books.google.com/books?id=OBJuAAAAMAAJ. 
  4. Pedarapu Chenna Reddy (2006). Readings in Society and Religion of Medieval South India. University of Hyderabad, Research Press. பக். 99–100. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-89131-04-3. https://books.google.com/books?id=qJXXAAAAMAAJ. 
  5. 5.0 5.1 "Alampur surfaces after six days". The Hindu. 8 October 2009 இம் மூலத்தில் இருந்து 10 அக்டோபர் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091010030347/http://www.hindu.com/2009/10/08/stories/2009100856160400.htm. 
  6. "ASI yet to assess damage to Kurnool structures - Times Of India". Archived from the original on 2013-01-03. பார்க்கப்பட்ட நாள் 2021-03-19. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  7. Alampur Museum
  8. Marijke J. Klokke (2000). Narrative Sculpture and Literary Traditions in South and Southeast Asia. BRILL Academic. பக். 94–95. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-04-11865-9. https://books.google.com/books?id=fx3mpR4uKmkC. 

ஆதார நூற்பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]