மகிஷாசுரமர்த்தினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகிஷாசுரமர்த்தினி என்பது மகிசாசூரன் எனும் அரக்கனை அழிக்க சக்தி எடுத்த வடிவமாகும். இவரை மகிடாசுர மர்தினி என்றும் கூறுகின்றனர். [1] மகிசாசுரன் தனக்கு ஒரு பெண்ணால் மட்டுமே இறப்பு நேரிட வேண்டும் என்ற வரம் பெற்றிருந்தான். அதனால் சிவபெருமானின் மனைவியான சக்தி, தேவர்களிடமிருந்து சக்திகளைப் பெற்று அவனுடன் போரிட்டு அழித்தார்.

மகிசாசுரமர்த்தினி மகிசனுடன் போரிடும் காட்சி.

தேவர்கள் கொடுத்த சக்திகளிலிருந்து தோன்றிய உடல்உறுப்புகளின் பட்டியல்.[2]

  • சிவபெருமானின் சக்தி - முகம்
  • பிரம்மாவின் சக்தி - உடல்
  • திருமாலின் சக்தி - பதினெட்டு கரங்கள்
  • எமதருமனின் சக்தி - கூந்தல்
  • அக்னிபகவானின் சக்தி - கண்கள்
  • மன்மதனின் சக்தி - புருவம்
  • குபேரனின் சக்தி - மூக்கு
  • முருகனின் சக்தி - உதடு
  • சந்திரனின் சக்தி - மார்புகள்
  • இந்திரனின் சக்தி - இடை
  • வருணனின் சக்தி - கால்கள்

கோயில்கள்[தொகு]

மத்தூர் மகிஷாசுரமர்த்தினி கோயில், திருத்தணி அருகேயுள்ளது.[3]

  1. "மகிஷாசுரமர்த்தினி".
  2. "மதுரையின் மகிஷாசுரமர்த்தினி! - வாரமலர் - Varamalar - tamil weekly supplements".
  3. "Dinakaran - மங்கலம் அருள்வாள் மகிஷாசுரமர்த்தினி". 2015-01-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-08-01 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகிஷாசுரமர்த்தினி&oldid=3566023" இருந்து மீள்விக்கப்பட்டது