குடிமல்லம் லிங்கம்

ஆள்கூறுகள்: 13°36′12″N 79°34′36″E / 13.603425°N 79.576767°E / 13.603425; 79.576767
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடிமல்லம் லிங்கத்தின் அமைப்புகள்
குடிமல்லம் லிங்கத்தின் பக்கவாட்டுத் தோற்றங்கள்
குடிமல்லம் கோயில்

குடிமல்லம் லிங்கம் (Gudimallam Lingam) இந்தியாவின் ஆந்திரப் பிர்தேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஏர்ப்பேடு மண்டலத்தின் 34 கிராமங்களில் ஒன்றான குடிமல்லம் எனும் கிராமத்தில் உள்ளது.[1] குடிமல்லம் லிங்க விக்கிரகத்தின் காலம் கிமு 3ஆம் நூற்றாண்டிற்கும், கிபி 4ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டது ஆகும்.[2][3][4][4][5][6] இந்த லிங்கம் சிலை குடிமல்லம் கிராமத்தின் பாழடைந்த பரசுராமர் கோயிலிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

சிலையில் இருக்கும் சிவனின் ஆடை முறை, ரிக் வேத காலத்துக்கு முற்பட்டது என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இந்த சிவன் சிலை, சிந்து சமவெளி நாகரிகத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது என இக்கோயிலின் முதன்மைச் செயல் அதிகாரி கே ராமச்சந்திர ரெட்டி கூறுகிறார்.

லிங்கத்தின் அமைப்பு[தொகு]

கருங்கல்லால் செய்யப்பட்ட லிங்கம் சிலையின் நடுவில் நின்ற நிலையில் சிவன் உருவம் திறந்த மேனியுடன் வடிக்கப்பட்டுள்ளது. குட்டை வடிவ இயக்கனின் தோள்பட்டைகளில் கால்களை வைத்து நின்ற நிலையில் சிவபெருமான் உருவம் வடிக்கப்பட்டுள்ளது. சிவபெருமானின் தலையில் தலைப்பாகையும், காதில் குண்டலங்களும், தோள்பட்டையிலும், இடுப்பிலும் நகையணிகள் அணிந்த நிலையில் உள்ளது.

அடிக்குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • Sarma, Inguva Karthikeya, Paraśurāmēśvara Temple at Gudimallam: A probe into its origins, 1994, Gattsons, ISBN 9788171920150

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=குடிமல்லம்_லிங்கம்&oldid=3793194" இருந்து மீள்விக்கப்பட்டது