ஆலம்பூர் பாபநாசி கோயில்கள்

ஆள்கூறுகள்: 15°52′17.3″N 78°07′22.8″E / 15.871472°N 78.123000°E / 15.871472; 78.123000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலம்பூர் பாபநாசி கோயிலகள்
23 கோயில்களின் தொகுதி
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்ஆலம்பூர்
புவியியல் ஆள்கூறுகள்15°52′17.3″N 78°07′22.8″E / 15.871472°N 78.123000°E / 15.871472; 78.123000
சமயம்இந்து சமயம்
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்ஜோகுலம்பா மாவட்டம்

ஆலம்பூர் பாபநாசி கோயில்கள் (Alampur Papanasi Temples) 23 கோயில்களின் தொகுதியாகும். இக்கோயில்கள் 9 முதல் 11ஆம் நூற்றாண்டு முடிய கட்டப்பட்டவைகள் ஆகும். இவை தெலங்காணா மாநிலத்தில், ஜோகுலம்பா மாவட்டதில் ஆலம்பூர் கிராமத்தில் உள்ளது. தற்போது சிதிலமடைந்த இக்கோயில்கள் துங்கபத்திரை ஆறும் மற்றும் கிருஷ்ணா ஆறும் கலக்குமிடத்தில் ஆந்திர மாநில எல்லையில் உள்ளது. [1][2][3]இக்கோயில்கள் ஆலம்பூர் நவபிரம்மா கோயில்களிலிருந்து 1.5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.


இச்சைவ மரபுக் கோயில்களை இராஷ்டிரகூடர் மற்றும் சாளுக்கியர்களுக்குப் பின்னர் சில நூற்றாண்டுகள் கழித்து இச்சைவ மரபுக் கோயில்கள் கட்டப்பட்டது. இக்கோயில்கள் நகரா கட்டிடக் கலை நயத்தில் சதுர வடிவில் கட்டப்பட்டுள்ளது. [1][3] இக்கோயில்கள் நடராசருக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும்.[1]பாபநாசி கோயில்கள் சைவ சமயத்தின் காளமுகம் மற்றும் பாசுபதம் பிரிவினர்களுக்கு தொடர்புடையதாகும். மேலும் இத்தொகுதியின் பார்வதி மற்றும் சப்தகன்னியர் கோயிகள் சாக்தப் பிரிவினர்களுக்கு உரியதாகும். இத்தொகுதியின் சில கோயில்கள் திருமாலைப் போற்றும் வைணவப் பிரிவினர்களுக்கு உரியதாகும். இந்து சமய சாத்திரங்களில் கூறியவுள்ள கருத்துக்களை பாபநாசிக் கோயில்களில் உள்ள சிற்பக் கலைகள் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

தில்லி சுல்தான்கள் மற்றும் முகலாயர்கள் ஆட்சியின் போது, கிபி 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டுகளில் ஆலம்பூர் பாபநாசி கோயில்கள் சிதைக்கப்பட்டது.[4]

சிறிசைலம் நீர் மின் நிலையம் அமைக்க வேண்டி, 1980ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம், பாபநாசிக் கோயில்களின் சிதிலங்களைக் கொண்டு வேறிடத்திற்கு மாற்று அமைத்தனர்.[3][5]


அமைவிடம்[தொகு]

பாபநாசி கோயில்கள் ஐதராபாத் (இந்தியா)|ஐதராபாத்]]திற்கு 215 கிலோ மீட்டர் தொலைவிலும், ஹம்பிக்கு வடமேற்கு 240 கிலோ மீட்டர் தொலைவிலும், பாதமிக்கு கிழக்கே 325 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]