லகுலீசர் மதுரா தூண் கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லகுலீசர் மதுரா தூண் கல்வெட்டு
செய்பொருள்கல்
எழுத்துசமசுகிருதம், குப்தர் கால எழுத்துமுறை
உருவாக்கம்கிபி 380
காலம்/பண்பாடுகுப்தப் பேரரசு காலம்
கண்டுபிடிப்புமதுரா, உத்தரப் பிரதேசம், இந்தியா
தற்போதைய இடம்அரசு அருங்காட்சியகம், மதுரா

இலகுலீசர் மதுரா தூண் கல்வெட்டு (Lakulisa Mathura Pillar Inscription) பிற்கால குப்தப் பேரரசு காலத்திய பாசுபத சைவ நெறியைப்[1] போற்றும் தொடர்பான சமசுகிருத மொழி தூண் கல்வெட்டாகும். [2][3][1] இக்கல்வெட்டுத் தூண் வட இந்தியாவின் மதுரா நகரத்திற்கு அருகில் சிதிலமடைந்த நிலையில் 1928-ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டது. இக்கல்வெட்டுத் தூணின் அடியில் பாசுபத நெறியை வளர்த்த இலகுலீசர் சிற்பம் கொண்டுள்ளது. இத்தூண் சமசுகிருத மொழியில் குறிப்புகள் கொண்டுள்ள்து.

இரண்டாம் சந்திரகுப்தர் காலத்திய தூண் கல்வெட்டின் அடியில் இலகுலீசர் சிற்பம், மதுரா, உத்தரப் பிரதேசம், [4][5]
இரண்டாம் சந்திரகுப்தர் காலத்திய இலகுலீசர் சிற்பம் பொறித்த மதுரா தூண், அரசு அருங்காட்சியகம், மதுரா

கல்வெட்டின் சுருகக்ம்[தொகு]

இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சியில் நிறுவப்பட்ட சைவ சமயத்தின் பாசுபத குருமார்களின் சிற்பங்களையும், இலகுலீசர் மற்றும் இலிங்கங்களையும் தங்களது சொத்தாக நினைத்து பாதுகாக்க வேண்டும், வணங்க வேண்டும். இது கோரிக்கை. இந்த நினைவுச் சின்னங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எவரும் அல்லது மேலே அல்லது கீழே உள்ள எழுத்தை அழிக்க நினைப்பவர்கள், ஐந்து பெரிய பாவங்களையும், ஐந்து சிறிய பாவங்களையும் அடைவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Michael Willis 2014, ப. 134-137.
  2. David N Lorenzen 1972, ப. 179-180.
  3. D R Bhandarkar, B C Chhabra & G S Gai 1981, ப. 240- 242.
  4. Ashvini Agrawal 1989, ப. 98.
  5. "Collections-Virtual Museum of Images and Sounds". vmis.in. American Institute of Indian Studies.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]