இராதா ராணி கோயில்

ஆள்கூறுகள்: 27°39′01″N 77°22′25″E / 27.65028°N 77.37361°E / 27.65028; 77.37361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராதா ராணி கோயில்
இராதா ராணி கோயில் is located in உத்தரப் பிரதேசம்
இராதா ராணி கோயில்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இராதா ராணி கோயிலின் அமைவிடம்
அமைவிடம்
மாநிலம்:உத்தரப் பிரதேசம்
மாவட்டம்:மதுரா
அமைவு:பர்சானா
ஏற்றம்:250 m (820 அடி)
ஆள்கூறுகள்:27°39′01″N 77°22′25″E / 27.65028°N 77.37361°E / 27.65028; 77.37361
கோயில் தகவல்கள்
இணையதளம்:radharanimandir.com


இராதா ராணி கோயில் (Radha Rani Temple) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், மதுரா மாவட்டத்தில் உள்ள பர்சானா பேரூராட்சியில் உள்ளது. [1] பர்சனா ஊரில் பிறந்த ராதை கிருஷ்ணரின் தோழி ஆவார். இங்கு இராதைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இராதா ராணி உள்ளது. இக்கோயிலில் இராதா கிருஷ்ணன் மூலவராக உள்ளனர்.

இராதா ராணி கோயில் பர்சானா பேரூராட்சியில் உள்ள பானுகர் மலையில் 250 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இராதை பிறந்த நாள், கிருஷ்ண ஜெயந்தி மற்றும் ஹோலி பண்டிகைகளின் போது இக்கோயிலுக்கு பகதர் கூட்டம் அதிகம் இருக்கும். இக்கோயில் மதுரா நகரத்திற்கு வடமேற்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

வரலாறு[தொகு]

இராதா ராணி கோயில், பர்சானா

இராதா ராணி கோயில் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் வஜ்ரநாபி என்பவரால் நிறுவப்பட்டதாக கருதப்படுகிறது. பிற்காலத்தில் சிதிலமடைந்த இக்கோயிலை சைதன்யர் ஆலோசனையின்படி கிபி 1675-இல் ராஜா வீர் சிங்கால் மீண்டும் கட்டப்பட்டது. பின்னர், அக்பரின் அரசவையில் இருந்த ஆளுநர்களில் ஒருவரான கவர்னர்களில் ராஜா தோடர்மால் உதவியுடன் நாராயண் பட் என்பவரால் தற்போதைய கோவிலின் அமைப்பு கட்டப்பட்டது.

இக்கோயில் தல புராணத்தின்படி, கிருஷ்ணரின் வளர்ப்புத் தந்தை நந்தகோபன் மற்றும் ராதையின் தந்தை விருஷபானு நெருங்கிய நண்பர்கள். நந்த கோபன் கோகுலத்தின் தலைவராக இருந்தபோது, ​​விருஷ்பானு ராவல் எனும் ஊரின் தலைவராக இருந்தார். இருப்பினும், மதுரா மன்னன் கம்சனின் அட்டூழியங்களால் சலித்து, இருவரும் தங்கள் ஊர் மக்களுடன் நந்தகான் மற்றும் பர்சானாக்கு இடம் பெயர்ந்தனர். நந்த கோபன் கோவர்தன மலையை தனது வீடாகவும், விருஷ்பானு பானுகர் மலையை தனது நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்டனர். பர்சானா இறுதியில் ராதையின் இருப்பிடமாகவும் மாறியது. தற்போது, ​​இரட்டை நகரங்களான பர்சானா மற்றும் நந்த்கான் ஆகிய இரு நகரங்களிலும், கோவர்தன மலை மற்றும் பானுகர் மலைகளின் உச்சியில் முறையே ராதை மற்றும் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட வரலாற்று கோயில்கள் உள்ளது. நந்தகான் கோயில் நந்த பவன் என்று அழைக்கப்படும் அதே வேளையில், பர்சானா கோயில் ராதாவின் பெயரால் இராதா ராணி கோயில் என அழைக்கப்படுகிறது.

இதனையும் காண்க[தொகு]

கோயில் காட்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shriji Temple Barsana| Mandir History, Architecture & Visiting Time | UP Tourism". tour-my-india. பார்க்கப்பட்ட நாள் 2021-05-08.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இராதா_ராணி_கோயில்&oldid=3781113" இலிருந்து மீள்விக்கப்பட்டது