சுபத்திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருச்சுனன் துறவி வேடத்தில் சுபத்திரையை காதலித்தல், ராஜா ரவி வர்மாவின் ஓவியம்


சுபத்திரை (Subhadra), வசுதேவர் - ரோகிணி தேவி தம்பதியரின் மகளாவர். மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களில் மூன்றாமவரான அருச்சுனனின் மனைவியும், பலராமன் மற்றும் கிருட்டிணரின் தங்கையும் ஆவார். அபிமன்யு இவரது மகனே ஆவார்.

வாழ்க்கை[தொகு]

இவர் வசுதேவருக்கும் ரோகிணி தேவிக்கும் பிறந்த ஒரே மகள் ஆவார். சுபத்திரை வசுதேவர் சிறையில் இருந்து கிருட்டிணரால் மீட்கப்பட்ட பிறகு பிறந்தவர். எனவே அவருடைய சகோதரர்களைக் காட்டிலும் மிகவும் இளையவர். ஆதலால் மிகுந்த செல்வாக்குடன் வளர்க்கப்பட்டார்.

பலராமரால் துரியோதனனுக்கு திருமண உறுதியளிக்கப்பட்டிருந்த சுபத்திரையை, அருச்சுனன் காதலித்து, பலராமருக்கு பயந்து சுபத்திரையை கடத்திச் சென்று கிருஷ்ணரின் ஆதரவுடன் திருமணம் செய்து கொண்டார். அருச்சுனன் - சுபத்திரை தம்பதியருக்கு அபிமன்யு பிறந்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபத்திரை&oldid=3801519" இலிருந்து மீள்விக்கப்பட்டது