உஷா (பாகவத புராணம்)
உஷா (பாகவத புராணம்) | |
---|---|
உஷா தனது கனவில் அனிருத்தை காண்கிறாள் | |
குழந்தைகள் | வஜ்ரா, மிருதுகேதனன் |
நூல்கள் | பாகவத புராணம், விஷ்ணு புராணம், சிவ புராணம், மகாபாரதம் |
உஷா (Uṣā or Usha) (சமசுகிருதம்: उषा) அசுர மன்னர் பாணாசூரனின் மகளும், கிருஷ்ணர் பெயரனான அனிருத்தனின் மனைவியும் ஆவார்.[1]
உஷாவின் திருமணம்
[தொகு]பாகவத புராணத்தின் படி, தற்கால இந்தியாவின் அசாம் மாநிலத்தின் சோனிதபுரத்தை ஆட்சி செய்த ஆயிரம் கைகள் கொண்ட அசுர குல மன்னரும், சிவபக்தருமான பாணாசூரனின் மகள் உஷா ஆவார். ஒரு முறை உஷா தேவி பார்வதியிடம் தனக்கு கணவர் யார் எனக்கேட்டாள். அதற்கு தேவி பார்வதி, வைகாசி மாதத்தில் உனது கனவில் தெரியும் ஆணே உனக்கு வரப்போகும் கணவர் என்றார்.[2]
வைகாசி மாதத்தில் உஷா கண்ட கனவில் ஒரு அழகிய இளைஞன் கனவில் வந்தார். கனவில் வந்த இளைஞன் மீது தீராக் காதல் கொண்டாள். உஷாவின் கனவில் வந்தவன் அனிருத்தன் ஆவான். (அனிருத்தன் கிருஷ்ணரின் பேரனும், பிரத்தியும்மனனின் மகனும் ஆவான்.) உஷா தனது தோழி சித்திரலேகாவின் மாயா சக்தியால், அனிருத்தனை துவாரகையிலிருந்து சோனிதபுரம் அரண்மனைக்கு அழைத்து வந்தாள். [3]
இச்செய்தியறிந்த கிருஷ்ணர் மற்றும் [[ பிரத்திம்யும்மனன் அனிருத்தனை மீட்க பெரும் படைகளுடன் பாணாசூரனின் சோனிதபுர இராச்சியத்தின் மீது படையெடுத்துச் சென்றனர். போரில் கிருஷ்ணர் பாணாசூரனின் ஆயிரம் கைகளையும், தலையையும் தனது சக்கராயுதத்தால் வெட்டி வீழ்த்தினார். [4]
போருக்குப் பின்னர் அனிருத்தன் உஷாவை திருமணம் செய்து கொள்கிறார். இத்தம்பதியருக்கு வஜ்ரா மற்றும் மிருதுகேதனன் என இரண்டு குழந்தைகள் பிறக்கின்றனர்.[5]
மறு பிறப்பில்
[தொகு]சிவ புராணத்தின் படி அனிருத்தன்-உஷா தம்பதியினர் மறு பிறவியில் லெக்சிந்தர் - பெகுலா எனும் பெயரில் பிறந்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.[6]
மரபுரிமைப் பேறுகள்
[தொகு]உஷா - அனிருத்தன் தொடர்பான கதையை, 18-ஆம் நூற்றாண்டில் குஜராத்தி மொழியில் பிரேமானந்த பட் என்பவர் ஒகாஹரன் என்ற பெயரில் நூலாக வெளியிட்டார்.[7]
உஷா-அனிருத்தன் கதையை மையமாகக் கொண்டு, 1901-இல் உஷா பரிநயம் எனும் தெலுங்கு மொழி நூல் வெளியானது. [8] உஷா-அனிருத்தன் கதையை மையமாகக் கொண்டு 1961-ஆம் ஆண்டில் தெலுங்கு மொழியில் உஷா பரிநயம் எனும் பெயரில் திரைப்படம் வெளியானது. [9]
கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் 1936-இல் உஷா கல்யாணம் எனும் பெயரில் தமிழ் மொழியில் ஒரு திரைப்படம் வெளியானது.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Fables and Folk-tales of Assam (in ஆங்கிலம்). Firma KLM. 1998. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788171020751.
- ↑ Chaturvedi, B. K. (2017-01-02). Vishnu Puran (in ஆங்கிலம்). Diamond Pocket Books Pvt Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5083-749-8.
- ↑ Bhagat, Dr S. P. (2016-09-18). Shrimad Bhagavata Purana (in ஆங்கிலம்). Lulu Press, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-365-40462-7.
- ↑ Bhandari, C. M. (1995). Saving Angkor (in ஆங்கிலம்). White Orchid Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-974-89229-4-2.
- ↑ Dalal, Roshen (2014-04-18). Hinduism: An Alphabetical Guide (in ஆங்கிலம்). Penguin UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8475-277-9.
- ↑ McDaniel, June (2004-08-05). Offering Flowers, Feeding Skulls: Popular Goddess Worship in West Bengal (in ஆங்கிலம்). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-029056-6.
- ↑ Sen, Siba Pada (1988). Sources of the History of India (in ஆங்கிலம்). Institute of Historical Studies.
- ↑ Leiter, Samuel L. (2007). Encyclopedia of Asian Theatre: A-N (in ஆங்கிலம்). Greenwood Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-33530-3.
- ↑ Usha Parinayam (1961 film)
- ↑ Usha Kalyanam, 1936