சபா பருவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரௌபதி பகடையில் பந்தயமாக

மகாபாரதம் புத்தகம் 2 சபா பர்வம் - அசுரத்தச்சன் மயன் எப்படி இந்திரபிரஸ்தத்தில் அரண்மனையையும் சபையையும் கட்டினான் என்பதும், தர்மன் சூதாட்டத்தையும், பாண்டவர்கள் வனவாசம் செல்வதையும் விபரிக்கிறது.

கிருஷ்ணன், அர்ஜூனன் மற்றும் பீமன் சேர்ந்து எப்படி, எதற்காக ஜராசந்தனைக் கொன்றார்ள் என்பதையும். தருமன் நடத்திய இராசசூய வேள்விக்காக அருச்சுனன், வீமன், நகுலன் மற்றும் சகாதேவன் பரத கண்டத்தின் நான்கு திசைகளில் உள்ள நாட்டு மன்னர்களுடன் போரிட்டு, திறை வசூலித்த செய்திகளும், கிருஷ்ணன் எவ்வாறு சிசுபாலனைக் கொன்றான் என்பதும், கௌரவர்களுடன் தருமன் ஆடிய சூதாட்டத்தில் தன் நாட்டை எவ்வாறு இழந்தான் என்பதை இப்புத்தகத்தில் விபரிக்கப்படுகிறது.

உப பர்வங்கள்[தொகு]

இந்தப் புத்தகம் 9 உப பர்வங்களும் 80 பகுதிகளும் கொண்டது. கீழ்க்கண்டவை சபா பர்வத்தின் உப பர்வங்களாகும்.

1. சபகிரியா பர்வம் (பகுதி: 1-4)
2. லோகபாலா சபகயனா பர்வம் (பகுதி: 5-13)
3. ராஜசுயம்வரம்பா பர்வம் (பகுதி: 14-19)
4. ஜராசந்த வதை பர்வம் (பகுதி: 20-24)- இந்த உப பர்வத்தில்தான் கிருஷ்ணன், அர்ஜூனன், பீமன் மூவரும் சேர்ந்து, எப்படி ஏன் ஜராசந்தனைக் கொன்றார்கள் என்பது வருகிறது.
5. திக்விஜய பர்வம் (பகுதி: 25-31)
6. ராஜசுயிகா பர்வம் (பகுதி: 32-34)
7. ஆர்கியஹரனா பர்வம் (பகுதி: 35-38)
8. சிசுபால வதை பர்வம் (பகுதி: 39-44) - இந்த உப பர்வத்தில், ராஜசுய யாகத்தில் கிருஷ்ணன் சிசுபாலனைக் சபையின் நடுவே கொலவது
9. தியுதா பர்வம் (பகுதி: 45-80) - இந்த உப பர்வத்தில்தான், துரியோதனனின் வற்புறுத்தலால் திருதராஷ்டிரன் பாண்டவர்களை சூதாட அழைப்பதும், சகுனி எவ்வாறு யுதிஷ்டிரனைத் தூண்டி அனைத்தையும் கவர்கிறான் என்பதும், பாண்டவர் 12 வருடம் வனவாசம் செல்லவும், ஒரு வருடம் தலைமறைவு வாழ்வு வாழவும் முடிவெடுக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சபா_பருவம்&oldid=3832530" இலிருந்து மீள்விக்கப்பட்டது