உள்ளடக்கத்துக்குச் செல்

எட்டாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகாபாரதத்தில் நடைபெற்ற குருச்சேத்திரப் போரின் எட்டாம் நாள் போர் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.

முக்கிய அம்சங்கள்[தொகு]

எட்டாம் நாளின் காலையில் பீஷ்மர், கௌரவர் படையை கூர்ம வியூகமாக அணிவகுத்தார். திருஷ்டத்யும்னன், பாண்டவர் அணியை மூன்று சிகரங்கள் கொண்ட வியூகத்தில் அமைத்தான்.

அன்று நடந்த போரின் முதல் பாகத்தில் திருதராஷ்டிர புதல்வர்களில் எண்மரை பீமன் கொன்றான். ஆட்ட மண்டபத்தில் தான் செய்த சபதத்தை பீமன் இன்றே தீர்த்து விடுவான் போலிருக்கிறது என்று எல்லோரும் பயந்தார்கள்.

அரக்கன் அலம்பசனுக்கும் அரவானுக்கும் நடந்த கோரமான போரின் முடிவில் அரவான் (அருச்சுனனின் மகன்) கொல்லப்பட்டான். இதைக் கேட்ட அருச்சுனன் துயரத்தில் வருந்தினான். இராவான் கொல்லப்பட்டதைக் கண்ட கடோற்கஜன் கௌரவர் படையை பெரிய அளவில் தாக்கினான். அதைக் கண்ட துரியோதனன் தானே கடோத்கஜனை எதிர்க்க முன்வந்தான். கௌரவர் படையிலுள்ள புகழ் பெற்ற வீரர்கள் பலர் ஒன்றுகூடி கடோற்கஜனை தாக்கினார்கள். அச்சமயம் பீமன் உதவிக்கு வந்து சேர்ந்தான். பீமன் வந்ததும் முன்னைவிடக் கோரமான போர் நடந்தது.

நிகழ்ந்த முக்கிய மரணங்கள்[தொகு]

  • அருச்சுனனின் மகன் அரவான்
  • துரியோதனனின் தம்பியர் பதினாறு பேர்

உசாத்துணை[தொகு]

சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி எழுதிய மகாபாரதம் (வியாசர் விருந்து); வானதி பதிப்பகம், முப்பத்து எட்டாம் பதிப்பு, நவம்பர் 2009.