உள்ளடக்கத்துக்குச் செல்

அனுசாசன பருவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனுசாசன பருவம் (சமசுக்கிருதம்: अनुशासन पर्व) என்பது மகாபாரதத்தின் பதினெட்டுப் பருவங்களுள் பதின்மூன்றாவது பருவம் ஆகும். அனுசாசனம் என்பது அறிவுறுத்தல் அல்லது ஆணை என்னும் பொருள் தருவது. இப்பருவத்தின் கருப்பொருளும் இதற்கு முந்திய சாந்தி பருவத்தின் தொடர்ச்சியே. அரசனுக்கு உரிய கடமைகள், சட்டத்தின் ஆட்சி, தலைவனுக்கு நெருங்கியவர்களுக்கான அறம் குறித்த அறிவுரைகள் என்பன இப்பருவத்திலும் காணப்படுகின்றன.[1]

அமைப்பு

[தொகு]

இப்பருவம் மொத்தம் 168 பிரிவுகளைக் கொண்ட இரண்டு துணைப் பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை பின்வருமாறு:

  1. தன தரும பருவம்
  2. பீஷ்ம சுவர்க்காரோகண பருவம்

தன தரும பருவத்தில் பொருள், அறம் ஆகியவை தொடர்பான உரையாடல்களும் அறிவுறுத்தல்களும் அடங்கியிருக்க, பீஷ்ம சுவர்க்காரோகண பருவத்தில் வீடுமர் (பீஷ்மர்) இவ்வுலகை விட்டு நல்லுலகம் செல்வது தொடர்பான விடயங்கள் சொல்லப்படுகின்றன.

குறிப்புகள்

[தொகு]
  1. அருட்செல்வப் பேரரசன், சோ.(மொழிபெயர்ப்பு), முழு மகாபாரதம் - ஆதிபர்வம், பக். 27

வெளியிணைப்புக்கள்

[தொகு]
முன்னர் அனுசாசன பருவம்
பதின்மூன்றாவது பருவம்
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுசாசன_பருவம்&oldid=3722124" இலிருந்து மீள்விக்கப்பட்டது