வைசம்பாயனர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வைசம்பாயனர் என்பார் பழங்கால இந்தியாவின் சமசுக்கிருத இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் ஒரு முனிவர் ஆவார். மிகவும் புகழ் பெற்ற இந்திய முனிவரான இவர் யசுர் வேதத்தைக் கற்பித்தவர் எனப்படுகின்றது. இவர், ஜயா என்று அழைக்கப்பட்ட 8,800 அடிகளுடன் கூடிய தொடக்ககால மகாபாரதத்தை இயற்றிய வியாச முனிவரின் சீடர் என்றும் நம்பப்படுகின்றது. வைசம்பாயனர் தனது குரு எழுதிய ஜயாவை 24,000 அடிகளைக் கொண்டதாக விரிவுபடுத்தி சனமேசயன் என்னும் அரசனுக்குக் கூறினார். இது பாரதம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அரிவம்சம் என்னும் நூலையும் இவரே இயற்றியதாகத் தெரிகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைசம்பாயனர்&oldid=1352067" இருந்து மீள்விக்கப்பட்டது