குந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குந்தி மகாபாரதத்தில் வரும் பஞ்ச பாண்டவர்களின் தாயார் அவார். இவர் பாண்டுவின் மனைவியாவார்.

யது குலத்தவரான சூரசேனர் வசுதேவருடைய தந்தை. வசுதேவர் கிருஷ்ணரின் தந்தை. குந்தி கிருஷ்ணனின் தந்தையாகிய வாசுதேவனின் சகோதரியுமாவார். சூரசேனனின் மகளாகிய பிருதை (பிரீதா) என்ற இயற்பெயருடைய இவர் குந்திபோஜ மன்னனால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டதால் குந்தி என்ற பெயர் பெற்றார்.

குந்திபோஜர் மகளாக வளர்தல்[தொகு]

சூரசேனரின் நண்பர் குந்திபோஜர். குந்திபோஜருக்குப் பெண்குழந்தை இல்லை. குந்திபோஜருடன் தாம் கொண்ட நட்பால் தனக்குப் பிறக்கும் பெண்ணை வளர்த்துக் கொள்ளத் தருவதாக வாக்களித்தார் சூரசேனர். பொய் போகாத வாக்குடைய சூரசேனர், தமக்கு முதலில் பிறந்த பெண் குழந்தையான பிருதையை (குந்தி) நண்பர் வளர்க்கக் கொடுத்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. மகாபாரத சாரம்; ராமகிருஷ்ண மடம்; பக்கம் 122

வெளி இணைப்பு[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=குந்தி&oldid=1738016" இருந்து மீள்விக்கப்பட்டது