ஏழாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மகாபாரதத்தில் நடைபெற்ற குருச்சேத்திரப் போரின் ஏழாம் நாள் போர் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.
முக்கிய அம்சங்கள்
[தொகு]ஏழாம் நாளின் காலையில் பீஷ்மர், கௌரவர் படையை மண்டல வியூகமாக அணிவகுத்தார். பாண்டவர் அணியை தருமர், வச்சிர வியூகமாக அணிவகுத்தார்.
அன்று நடந்த போரில் அநேக முனைகளில் பெரும்மோதல்கள் நடைபெற்றன. கீழ்காணும் வகையில் போர் நடைபெற்றது:
பீஷ்மர் - அருச்சுனன்
துரோணர் – விராடன்
அசுவத்தாமன் - சிகண்டி
துரியோதனன் – திருட்டத்துயும்னன்
நகுல- சகாதேவர்கள் – சல்லியன்
அவந்தி தேச மன்னர்கள் – யுதாமன்யு
பீமன் – கிருதவர்மன், சித்திரசேனன், விகர்ணன், துர்மஷன்
கடோற்கஜன் – பகதத்தன்
அலம்பசன் – சாத்தியகி
புரிசிரவசு – திருஷ்ட கேது
தருமர் – சுருதாயு
சேகிதானன் – கிருபர்
நாளின் இறுதியில் எல்லோரும் மிகக் களைப்படைந்து காயங்களால் துன்பப்பட்டு பாசறைகள் போய்ச் சேர்ந்தார்கள்.
நிகழ்ந்த முக்கிய மரணங்கள்
[தொகு]- விராடனுடைய மகன் சங்கன்
போர்க்களத்துக்கு வெளியே நிகழ்ந்த நிகழ்வுகள்
[தொகு]இருதரப்பு வீரர்களும் உடலில் தைத்திருந்த அம்புகளைப் பிடுங்கி, வைத்திய முறைப்படி காயங்களைக் கழுவி இளைப்பாறினார்கள். எல்லோரும் இசை வாத்தியங்களைக் கேட்டுக் கொண்டு உல்லாசமாக பொழுது போக்கினார்கள். அத்தருணத்தில் போர் குறித்து வார்த்தை ஒன்றும் பேசாமல் கழிக்கப்பட்டது என்கிறார் வியாசர்.
உசாத்துணை
[தொகு]சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி எழுதிய மகாபாரதம் (வியாசர் விருந்து); வானதி பதிப்பகம், முப்பத்து எட்டாம் பதிப்பு, நவம்பர் 2009.