உள்ளடக்கத்துக்குச் செல்

மௌசல பருவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மௌசால பருவம் (சமசுக்கிருதம்: मौसल पर्व) மகாபாரதத்தின் 18 பருவங்களுள் பதினாறாவது பருவம். ஒன்பது பிரிவுகளை மட்டும் கொண்ட இப்பருவம் மகாபாரதத்தில் உள்ள மிகச் சிறிய மூன்று பருவங்களுள் ஒன்று. கிருஷ்ணரின் மகன் சாம்பனின காரணமாக, யாதவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு முற்றாக அழிந்துபோதல், கண்ணனின் இறப்பு, வசுதேவர், பலராமன் ஆகியோரின் இறப்பு, துவாரகை கடலுள் அமிழ்தல், ஆகியவை இப்பருவத்தில் சொல்லப்படுகின்றன.

அமைப்பு

[தொகு]

ஒன்பது பிரிவுகளைக் கொண்ட சிறிய இப்பருவத்தில் துணைப் பருவங்கள் எதுவும் இல்லை. 80,000 பாடல்களைக் கொண்ட மகாபாரதத்தில் 0.25% அளவு பாடல்களே இந்தப் பருவத்தில் உள்ளன. இதனால் இது மாகாபரத்தில் உள்ள மிகச் சிறிய பருவங்களில் ஒன்றாக உள்ளது.

மௌசல பருவ நிகழ்வுகளுக்கான பின்னணி

[தொகு]

குருச்சேத்திரப் போர் முடிவுக்கு வந்த பின்னர் கிருட்டிணர் காந்தாரியைக் காணச் சென்றிருந்தார். தனது நூறு புதல்வர்களையும், உறவினர்களையும் இழந்த காந்தாரி துயரத்திலும் கோபத்திலும் இருந்தாள். கிருட்டிணன் நினைத்திருந்தால் போரைத் தடுத்துப் பல இலட்சம் பேர்களின் உயிரிழப்புக்களைத் தடுத்திருக்கலாம் என அவள் நம்பினாள். இதனால் கிருட்டிணன் மீது கோபமுற்ற காந்தாரி, தனது பிள்ளைகள் எவ்வாறு இறந்தார்களோ அது போலவே யாதவர் குலமும் அழியும் என்று சாபம் கொடுத்தாள்.[1]

நிகழ்வுகள்

[தொகு]

இப்பருவத்தில் நிகழ்பவை குருசேத்திரப் போர் முடிந்து 36 ஆண்டுகளுக்குப் பிந்தியவை.

குறிப்புகள்

[தொகு]
  1. John Murdoch (1898), The Mahabharata - An English Abridgment, Christian Literature Society for India, London, pages 107-108

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மௌசல_பருவம்&oldid=3722129" இலிருந்து மீள்விக்கப்பட்டது