தராதரர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தராதரர்கள் (Daradas), பரத கணத்தின் வடக்கில் காஷ்மீர் சமவெளியின் வடக்கில் உள்ள கில்கித் மலைத் தொடர்களில், சிந்து ஆற்றின் கரையில் வாழ்ந்த மக்கள் ஆவார்.

தராதர மக்களை அடிக்கடி காம்போஜர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவர். தருமரின் இராசசூய வேள்வியின் போது, அருச்சுனன் பரத கண்டத்தின் வடக்கு திசை நாடுகளை படையெடுத்து வெற்றி கொண்டு திறை பெறச் சென்ற போது, தராதரர்களின் நாட்டையும் வென்று கப்பம் வசூலித்தார், என மகாபாரதம் கூறுகிறது.

வாயு புராணம், பிரமாண்ட புராணம் மற்றும் வாமன புராணம், தராதர மக்களை காம்போஜர்கள், சீனர்கள், பாக்லீகர்கள் மற்றும் தூஷாரர்களுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது.

மகாபாரதம் பாக்லீக பகுதியின் மன்னராக தராதர ஆட்சியாளரைக் குறிக்கிறது. [1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mahabharata, (1,67), (2,43)

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தராதரர்கள்&oldid=2981599" இருந்து மீள்விக்கப்பட்டது