கப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உடல்ரீதியான காயங்களை ஏற்படுத்துவதாக, அல்லது வேறுவகையான பயமுறுத்தல்கள் மூலம் ஒருவரிடமிருந்து வாங்கும் பணம் அல்லது சொத்து கப்பம் (Extortion) எனப்படுகின்றது. பொதுவாகச் சட்டப்படி இது ஒரு குற்றம் ஆகும். பல சமயங்களில் இவ்வாறு பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிப்பதாகப் பயமுறுத்தி வாங்கும் பணத்தைக், குறிப்பிட்டவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கொடுப்பனவு என மங்கல வழக்காகவும் கூறுவதுமுண்டு. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் புரியும் குழுக்களே பெரும்பாலும் கப்பம் வாங்கும் செயலில் ஈடுபடுகின்றன. குற்றமாகக் கருதப்படுவதற்குப் பணமோ சொத்தோ உண்மையில் பரிமாறப்பட்டிருக்கவேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு பணம் அல்லது சொத்தைப்பெறும் நோக்கத்தோடு பயமுறுத்தல் விடுப்பது மட்டுமே கப்பம் வாங்கும் குற்றம் எனக் கருதப்படலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கப்பம்&oldid=2035193" இருந்து மீள்விக்கப்பட்டது