வங்க நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வங்க நாடு (Vanga Kingdom) பரத கண்டத்தின் கிழக்கில் அமைந்த நாடுகளில் ஒன்றாகும். பண்டைய வங்க நாடு தற்போது அரசியல் காரணங்களால், மேற்கு வங்காளம் மற்றும் வங்காள தேசம் என பிரிந்துள்ளது.

மகாபாரதக் குறிப்புகள்[தொகு]

அருச்சுனன் 12 ஆண்டுகள் தீர்த்த யாத்திரை செல்கையில், பரத வர்சத்திற்கு கிழக்கில் அமைந்த வங்க நாடு, அங்க நாடு, கலிங்க நாடுகள் கங்கை ஆறு, பிரம்மபுத்திரா ஆறு போன்ற புனித ஆறுகளின் நீராலும்; புனித தலங்களாலும் செழிப்புடன் விளங்கியதாக மகாபாரதம், ஆதி பருவம், அத்தியாயம் 217-இல் விளக்கப்பட்டுள்ளது. (மகாபாரதம் 1: 217)

பாரதத்தின் கிழக்கில் அங்கம், வங்க நாடு, கலிங்கம், பௌண்டரம் மற்றும் சுக்மா போன்ற ஐந்து நாடுகளை நிறுவியவர்கள், மகத நாட்டின் கிரிவிரஜா நகரத்தின் கௌதம தீர்க்கதமசின் மகன் பாலியின் தத்துப் பிள்ளைகள் ஆவர்.[1]

இராசசூய வேள்வியில்[தொகு]

தருமராசன் இந்திரப்பிரஸ்தத்தில் நடத்திய இராசசூய வேள்வியில், வங்க நாட்டு மன்னர் கலந்து கொண்டு, தன் நாட்டிலிருந்து கொண்டு வந்த அரிய பொருட்களை தருமருக்கு பரிசாக வழங்கினார். (மகாபாரதம், சபா பருவம், அத்தியாயம் 51 (2: 51).

குருச்சேத்திரப் போர்[தொகு]

குருச்சேத்திரப் போரில் வங்க நாட்டு மன்னர் பகதத்தன் பெரும் யானைப்படைகளுடன் கௌரவர் அணியில் இணைந்து பாண்டவர்களுக்கு எதிராக போரிட்டார் (8: 17 - 22) & (6:93).

வங்க நாட்டு மன்னர்கள்[தொகு]

மகாபாரதத்தில் வங்க நாட்டு மன்னர்களாக சமுத்திரசேனன் மற்றும் சத்திரசேனன் ஆகியவர்களைக் குறிப்பிடுகிறது. (மகாபாரதம் 2:29)

பிற குறிப்புகள்[தொகு]

பாஞ்சால நாட்டு இளவரசி திரௌபதியின் சுயம்வரத்தில், வங்க நாட்டு மன்னர், கலிங்க, பௌண்டர நாட்டு மன்னர்களுடன் கலந்து கொண்டதாக மகாபாரதம் குறிப்பிடப்படுகிறது. (மகாபாரதம் 1: 189) (2: 33)

மத்தியகால வரலாறு[தொகு]

மத்தியகால இந்திய வரலாற்றில் வங்க நாட்டை கௌட பிரதேசம் என அழைத்தனர். கௌட பிரதேசத்தை கௌடர்கள், பாலர்கள், காம்போஜ பாலர்கள், சென்கள் மற்றும் தேவா வம்சத்தினர்[2]ஆண்டனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. (மகாபாரதம்; ஆதி பருவம்) 1: 104), (2: 21).
  2. Deva Dynasty
"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்க_நாடு&oldid=2876303" இருந்து மீள்விக்கப்பட்டது