உத்கல நாடு
உத்கல நாடு (Utkala Kingdom) (ஒடியா: ଉତ୍କଳ; தேவநாகரி: उत्कल) மகாபாரதம் குறிப்பிடும், பண்டைய பரத கண்டத்தின் நாடுகளில் ஒன்றாகும். உத்கல நாடு, தற்கால இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை கொண்டிருந்தது. இந்திய தேசிய கீதத்தில் உத்கல நாட்டின் பெயர் உள்ளது.[1][2]
மகாபாரதக் குறிப்புகள்
[தொகு]தசார்ன நாடு, மேகலா நாடு, (உத்கல நாட்டின் மேற்கு பகுதி நாடு) மற்றும் உத்கல நாடுகள் பற்றிய குறிப்புகள் மகாபாரத்தின் 6-வது பருவத்தின் 8-வது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது (மகாபாரதம் 6: 9). உத்கல நாட்டுப் படைகள் குருச்சேத்திரப் போரில் கௌரவர் அணியின் சார்பாக நின்று, பாண்டவர்]] அணியை எதிர்த்துப் போரிட்டனர். மேகல நாடு, கலிங்கம், நிசாதர்கள், தாம்ரலிப்தர்கள் மற்றும் உத்கல நாட்டுப் படைகள் நகுலனை கொல்வதற்காக கைகளில் பெரும் ஆயுதங்கள் கொண்டு தாக்கினார்கள் என கர்ண பருவம் அத்தியாயம் 22-இல் குறிப்பிட்டுள்ளது (8:22).
இதனையும் காண்க
[தொகு]உசாத்துணை
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Utkala, Utkalā: 18 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). 1 August 2015. Archived from the original on August 29, 2019. பார்க்கப்பட்ட நாள் 12 April 2023.
- ↑ Bharati Pal (April 2007). ""Utkaladesa" in Orissan Inscriptions" (PDF). magazines.odisha.gov.in (in ஆங்கிலம்). pp. 55–57. Archived (PDF) from the original on October 3, 2021. பார்க்கப்பட்ட நாள் 12 April 2023.