ஒட்டர நாடு
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஒட்டர நாடு (Odra kingdom), பண்டைய பரத கண்டத்தின், மகாபாரத இதிகாசம் குறிப்பிடும் நாடுகளில் ஒன்றாகும். ஒட்டர நாடு தற்கால ஒடிசா மாநிலத்தின் வடக்குப் பகுதியில் அமைந்திருந்தது. ஒட்டர நாட்டின் அருகில் வங்க நாடு அமைந்திருந்திருந்தது. ஒடியா மொழியும், ஒடிசா மாநிலமும் ஒட்டர எனும் பெயரால் விளங்குகிறது என நம்பப்படுகிறது.
மகாபாரதக் குறிப்புகள்
[தொகு]மகாபாரதத்தில் ஒரு இடத்தில் மட்டும் ஒட்டர நாடு பற்றிய குறிப்பு உள்ளது. தருமராசன், இந்திரப்பிரஸ்தத்தில் நடத்திய இராசசூய வேள்வியின் போது, ஒட்டர நாட்டவர்களுடன், அங்கர்கள், வங்கர்கள், கலிங்கர்கள் மற்றும் பௌண்டரர்களும் கலந்து கொண்டு, தருமனுக்கு தங்கள் நாட்டிலிருந்து கொண்டு வந்த அரிய வகை பரிசுப் பொருட்களை வழங்கியதாக, மகாபாரதத்தின் 3-வது பருவமான சபா பருவத்தின், அத்தியாயம் 51-இல் கூறப்பட்டுள்ளது (மகாபாரதம் 3: 51).
இதனையும் காண்க
[தொகு]உசாத்துணை
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]